காணமல் போன கதை..

எத்தனை நாள் உழைப்பு .. இதற்காக தூக்கம் தொலைத்த நாட்கள் தான் எத்தனை.. அதற்காக அம்மாவிடமிருந்து எத்தனை முறை திட்டு வாங்கியிருப்பேன்.. எங்கே போயிருக்கும் ? எப்படி போயிருக்கும் ? யார் எடுத்திட்டு போயிருப்பா? இப்படி ஆயிரம் கேள்விகள் என்னுள் அலை அலையாய் ஓடிக்கொண்டிருக்கின்றன.

நேற்று இரவு தூங்க போகும் வேளையில் கூட பார்த்தேன் என் மேஜையின் மீது தான் இருந்தது. வைத்த பொருள் வைத்த இடத்தில் இல்லாமிலிருந்தால் யாரென்று பாராமல் திட்டி தீர்த்து விடுவதால் அறையை சுத்தம் செய்வதற்கு கூட அம்மா என் அறைக்குள் வருவதில்லை. என்னறையினுள் என்னனுமதியின்றி இரவு தூக்கத்தில் வரும் கனவை தவிர எவரும் வருவதில்லை. அப்படியே வந்தாலும் என் பார்வை படாமல் வெளியில் போக வழியுமில்லை.

ஆனால் என்னறைக்கு தைரியமாக வருவது அண்ணன் மகன் மட்டும் தான். போன வாரம் அவனுக்காக வாங்கி வந்த ஒரு முகமூடியை வைத்து அவனை பயமுறுத்தியதால் அந்த பக்கமே வருவதில்லை, அப்படியே வந்தாலும் அம்மா அல்லது பாட்டி துணையுடன் தான் வருவான். ஆகையால் அவனும் எடுத்திருக்க வாய்ப்பில்லை.

அம்மாவிடம் கேட்க்கலாம் என்றால் "என்னடா இன்னும் ஒரு பொறுப்பில்லாம நடக்குற ஒரு பொருளையே ஒழுங்கா வச்சுக்க தெரியல நீயெல்லாம் எப்படிடா வாழ்க்கையில முன்னுக்கு வரப்போறேன்னு" புராணம் பாட ஆரம்பித்து விடுவார்கள்.

அப்பாவிடம் கேட்க்கலாம் என்றால் என்னை திட்டுவதற்கு அவருக்கு ஒரு காரணம் கிடைத்தது போல ஒரு மாதத்திற்கு இதையே சொல்லி சொல்லி காண்பிப்பார். ஆகையால் அவரிடமும் கேட்க முடியாது.

போலீசிடம் சென்று புகார் தராலாம் !! ஆனால் கோர்ட் கேஸ் என்று மாதக்கணக்காக அலைய விடுவார்கள். போலீசுக்கு மாமூல், வக்கீலுக்கு பீஸ் என வட்டிக்கு பணம் எடுத்து தான் செலவு செய்ய வேண்டியிருக்கும். இதுவும் சரி பட்டு வராது.

பத்திரிகைகளில் விளம்பரம் தரலாமென்றால் அங்கும் செலவு அதிகம், அது மட்டுமல்லாமல் இது பற்றி பலருக்கு தெரிய வரும், முகமறியாத பலர் இதனை சொந்தமாக்க முனையலாம். நான் அதற்காக பட்ட கஷ்டங்கள் அவர்களுக்கு தெரியவும் வாய்ப்பில்லை. அதன் அருமையும் தெரியாது. ஆகவே பத்திரிக்கையும் வேண்டாம்.

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதற்காக யாரை பார்ப்பதென்றும் தெரியவில்லை.. நண்பர்களே இதோ உங்களிடமே சரணடைகிறேன்.

எங்கள் ஊர் கோவில் திருவிழாவில் நாளை நடக்கவிருக்கும் ராமாயணம் நாடகத்தில் அனுமார் வேடத்திற்காக நான் உருவாக்கிய "கதை"யை எங்கேனும், எவரேனும் வைத்திருப்பது பார்த்தீர்கள் என்றால் தெரியப்படுத்துங்கள்.

108 comments:

எஸ்.கே said...

நான் கூட பிஎஸ்வி வச்ச போட்டியில் காணாம போன கதைன்னு நினைச்சேன்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

நான் கூட பிஎஸ்வி வச்ச போட்டியில் காணாம போன கதைன்னு நினைச்சேன்!

//

அந்த போட்டிக்காக எழுதியது தான் இந்த கதையும்.. ஆனா கொஞ்சம் லேட்...

இளங்கோ said...

//நான் உருவாக்கிய "கதை"யை எங்கேனும், எவரேனும் வைத்திருப்பது பார்த்தீர்கள் என்றால் தெரியப்படுத்துங்கள். //

நான் அந்தக் கதைன்னு(சிறுகதை) நெனச்சேன்.

இது இந்தக் கதையா? :)

எஸ்.கே said...

அச்சச்சோ! ஜெயந்த் உங்க கதையை சோனியா காந்தி வச்சிருக்காங்க ஏதோ பெரிய விவகாரம்!!!!!
கதாயுதம்

Madhavan Srinivasagopalan said...

ராமாயணம் முடிஞ்ச துக்கப்புறம் வந்த மகாபாரத 'பீமன்' கிட்ட போயிடிச்சி அந்தக் 'கதை'.

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

அச்சச்சோ! ஜெயந்த் உங்க கதையை சோனியா காந்தி வச்சிருக்காங்க ஏதோ பெரிய விவகாரம்!!!!!
கதாயுதம்

//

அடங்கொக்க மக்கா.. இது அங்கே வரைக்கும் போயிருச்சா.. ஐயையோ இது பெரிய இடத்து விவகாரமாசே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

இளங்கோ said...

//நான் உருவாக்கிய "கதை"யை எங்கேனும், எவரேனும் வைத்திருப்பது பார்த்தீர்கள் என்றால் தெரியப்படுத்துங்கள். //

நான் அந்தக் கதைன்னு(சிறுகதை) நெனச்சேன்.

இது இந்தக் கதையா? :)

//

ஆமா.. ஆமா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Madhavan Srinivasagopalan said...

ராமாயணம் முடிஞ்ச துக்கப்புறம் வந்த மகாபாரத 'பீமன்' கிட்ட போயிடிச்சி அந்தக் 'கதை'.

//

இல்லையே இருக்காதே.. நாளைக்கு தான் ராமாயணம் நாடகம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தேவா அண்ணன் கிட்ட சொல்லி ரெண்டு பேருமா தேடுங்க

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தேவா அண்ணன் கிட்ட சொல்லி ரெண்டு பேருமா தேடுங்க
//

அவரு இப்போ வேற யாரையோ தேடுறாரு.. நேரமில்லையாம்..

Unknown said...

தமிழ்மணப் போட்டிக்காக யாராவது சுட்டிருக்கலாம்..

:-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

பதிவுலகில் பாபு said...

தமிழ்மணப் போட்டிக்காக யாராவது சுட்டிருக்கலாம்..

//

இப்படியெல்லாம் கூடவா திருடுவாங்க... bad பாய்ஸ்..

'பரிவை' சே.குமார் said...

நான் அந்தக் 'சிறு'கதை நெனச்சேன்.

இது இந்தக் கதையா?

Arun Prasath said...

இது என்ன? நல்லா இருக்குன்னு கமெண்ட் போடவா... அப்டினா எனக்கு கதை புரிஞ்சதுன்னு அர்த்தம்... என்ன பண்ண?

மாணவன் said...

//எங்கள் ஊர் கோவில் திருவிழாவில் நாளை நடக்கவிருக்கும் ராமாயணம் நாடகத்தில் அனுமார் வேடத்திற்காக நான் உருவாக்கிய "கதை"யை எங்கேனும், எவரேனும் வைத்திருப்பது பார்த்தீர்கள் என்றால் தெரியப்படுத்துங்கள்.//

சரிங்கண்ணே எல்லோரும் சேர்ந்து தேடிப் பார்ப்போம்...

ஹிஹிஹி...

Ramesh said...

நல்ல கதையா இருக்கே...

வெறும்பய: எப்படி நல்ல கதைங்கற.. அதை நீ பாத்தியா அப்ப நீதான் எடுத்தியா..

நான்: அச்சோ நான் இந்த கதை ஸ்டோரி நல்லாருக்கேன்னு சொன்னேங்க...

(இவரு தொலைச்சாலும் தொலைச்சாரு.. நாம மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி பேச வேண்டியதா இருக்கே)

ஹுஸைனம்மா said...

அவ்வ்வ்...

(தலைப்பைத் திருத்துங்க.. அப்புறம் யாராவது வந்து, தலைப்பைக் கூடத் தப்பில்லாம எழுதத் தெரியல, அப்புறம் ‘கதை’ எப்படி கிடைக்கும்னு சொல்லப் போறாங்க!!) :-))))

sathishsangkavi.blogspot.com said...

நல்ல கதையா இருக்கே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சே.குமார் said...

நான் அந்தக் 'சிறு'கதை நெனச்சேன்.

இது இந்தக் கதையா?

//

ஆமாங்க.. யார் எடுத்திட்டு போனாங்கன்னே தெரியல..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Arun Prasath said...

இது என்ன? நல்லா இருக்குன்னு கமெண்ட் போடவா... அப்டினா எனக்கு கதை புரிஞ்சதுன்னு அர்த்தம்... என்ன பண்ண?

//

நீ எப்படி வேணுமின்னாலும் போடலாம் ராசா.. உனக்கு முழு உரிமையும் இருக்கு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

சரிங்கண்ணே எல்லோரும் சேர்ந்து தேடிப் பார்ப்போம்...

ஹிஹிஹி...

//

கண்டிப்பா தேடனும் அதுக்கு தானே உங்க கிட்டே சொல்றேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிரியமுடன் ரமேஷ் said...

நல்ல கதையா இருக்கே...

வெறும்பய: எப்படி நல்ல கதைங்கற.. அதை நீ பாத்தியா அப்ப நீதான் எடுத்தியா..

நான்: அச்சோ நான் இந்த கதை ஸ்டோரி நல்லாருக்கேன்னு சொன்னேங்க...

(இவரு தொலைச்சாலும் தொலைச்சாரு.. நாம மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி பேச வேண்டியதா இருக்கே)

//

சோ நீங்க தான் எடுத்திருக்கீங்க.. உங்களுக்கு தெரியும் அப்படி தானே.. சரி இப்ப சொல்லுங்க.. எங்கே என்னோட கதை...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஹுஸைனம்மா said...

அவ்வ்வ்...

(தலைப்பைத் திருத்துங்க.. அப்புறம் யாராவது வந்து, தலைப்பைக் கூடத் தப்பில்லாம எழுதத் தெரியல, அப்புறம் ‘கதை’ எப்படி கிடைக்கும்னு சொல்லப் போறாங்க!!) :-))))

//

பரவயில்லக்கா நமக்கு கதை கிடச்சா போதும்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சங்கவி said...

நல்ல கதையா இருக்கே...

//

ஆமாங்க பாத்து பாத்து செஞ்சது..

பவள சங்கரி said...

அட ராமா........அனுமனோட கதையே போச்சா....நல்ல வேளை நாங்கூட கதையே தொலைஞ்சி போச்சோன்னு நினைச்சேன்........

எப்பூடி.. said...

அடுத்த படத்தின் சண்டைக்காட்சிக்காக டீ.ஆர் எடுத்திருக்கலாம், எதுக்கும் போனை போட்டு கேளுங்க

இம்சைஅரசன் பாபு.. said...

அட ராம என்னை ஏன் இந்த மாதிரி பசங்களோட கூடு சேர வைக்கிற .........அட குரங்கே ........குரங்கே ..............அதை ஏன் பதிவுலகுலே தேடுறே ............

இம்சைஅரசன் பாபு.. said...

//ஆனால் என்னறைக்கு தைரியமாக வருவது அண்ணன் மகன் மட்டும் தான். போன வாரம் அவனுக்காக வாங்கி வந்த ஒரு முகமூடியை வைத்து அவனை பயமுறுத்தியதால் அந்த பக்கமே வருவதில்லை,//

நீ ஏன் முக மூடி போட்டு பயங்காட்டனும் ....நீ சாதரணமாகவே உன் மூஞ்சிய பார்த்தாலே புள்ள பயந்துருமே

ராஜகோபால் said...

வெறும்பயலின் வில்லங்கம் கதைக்காக காவு வாங்க துடிக்கும் அனுமார் கதை.,

கண்டுபிடித்து தருபவர்களுக்கு சிரிப்பு போலிஸ் ஏற்பாடு பண்ணும் சொக்கத்தங்கம் அண்ணன் டாக்டிர் விஜயகாந்தின் விருத்தகிரி படத்தின் சிறப்பு காட்சிக்கு(கட்சிக்கும்) டிக்கட் இலவசம்.

இம்சைஅரசன் பாபு.. said...

உன் மூஞ்சிய கண்ணாடில பார்த்துட்டு .....இந்த குரங்கு பொம்மை என்ன விலை ன்னு கேட்ட வெறும்பய தானே நீங்க ..................

சௌந்தர் said...

சரி சரி இந்த நாட்டுலே தேடுற பசங்க அதிகம் ஆகிட்டாங்க பொய் கூகிள் தேடு

ஜெயந்த் கிருஷ்ணா said...

இம்சைஅரசன் பாபு.. said...

உன் மூஞ்சிய கண்ணாடில பார்த்துட்டு .....இந்த குரங்கு பொம்மை என்ன விலை ன்னு கேட்ட வெறும்பய தானே நீங்க ..................

//

ஏற்க்கனவே நமக்குள்ள ஒப்பந்தம் இருக்கு.. இப்படி பப்ளிக்ல அசிங்க படுத்த கூடாதுன்னு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

இம்சைஅரசன் பாபு.. said...

அட ராம என்னை ஏன் இந்த மாதிரி பசங்களோட கூடு சேர வைக்கிற .........அட குரங்கே ........குரங்கே ..............அதை ஏன் பதிவுலகுலே தேடுறே ............

//

டேய் அவனா நீ.. அப்படீன்னா நீ தான் எடுத்திருப்ப.. ஒழுங்கு மரியாதையா குடுத்திரு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

சரி சரி இந்த நாட்டுலே தேடுற பசங்க அதிகம் ஆகிட்டாங்க பொய் கூகிள் தேடு

//

இந்த கூகுள் எந்த பக்கம் இருக்கு நண்பா.. ஈரோடு பக்கமா,, தூத்துக்குடி பக்கமா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ராஜகோபால் said...

வெறும்பயலின் வில்லங்கம் கதைக்காக காவு வாங்க துடிக்கும் அனுமார் கதை.,

கண்டுபிடித்து தருபவர்களுக்கு சிரிப்பு போலிஸ் ஏற்பாடு பண்ணும் சொக்கத்தங்கம் அண்ணன் டாக்டிர் விஜயகாந்தின் விருத்தகிரி படத்தின் சிறப்பு காட்சிக்கு(கட்சிக்கும்) டிக்கட் இலவசம்.

//

இது கரக்ட்.. ஆனா எனக்கு விருத்தகிரி படம் டிக்கட் வேணாம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

எப்பூடி.. said...

அடுத்த படத்தின் சண்டைக்காட்சிக்காக டீ.ஆர் எடுத்திருக்கலாம், எதுக்கும் போனை போட்டு கேளுங்க

//

கேட்டுட்டேன் நண்பா.. அந்தாளு இப்போ கதையெல்லாம் யூஸ் பண்றதில்லையாம்.. ஒன்லி கை தானாம்..

அருண் பிரசாத் said...

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... நீயும் ஆரம்பிச்சுட்டியா....

ஜெயந்த் கிருஷ்ணா said...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அட ராமா........அனுமனோட கதையே போச்சா....நல்ல வேளை நாங்கூட கதையே தொலைஞ்சி போச்சோன்னு நினைச்சேன்........

//

ஆகா ஆகா பெருத்த ஏமாற்றம்... பெருத்த ஏமாற்றம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் said...

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... நீயும் ஆரம்பிச்சுட்டியா....

//

வேற வழி..

ராஜகோபால் said...

//வெறும்பய said...

இது கரக்ட்.. ஆனா எனக்கு விருத்தகிரி படம் டிக்கட் வேணாம்..//

நமக்கு இல்ல பாஸ் கண்டுபுடிச்சு குடுக்கறவங்களுக்கு., அப்டியே டாக்டர் விஜயின் காவலன்., தன்மான
பசுசிங்கம் ராமராஜனின் மேதை வருசாயா புக் பண்ணிடலாம்.

கண்டிப்பா கதை கிடைச்சிடும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதெல்லாம் ஒரு கம்ப்ளைன்டா...

தமிழ் உதயம் said...

"கதை" காணாமல் போன கதை. சரியா.

karthikkumar said...

என்கிட்டே சொல்லிடீங்கள்ள. விடுங்க நான் பாத்துக்கறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லா கத விடுறப்பா... கதைய யாரும் சுட முடியுமா?

வைகை said...

உங்க கதைய சுட்டுத்தான் வேலு பிரபாகரன் ஒரு காதல் கதை எடுத்தாரோன்னு நினச்சேன்!!!

Anonymous said...

அது விருதகிரி ஷூட்டிங் போய் இருந்தது..விஜயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அதுலதான் இந்த தடவை தாக்குறாராம்

pichaikaaran said...

பதிவுலகை கலக்கி வரும் எழுத்து திருட்டு அக்கப்போரோனு ஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன்

sakthi said...

நல்ல கதை தொடருங்கள் :))

Anonymous said...

அட ராமா........அனுமனோட கதையே போச்சா....நல்ல வேளை நாங்கூட கதையே தொலைஞ்சி போச்சோன்னு நினைச்சேன்....//
இரு..இரு..நீ எந்த கதைய சொல்ற..?

Anonymous said...

நல்ல கதை தொடருங்கள் :)//
மறுபடியுமா...அட..ராமா

Anonymous said...

51 வது கதை ச்சீ வடை

ராஜி said...

"கதை"யை காணோமினு உங்க நண்பர் சிரிப்புபோலிசுகிட்ட கம்ப்ளெய்ண்ட் கொடுக்க வேண்டியதுதான. அவரு பதிவுல இப்பதான் எதாவது பிரச்சனை னா தன்னைப்போல நேர்மையானனனன போலீஸ்கிட்ட போக சொல்லியிருக்காரு

Mathi said...

நீங்களும் மொக்கை போட ஆரம்பிச்சிடீங்களா ???

Chitra said...

இதே நல்ல கதையா இருக்கே!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அப்ப நீங்க நடிக்க முடியாதா... அப்பாடா அப்போ அறிவிப்பு செஞ்சுடலாம்... ஹலோ மைக் டெஸ்டிங்... என் இனிய தமிழ் மக்களே , எல்லாரும் தைரியமா நாடகம் பாக்க போகலாம்... மீ எஸ்கேப்...

Unknown said...

கதை கெடச்சா அதாலேயே அடிக்காம பாத்துக்கங்க...
மொக்க ஜோக் படிச்சிருக்கோம். இது புது வகை மொக்க கதை..

Unknown said...

//ராமாயணம் முடிஞ்ச துக்கப்புறம் வந்த மகாபாரத 'பீமன்' கிட்ட போயிடிச்சி அந்தக் 'கதை'.//
nice

ம.தி.சுதா said...

/////"கதை"யை எங்கேனும், எவரேனும் வைத்திருப்பது பார்த்தீர்கள் என்றால் தெரியப்படுத்துங்கள்.////

ஆமாம் கண்டிருக்கிறேன்...

ம.தி.சுதா said...

வெறும்பய என்றவரொட புளொக்கில இந்த அருமையான கதையை கொஞ்சம் முன்னாடி தான் படித்தேன்...

அன்பரசன் said...

/காணமல் போன கதை..//

என்ன ஆச்சு?? கெடைச்சுதா இல்லியா?

மோகன்ஜி said...

கதையக் காணமா? கதையா இருக்கே??

ஜெய்லானி said...

என்னது கதைய கானோமா ...? இதுவே நல்ல கதையா இருக்கே..!! ??

சுசி said...

கிடைச்சதும் ணங்னு ஒரு தட்டு உங்க தலை மேல :))

Unknown said...

வேணாம் அழுதுடுவேன்

ஆர்வா said...

நேத்துத்தான் ஏழைகளின் ஏணி, அல்லல்படுவோரின் ஆணி, மனிதர் குல சனி, சாரி மனிதர் குல மாணிக்கம், பிரவுன் சூரியன், இளையதளபதி டாக்டர் விஜய் தன்னுடைய அடுத்த படத்துக்கு உங்க கதைய வெச்சிகிட்டு இருக்கிறதா கேள்விப்பட்டேன். டக்குன்னு ஒரு கேஸை ஃபைல் பண்ணுங்க..

செல்வா said...

//எங்கள் ஊர் கோவில் திருவிழாவில் நாளை நடக்கவிருக்கும் ராமாயணம் நாடகத்தில் அனுமார் வேடத்திற்காக நான் உருவாக்கிய "கதை"யை எங்கேனும், எவரேனும் வைத்திருப்பது பார்த்தீர்கள் என்றால் தெரியப்படுத்துங்கள்//

நம்ம PSV அண்ணன் ப்ளாக் ல இருக்குது போய் எடுத்துகோங்க ..!!

சசிகுமார் said...

அருமை

Venkat Saran. said...

கதைலாம் எங்க property அத எப்படி நீங்க வச்சிருக்கலாம் அதான் நான் எடுத்துட்டு வந்துட்டேன் :)

Anonymous said...

எங்கள் ஊர் கோவில் திருவிழாவில் நாளை நடக்கவிருக்கும் ராமாயணம் நாடகத்தில் அனுமார் வேடத்திற்காக நான் உருவாக்கிய "கதை"யை எங்கேனும், எவரேனும் வைத்திருப்பது பார்த்தீர்கள்
என்றால் தெரியப்படுத்துங்கள்///

நடவடிக்கை எடுக்கபடும் சகோ
ஒரு வேல செல்வா வடை னு கதைய தூக்கிடரோ ...

தினேஷ்குமார் said...

கண்டிப்பா கதை கிடைச்சா வட வாங்கத் தான் செல்வா வருவாரு கதையெல்லாம் தூக்க மாட்டாரு சரி ஒரு டவுட்டு நண்பரே
ஹனுமானின் கதாயுதமும் கதை என்றே அழைக்கப்படும் இப்ப சொல்லுங்க எதை துளைத்தீர்

சரி சரி கட பக்கம் வாங்க சூடா காப்பி சாப்பிடலாம்

சிவகுமாரன் said...

என்னது கதையை காணோமா /
கூகுள்ள தேடி பாத்தீங்களா ?

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க ஒண்ணும் கதை விடலையே

ரஹீம் கஸ்ஸாலி said...

அப்படியே நம்ம கடைப்பக்கம் வாங்க.... ஒரு போட்டி வச்சுருக்கேன்
http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html

மகேஷ் : ரசிகன் said...

புதுசு புதுசா யோசிக்கறாங்கப்பா.

ராஜி said...

அடி ஆத்தி நல்ல "கதை"யா ல்ல இருக்கு. உங்க நண்பர் சிரிப்பு போலீசுக்கிட்ட சொல்ல வேண்டியதுதான. "விருதகிரி"க்கிட்ட சொல்லி வெளிய யாருக்கும் தெரியாம கண்டுபிடிச்சு கொடுத்துடுவார் இல்ல.

Unknown said...

//நேத்துத்தான் ஏழைகளின் ஏணி, அல்லல்படுவோரின் ஆணி, மனிதர் குல சனி, சாரி மனிதர் குல மாணிக்கம், பிரவுன் சூரியன், இளையதளபதி டாக்டர் விஜய் தன்னுடைய அடுத்த படத்துக்கு உங்க கதைய வெச்சிகிட்டு இருக்கிறதா கேள்விப்பட்டேன். டக்குன்னு ஒரு கேஸை ஃபைல் பண்ணுங்க..//

தல தளபதி said...

:-)

Asiya Omar said...

மொக்கையாக கதை கூட எழுத ஆரம்பிச்சாச்சா?அருமை.

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதெல்லாம் ஒரு கம்ப்ளைன்டா...

//

கண்டுபிடிக்க முடியுமா.. .. முடியாதா,...

ஜெயந்த் கிருஷ்ணா said...

தமிழ் உதயம் said...

"கதை" காணாமல் போன கதை. சரியா.

//

அதே தான்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அது விருதகிரி ஷூட்டிங் போய் இருந்தது..விஜயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அதுலதான் இந்த தடவை தாக்குறாராம்

//

புதுசா இருக்கே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

karthikkumar said...

என்கிட்டே சொல்லிடீங்கள்ள. விடுங்க நான் பாத்துக்கறேன்
//

அது போதும் தலைவா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லா கத விடுறப்பா... கதைய யாரும் சுட முடியுமா?

//

எனக்கு உங்க மேல தான் சந்தேகம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பார்வையாளன் said...

பதிவுலகை கலக்கி வரும் எழுத்து திருட்டு அக்கப்போரோனு ஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன்

//

ஹி ஹி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Blogger sakthi said...

நல்ல கதை தொடருங்கள் :))

//

நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ராஜி said...

"கதை"யை காணோமினு உங்க நண்பர் சிரிப்புபோலிசுகிட்ட கம்ப்ளெய்ண்ட் கொடுக்க வேண்டியதுதான. அவரு பதிவுல இப்பதான் எதாவது பிரச்சனை னா தன்னைப்போல நேர்மையானனனன போலீஸ்கிட்ட போக சொல்லியிருக்காரு

//

அது ஒரு டுபாக்கூரு போலீசு.. வேலைக்காக மாட்டாரு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Mathi said...

நீங்களும் மொக்கை போட ஆரம்பிச்சிடீங்களா ???

//

சும்மா முயற்சி பண்ணுவோமேன்னு தான்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Chitra said...

இதே நல்ல கதையா இருக்கே!

//

ஆமாங்க ரொம்ப நல்ல கதை...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அப்பாவி தங்கமணி said...

அப்ப நீங்க நடிக்க முடியாதா... அப்பாடா அப்போ அறிவிப்பு செஞ்சுடலாம்... ஹலோ மைக் டெஸ்டிங்... என் இனிய தமிழ் மக்களே , எல்லாரும் தைரியமா நாடகம் பாக்க போகலாம்... மீ எஸ்கேப்...

//

ஏன்னா ஒரு கொலை வெறி... எப்படியோ சந்தோசமா இருங்க..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பாரத்... பாரதி... said...

கதை கெடச்சா அதாலேயே அடிக்காம பாத்துக்கங்க...
மொக்க ஜோக் படிச்சிருக்கோம். இது புது வகை மொக்க கதை..

//

புதுசு புதுசா யோசிப்போமில்ல...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ம.தி.சுதா said...

வெறும்பய என்றவரொட புளொக்கில இந்த அருமையான கதையை கொஞ்சம் முன்னாடி தான் படித்தேன்...

//

எங்கையாவது பார்த்தா சொல்லுங்க தல..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அன்பரசன் said...

/காணமல் போன கதை..//

என்ன ஆச்சு?? கெடைச்சுதா இல்லியா?

//

இல்லையே நண்பா....

ஜெயந்த் கிருஷ்ணா said...

மோகன்ஜி said...

கதையக் காணமா? கதையா இருக்கே??

//

ஆமாண்ணா.. எங்கையாவது பார்த்தா சொல்லுங்க..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜெய்லானி said...

என்னது கதைய கானோமா ...? இதுவே நல்ல கதையா இருக்கே..!! ??

//

முடிஞ்சா தேடி கண்டுபிடிச்சு குடுங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சுசி said...

கிடைச்சதும் ணங்னு ஒரு தட்டு உங்க தலை மேல :))

//

ஏன்.. ஏன் இந்த கொலை வெறி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

விக்கி உலகம் said...

வேணாம் அழுதுடுவேன்

//

ஓகே ஓகே ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

கவிதை காதலன் said...

நேத்துத்தான் ஏழைகளின் ஏணி, அல்லல்படுவோரின் ஆணி, மனிதர் குல சனி, சாரி மனிதர் குல மாணிக்கம், பிரவுன் சூரியன், இளையதளபதி டாக்டர் விஜய் தன்னுடைய அடுத்த படத்துக்கு உங்க கதைய வெச்சிகிட்டு இருக்கிறதா கேள்விப்பட்டேன். டக்குன்னு ஒரு கேஸை ஃபைல் பண்ணுங்க..

//

அந்த பையன் இன்னும் திருட்டு தொழிலை விடலையா.. இதோ போறேன்..

தகவலுக்கு நன்றிங்கோ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

செல்வா = வடை வ(வா)ங்கி said...

//எங்கள் ஊர் கோவில் திருவிழாவில் நாளை நடக்கவிருக்கும் ராமாயணம் நாடகத்தில் அனுமார் வேடத்திற்காக நான் உருவாக்கிய "கதை"யை எங்கேனும், எவரேனும் வைத்திருப்பது பார்த்தீர்கள் என்றால் தெரியப்படுத்துங்கள்//

நம்ம PSV அண்ணன் ப்ளாக் ல இருக்குது போய் எடுத்துகோங்க ..!!

//

அது பழைய கதை.. என்னோட கதை புதுசு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சசிகுமார் said...

அருமை

//

nantri nanpare..

ஜெயந்த் கிருஷ்ணா said...

கல்பனா said...

நடவடிக்கை எடுக்கபடும் சகோ
ஒரு வேல செல்வா வடை னு கதைய தூக்கிடரோ ...

//

சீ சீ நல்ல பையன்.. அவன் அப்படியெல்லாம் பண்ண மாட்டான்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

dineshkumar said...

கண்டிப்பா கதை கிடைச்சா வட வாங்கத் தான் செல்வா வருவாரு கதையெல்லாம் தூக்க மாட்டாரு சரி ஒரு டவுட்டு நண்பரே
ஹனுமானின் கதாயுதமும் கதை என்றே அழைக்கப்படும் இப்ப சொல்லுங்க எதை துளைத்தீர்

//

நான் சுருக்கமா சொன்னேன் தல..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சிவகுமாரன் said...

என்னது கதையை காணோமா /
கூகுள்ள தேடி பாத்தீங்களா ?

//

அவங்க கிட்டே இருக்குமா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க ஒண்ணும் கதை விடலையே

//

சத்தியமா உண்மைய தானுங்க சொல்றேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மகேஷ் : ரசிகன் said...

புதுசு புதுசா யோசிக்கறாங்கப்பா.

//

ஹி ஹி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ராஜி said...

அடி ஆத்தி நல்ல "கதை"யா ல்ல இருக்கு. உங்க நண்பர் சிரிப்பு போலீசுக்கிட்ட சொல்ல வேண்டியதுதான. "விருதகிரி"க்கிட்ட சொல்லி வெளிய யாருக்கும் தெரியாம கண்டுபிடிச்சு கொடுத்துடுவார் இல்ல.

//

அவரு யாருங்க பெரிய ஆபீசரா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

தல தளபதி said...

:-)

//

thanks for comming

ஜெயந்த் கிருஷ்ணா said...

asiya omar said...

மொக்கையாக கதை கூட எழுத ஆரம்பிச்சாச்சா?அருமை.

//

முயற்சி பண்ணி பக்கக்லாமேன்னு தான்,, வருகைக்கு நன்றி சகோதரி..

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லா இண்ட்ரெஸ்டிங்கா எழுதியிருக்காரேன்னு ஆவலா படிச்சுட்டு வந்தா கடைசியில மொக்கையாக்கிட்டீங்களே ஜெ..

கதைக்கு பதிலாக நல்ல குணம் கெட்ட குணம்னு ரெண்டு பார்ட்ட மாத்தி மாத்தி யூஸ் பண்றார்ன்னும் (அந்நியன் ஸ்டைல்) நல்ல குணத்தை தேடற மாதிரி கூட ட்ரை பண்ணியிருக்கலாம்... :(

சீக்கிரமா விறுவிறுப்பான ஒரு ஸ்டோரி எதிர்பார்த்திட்டே இருப்பேன்...