சமகால கல்வி முறை ஒரு பார்வை...!

அன்னைக்கும், தந்தைக்கும் பின் நாம் மதிப்பது கல்வி கற்று கொடுக்கும் குருவை தான். ஆனால் அந்த குருக்கள் மிதிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர். இன்று கல்வி நிலையங்களில் தான் பல அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன. ஆசிரியர் மாணவியர்களிடம் முறை கேடாக நடந்து கொண்டார் என்றும், மாணவிகள் தற்கொலை என்றும் வாரத்திற்க்கொருமுறை செய்தி தாள்களில் வருமளவிற்கு வந்து விட்டது நிலை. மேலும் மாணவ மாணவியரை அடித்து துன்புறுத்துவது, தகாத வார்த்தைகளாலும் காயப்படுத்துவது மட்டுமல்லாமல் படிக்க வரும் மாணவ மாணவியரைக் கொண்டு பள்ளிக்கூடத்திலுள்ள வேலைகளை செய்ய வைப்பது போன்ற பல கொடுமைகள் நடந்து வருகின்றன. இப்பொழுது இதற்கும் ஒரு படி மேல் சென்று தன்னிடம் பயிலும் மாணவ மாணவியரை கொண்டு தங்கள் வீட்டு வேலைகளை செய்ய வைக்குமளவிற்கு முன்னேறி இருக்கின்றனர் பல ஆசிரியர்கள். பிள்ளைகள் பெற்றோர்களிடம் இருக்கும் நேரத்தை விட ஆசிரியர்கள் கவனிப்பில் இருக்கும் நேரம் தான் அதிகம், பெற்றோர்களுக்கு சமமாக மதிக்கப்படும் ஆசிரியர் பெருந்தகைகள் இப்படி தவறு செய்தால் பெற்றோர்கள் எந்த தைரியத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள் ?.

இது போன்ற காரணங்களால் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்க விரும்பினாலும் அவர்களால் முடிவதில்லை. காரணம் பணம். அங்கே பணம் தான் தான் பிரதானம். இன்றைய சூழலில் ஒரு சாமானியன் தன் குழந்தையை தனியார் பள்ளியில் சேர்ப்பது என்பது அவனுக்கு பகல் கனவு தான்.. அப்படியே எப்பாடு பட்டாவது சேர்த்துவிட்டாலும் மாதா மாதம் அதற்கு இதற்கு என்று காரணமே இல்லாமல் வசூலித்துவிடுவார்கள். மேலும் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வேண்டுமானால் தாயும் தந்தையும் கட்டாயம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அப்படிஎன்றால் தன் குழந்தைக்கு நல்ல கல்வி கொடுத்து எப்படியாவது பெரிய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என நினைக்கும் ஏழை பெற்றோர்களின் நிலை ?. இது போன்ற பல காரணங்களால்படிப்பு என்பது ஏழைக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

இது ஒருபுறமிருக்க படிக்கும் பிஞ்சுகளின் நிலையோ இன்னும் மோசமானது. வீட்டில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என பாசங்களின் அரவணைப்பில் இருக்க வேண்டிய குழந்தைகளை இரண்டரை வயதிலையே பள்ளியில் சேர்த்துவிடுகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அந்த பிஞ்சுகளை விடுமுறை நாட்க்களில் கூட நிம்மதியாக விளையாட விடாமல் பாட்டு, டான்ஸ், ஸ்போர்ட்ஸ் என பிழிந்து எடுத்து விடுகிறார்கள். இவற்றை முழு மனதோடு கற்றுகொள்ளும் அளவிற்கு அந்த குழந்தைகள் பக்குவபட்டிருக்க மாட்டார்கள். அந்த குழந்தைகளை பார்க்கவே பாவமாக இருக்கும். அவர்களின் மழலை பேச்சும், செய்யும் குறும்பும் இதை விட்டால் எப்போது நம்மால் ரசிக்க முடியும். ஆகையால் பெற்றோர்களே குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள்.


இன்றைய பெரும்பாலான படிப்புகள் வெறும் சான்றிதழ்கள் எனும் காகிதங்களுகாக மட்டும் தான் நம் கையில் உள்ளது. மாணவர்களும் ஏதாவது படித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் தான் படிக்கின்றனர். அப்படியே படித்தாலும் அவர்கள் அந்த படிப்பு சமந்தப்பட்ட வேலையில் தான் இருக்கிறார்களா என்றால் 90 % இல்லை என்று தான் கூற முடியும்.. உதாரணத்திற்கு நான் பணிபுரியும் நிறுவனத்தில் MSC computer science படித்த நண்பர் ஒருவர் செய்யும் வேலை Data Entry. இன்னொருவர் படித்தததோ Teacher Training ஆனால் அவர் செய்வதோ Welding வேலை. இது போன்று தான் படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் சம்மந்தமே இல்லாமல் ஓன்று ரெண்டல்ல எண்ணி சொல்ல முடியாத அளவிற்கு நம்மவர்கள் மகிழ்ச்சியை விற்று, குடும்பம் மறந்து வெளிநாடுகளில் உள்ளனர். காரணம் படித்த படிப்பிற்கு சொந்த நாட்டில் மதிப்பில்லை, அதற்க்குண்டான வேலை வாய்ப்புகளும் இல்லை. அப்படியே ஏதாவது வேலைகள் கிடைத்தாலும் அதற்குரிய ஊதியம் கிடைப்பதில்லை. ஒருவர் 10000/- ரூபாய்க்கு வேலை செய்ய தயாராக இருந்தால் இன்னொருவர் 8000/- ரூபாய்க்கு தயார், வேறொருவர் 5000/- ரூபாய்க்கு வேலை செய்யவும் தயாராக இருக்கிறார். படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது வேலைவாய்ப்புகள் இல்லாமல் போகிறது. படித்த படிப்பிற்கு மதிப்பும் கிடைப்பதில்லை. இது போன்ற காரணங்களால் எந்த வேலையானாலும் சரி என்று வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள் பலர்..

இந்தியாவின் தென் கோடியிலுள்ள கன்னியாகுமரியை அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. கல்விக்கு பஞ்சமில்லாத ஒரு மாவட்டம். அங்குள்ள கல்வி நிறுவனங்களை எளிதில் எண்ணி கூறமுடியாது. அந்த அளவிற்கு ஒவ்வொரு வருடமும் அதிகமாகி கொண்டே தான் செல்கிறது, அங்கே இல்லாத துறைகளே இல்லை எனலாம். நானறிந்து அங்கே இல்லாதது Marine சமந்தப்பட்ட படிப்புகள் மட்டுமே. அது போன்றே அங்குள்ள 90% பேர் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருப்பார்கள் ஆனால் இவர்களில் ஒரு சிலரை தவிர எவரும் படிப்பிற்குரிய வேலையை எதிபார்ப்பது கூட இல்லை. படித்த படிப்பு ஒருபக்கம் இருக்கட்டும் என்று சொந்தமாக ஏதாவது தொழில் தொடக்கி விடுவார்கள், பெரும்பாலானோருக்கு படித்து வாங்கிய பட்டங்கள் பெயருக்கு பின்னால் போட்டு அழகு பார்ப்பதற்கே பயன்படுகிறது. சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் "ஏன் BE யோடு நிறுத்தி விட்டாய் ME சேர்ந்திருக்கலாமே" என்று கேட்டதற்கு அவர் "எப்படியும் இந்த படிப்பை கொண்டு நான் எந்த வேலைக்கும் போகப்போறதில்லை கல்யாணம் செய்வதற்கு இந்தபடிப்பு போதுமானது" என்று கூறினார். இது தான் இன்றைய உண்மை நிலையும் கூட. பட்டம் வாங்குவது திருமணம் என்ற பெயரில் அதிகமாக வரதட்சணை வாங்குவதற்கும், சுய மதிப்பிற்க்காகவும் மற்றும் வேறு சில லாபங்களுக்காகவும் என்பது தான் வேடிக்கை.

இன்றைய இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எப்போதும் பிரச்சனைக்குரிய விசயமாக இருப்பது ஜாதி மத பிரச்சனைகள் தான். "ஜாதி இரண்டொழிய வேறில்லை என்ற பாரதியின் வாக்கை பொய்யாக்கிவிட்டு" எங்கும், எதிலும் ஜாதி மதம் என்ற நிலையை கொண்டுவந்துவிட்டார்கள் நம் நாட்டு அரசியல்வாதிகள். இது போன்ற ஜாதி மத பிரச்சனைகளுக்கு அடிக்கல் நாட்டுமிடம் சில பள்ளிகளும் கல்லூரிகளும் தான். ஒவ்வொரு ஜாதி மதத்தினருக்கும் தனித் தனி பள்ளி கல்லூரிகள் இருக்கின்றன. இது போன்ற கல்வி நிறுவனங்களில் அந்தந்த ஜாதி மதத்தினருக்கு தான் முன்னுரிமை அளிக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் ஒரு சில ஆசிரியர்கள் மாணவ, மாணவியரின் உள்ளத்தில் சிறு வயதுகளிலேயே ஜாதி மத உணர்வுகளை விதைத்து விடுகிறார்கள். மேலும் கல்லூரிகளில் மாணவர்கள் ஜாதி மத பேதமின்றி ஒற்றுமையாக இருந்தாலும் கல்லூரி நிர்வாகிகள் அவர்களுக்கிடையில் வேற்றுமைகளை விதைப்பதுண்டு. (இது போன்றொரு சம்பவம் நான் பயின்ற கல்லூரியில் நடந்தது.) இது போதாதென்று ஜாதிகளே வேண்டாம் எனும் அரசாங்கமே ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டது. இந்தியாவில் ஏற்ப்படும் பல ஜாதிக் கலவரங்களுக்கு மறைமுகமாக அரசாங்கமும், ஆசிரியர்களும் தான் காரணமாக இருக்கின்றனர்.




74 comments:

Mathi said...

me the firsttt

Arun Prasath said...

adada

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

எஸ்.கே said...

//குருக்கள் மிதிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.//
ஜெயந்த் என்ன இது:-)))

Arun Prasath said...

சூப்பர்...
(template பின்னூட்டம் போடுவோர் சங்கம்)

எஸ்.கே said...

ஆனா மாணவர்களை பிழிய பிழிய படிக்கச் சொல்லி கொடுமை செய்வது வேதனைதான்!

சௌந்தர் said...

online.

ஜெயந்த் கிருஷ்ணா said...

Mathi said...

me the firsttt

//

வாங்க.. வாங்க..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Arun Prasath said...

adada

//

என்ன ராசா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

//

அண்ணா இதுக்கு என்ன அர்த்தம்..?

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

//குருக்கள் மிதிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.//
ஜெயந்த் என்ன இது:-)))

//

அனைவருமில்லை நண்பரே.. ஒரு சிலரே..

எஸ்.கே said...

படிச்சது ஒன்று வேலை ஒன்று நிறைய பேரின் நிலை இது!

ஜெயந்த் கிருஷ்ணா said...

Arun Prasath said...

சூப்பர்...
(template பின்னூட்டம் போடுவோர் சங்கம்)

//

அப்படியே ஓடிப்போயிடு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

ஆனா மாணவர்களை பிழிய பிழிய படிக்கச் சொல்லி கொடுமை செய்வது வேதனைதான்!
//

உண்மை தான் நண்பரே...

எஸ்.கே said...

மிகவும் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்!
பெரும்பாலும் ஏற்படுகிற பிரச்சினைகள்தான் இவை!

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

online.

//

எலேய் நம்ம கிட்டயேவா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

படிச்சது ஒன்று வேலை ஒன்று நிறைய பேரின் நிலை இது!

//

ஏறக்குறைய என் நிலையும் இது தான்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

மிகவும் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்!
பெரும்பாலும் ஏற்படுகிற பிரச்சினைகள்தான் இவை!

//

நன்றி நண்பரே..

சௌந்தர் said...

எல்லாம் தெளிவா சொல்லி இருக்கே நண்பா

சௌந்தர் said...

வெறும்பய said... 16
சௌந்தர் said...

online.

//

எலேய் நம்ம கிட்டயேவா..//

sorry sir offline

karthikkumar said...

ONLINE

karthikkumar said...

அன்பின் ஜெயந்த் சோக்கா எழுதிக்கீர. நைனா

ADMIN said...

//ஆசிரியர் மாணவியர்களிடம் முறை கேடாக நடந்து கொண்டார் என்றும்,//வெட்க்க் கேடானது, வேதனைப்படக்கூடிய விஷயம்..! மிகச் சிறப்பாக பதிவிட்டிருக்கிறீர்கள்..! நன்றி! வாழ்த்துக்கள்..!

Arun Prasath said...

அப்படியே ஓடிப்போயிடு..//

முடியாது முடியாது... உக்காந்திருக்கேன்..

சௌந்தர் said...

வெறும்பய said... 10
நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

//

அண்ணா இதுக்கு என்ன அர்த்தம்..?///

ம் சொன்ன அதற்கு நிறைய அர்த்தம் இருக்கு நண்பா

மாணவன் said...

//"எப்படியும் இந்த படிப்பை கொண்டு நான் எந்த வேலைக்கும் போகப்போறதில்லை கல்யாணம் செய்வதற்கு இந்தபடிப்பு போதுமானது" என்று கூறினார். இது தான் இன்றைய உண்மை நிலையும் கூட. பட்டம் வாங்குவது திருமணம் என்ற பெயரில் அதிகமாக வரதட்சணை வாங்குவதற்கும், சுய மதிப்பிற்க்காகவும் மற்றும் வேறு சில லாபங்களுக்காகவும் என்பது தான் வேடிக்கை.//

இதுதான் இப்போது அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது

தெளிவாகவும் சிறப்பாகவும் பதிவு செய்துள்ளீர்கள் அருமை

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அண்ணே

தொடரட்டும் உங்கள் பணி

அருண் பிரசாத் said...

//எஸ்.கே said... 12

படிச்சது ஒன்று வேலை ஒன்று நிறைய பேரின் நிலை இது!//
90% அதுதான் நிஜம்

மாணவன் said...

அண்ணே நாம எப்ப நேர்ல சந்திக்கலாம்...

தொடர்புக்கு:
simbuthirukkonam@gmail.com
ph:85335035
:83452798

sathishsangkavi.blogspot.com said...

Good Post.......

nis said...

//இது மட்டுமல்லாமல் ஒரு சில ஆசிரியர்கள் மாணவ, மாணவியரின் உள்ளத்தில் சிறு வயதுகளிலேயே ஜாதி மத உணர்வுகளை விதைத்து விடுகிறார்கள்//
கவலையான விடயம் தான் :(

rvelkannan said...

நல்லாயிருக்கு கட்டுரை
நல்லதோர் பார்வையும் நண்பரே

Unknown said...

நல்லதோர் பார்வை நண்பா! :-)

VELU.G said...

நல்ல பதிவு நண்பரே

செல்வா said...

//இப்பொழுது இதற்கும் ஒரு படி மேல் சென்று தன்னிடம் பயிலும் மாணவ மாணவியரை கொண்டு தங்கள் வீட்டு வேலைகளை செய்ய வைக்குமளவிற்கு முன்னேறி இருக்கின்றனர்//

இது முதல்ல இருந்தே இருக்குங்க ..!!

செல்வா said...

//நாட்க்களில் கூட நிம்மதியாக விளையாட விடாமல் பாட்டு, டான்ஸ், ஸ்போர்ட்ஸ் என பிழிந்து எடுத்து விடுகிறார்கள்.//

இத இத தான் நான் பெற்றோர்களின் தப்பு அப்படின்னு சொன்னேன் ..!!

செல்வா said...

//இது போதாதென்று ஜாதிகளே வேண்டாம் எனும் அரசாங்கமே ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டது//

ஹி ஹி ஹி .. அப்பத்தானே என் ஜாதி ஒட்டு இவ்ளோ இருக்கு அப்டின்னு விலை பேச முடியும்

Anonymous said...

நல்ல தெளிவான அலசல்

ஹுஸைனம்மா said...

வேதனையான விஷயங்கள். கல்வித் திட்டம் நெறிப்படுத்தப் பட்டால்தான் எதிர்காலம் வளமாகும்.

Anonymous said...

ஹி ஹி ஹி .. அப்பத்தானே என் ஜாதி ஒட்டு இவ்ளோ இருக்கு அப்டின்னு விலை பேச முடியும்//
ம்ம்..பேரம் பேசத்தான் ஜாதி காப்பாற்றப்படுகிறதோ

ம.தி.சுதா said...

இடையிடையே இப்படியான சமூகப்பதிவுகள் வாசிக்க்கிடைப்பதில் சந்தோசமே...

எப்பூடி.. said...

நல்லாயிருக்கு.

வைகை said...

ம்ம்ம்ம்...... நடத்துங்க! நடத்துங்க!!

வைகை said...

நம்முடைய கேள்விகளுக்கு என்றுமே விடைகிடைப்பதில்லை

Kousalya Raj said...

//பல ஜாதிக் கலவரங்களுக்கு மறைமுகமாக அரசாங்கமும், ஆசிரியர்களும் தான் காரணமாக இருக்கின்றனர்.//

அங்கிருந்து தான் தனது ஜாதி என்ன என்பதே பல மாணவர்களுக்கு தெரிய வருகிறது. நல்ல முக்கியமான ஆதங்கத்தை எடுத்து வைத்துள்ளீர்கள்...

பகிர்வுக்கு நன்றி

அன்பரசன் said...

அருமையான அலசல் நண்பா...

arasan said...

நல்ல பதிவு தொடரட்டும் தங்களின் மேலான பணி

Anonymous said...

அருமையான அலசல்

மோகன்ஜி said...

யதார்த்த நிலையை நன்றாக அலசியிருக்கிறீர்கள் ! ரசித்தேன்!

எண்ணங்கள் 13189034291840215795 said...

சொல்ல முடியாத அளவிற்கு நம்மவர்கள் மகிழ்ச்சியை விற்று, குடும்பம் மறந்து வெளிநாடுகளில் உள்ளனர். காரணம் படித்த படிப்பிற்கு சொந்த நாட்டில் மதிப்பில்லை, அதற்க்குண்டான வேலை வாய்ப்புகளும் இல்லை.//


நிஜம்தான்...

Chitra said...

very well-written.

Ramesh said...

எஸ்.கே said...

//குருக்கள் மிதிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.//
ஜெயந்த் என்ன இது:-)))//

//அனைவருமில்லை நண்பரே.. ஒரு சிலரே..//

ஒரு சிலர் அல்ல நண்பரே பலர் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள்..

//இது மட்டுமல்லாமல் ஒரு சில ஆசிரியர்கள் மாணவ, மாணவியரின் உள்ளத்தில் சிறு வயதுகளிலேயே ஜாதி மத உணர்வுகளை விதைத்து விடுகிறார்கள்//

நான் என்னுடைய கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் ஒரு வருடம் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியராகப் பணியாற்றினேன். அங்கே எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மிகவும் அதிர்ச்சியானதாகவே இருந்தது.

பலவிதமான மாணவர்களை நான் அங்கு சந்தித்தேன்

சில மாணவர்கள் மிக நன்றாகப் படித்தனர். ஆனால் மற்றவர்களை மதித்து நடப்பது எப்படி எனத் தெரியாதவர்களாக இருந்தார்கள்.

சில மாணவர்கள் நல்ல நடத்தைக் கொண்டவர்களாகவும் ஆனால் தாழ்வு மனப்பான்மை காரணமாக படிப்பில் சிறக்காதவர்களாக இருந்தனர் (இத்தகைய மாணவர்கள் தான் அதிகம்)

சில் மாணவர்கள் நன்றாக படித்தாலும் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார்கள்.

இதில் முதல் இரண்டு வகை மாணவர்களுமே திருத்தப்படவேண்டியவர்கள் எனக் கருதினேன்.. அதனால் அத்தகைய மாணவர்களைக் கண்டறிந்து அவ்வப்போது அவர்களை ஒவ்வொருவராக தனித்தனியாக என் அறைக்கு அழைத்து அறிவுரைகள் கூறி வந்தேன். அவர்களிடம் அதற்கேற்ற மாற்றமும் தெரிந்தது. ஆனால் இதனைக் கவனித்துக் கொண்டிருந்த ஆசிரியர்களில் பலர்... ஏன் சார் இவனுங்களுக்கெல்லாம் போய் இப்படி நேரத்தை வீனடிக்கிறீர்கள் என்றனர். இன்னும் சிலர்... அவன் நல்லா படிச்சாலும் அவன் ஜாதிப்பெயரைக் குறிப்பிட்டு.. அந்த ஜாதிப் பையன் சார் அவனை எல்லாம் மதிச்சி பேசிட்டிருக்கீங்க.. என்று கேட்டுவிட்டு பின்னர் அந்த ஆசிரியரே சில மாணவர்கள் பெயரைக் குறிப்பிட்டு (மற்றொரு பாடத்திற்கு அதே வகுப்பிற்கு செல்லும் ஆசிரியர்) இவனுங்க எல்லா நம்ம பசங்க சார் நல்லா கவனிச்சுக்குங்க என்றார்...

விசாரித்ததில் அவர் கூறிய மாணவர்கள் எல்லாம் அந்த ஆசிரியரின் ஜாதிக்காரர்கள் என்பது தெரிந்தது... இன்னும் விசாரித்ததில்... அந்தப் பகுதி அந்த ஆசிரியரின் ஜாதிக்காரர்கள் நிறைந்த பகுதி அதனாலேயே அந்த ஜாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் அந்தப் பள்ளிக்கு விருப்பத்துடன் மாற்றல் வாங்கி வந்திருக்கிறார்கள் என்ற விவரம் தெரிந்து... மிகவும் அதிர்ந்தேன்...

மாதா, பிதா, குரு பின்னர்தான் தெய்வம்... ஆனால் ஆசிரியர்களுக்கும் குருக்களுக்கும் நிறையே வேறுபாடு இருக்கிறது..

Ramesh said...

நல்ல பதிவு ஜெயந்த்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆழமான கருத்துக்கள் கொண்ட நல்ல பதிவு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

offline

NaSo said...

மச்சி நல்லா சொல்லிருக்கே.

NaSo said...

மிதிக்க வேண்டிய குருக்கள் நிறையவே இருக்கிறார்கள் மச்சி.

சுசி said...

நல்ல பதிவு ஜெயந்த்..

http://rkguru.blogspot.com/ said...

ஒருவர் 10000/- ரூபாய்க்கு வேலை ///செய்ய தயாராக இருந்தால் இன்னொருவர் 8000/- ரூபாய்க்கு தயார், வேறொருவர் 5000/- ரூபாய்க்கு வேலை செய்யவும் தயாராக இருக்கிறார். படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது வேலைவாய்ப்புகள் இல்லாமல் போகிறது. படித்த படிப்பிற்கு மதிப்பும் கிடைப்பதில்லை.///

உண்மைதான் நல்ல பதிவு....வாழ்த்துகள்

இந்துமதி.சி.பா said...

நல்ல ஒரு அலசல். தெளிவாக இன்றைய பிரச்சனைகளை பதிவிட்டுள்ளீர்கள்.
ஆனால் இதற்கான தீர்வு?



@ பின்னூட்டம் போடுவோர்
பின்னூட்டம் போடும்போது நானும் வந்தேன் படிச்சேன் அப்படின்னு இல்லாம நல்ல பதிவுகள்-ல உங்களுடைய பங்கையும் முடிந்தவரை அளிக்கலாம் அல்லவா?
இது என்னுடைய கருத்து. பிடித்து இருந்தால் பின்பற்றுங்கள். இல்லை என்றால் விட்டு விடுங்கள். இதற்கு மொக்கையாக இன்னும் பல பின்னூட்டங்களை இட்டு பதிவின் வீரியத்தை கெடுத்துவிடாதீர்கள்.

சசிகுமார் said...

அருமையான பயனுள்ள பதிவு நண்பா

ரஹீம் கஸ்ஸாலி said...

http://ragariz.blogspot.com/2010/12/how-to-get-vadai.html

Unknown said...

அருமையான அலசல் மற்றும் முடியும் என்றால் முடியும்.

ஜாதியை பாத்துதான் ஒட்டு விழுகிறது என்றால் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவால் எப்படி முதல்வர்களாக வர முடியும்.

முதலில் இந்து அமைப்பில் பிரிவுகள் கொண்டு வந்து விட்டாலே எல்லா ஜாதியும் அந்த பிரிவுகளில் அடக்கமாகிவிடும் (உபயம்:முதல்வன்)

விளையும் பயிர்களின் மனதில் நஞ்சை விதைத்தே சென்றோமானால் என்ன அறுவடைக்கு வரும்!?

Anonymous said...

தவறு இருப்பின் மன்னிக்க.. இனி இப்படி நிகழாது! உறுதி! என் கம்மன்ட்களை அழித்து கொண்டு இருக்கிறேன் அங்கே!

பெசொவி said...

// சிவகுமார் said...
தவறு இருப்பின் மன்னிக்க.. இனி இப்படி நிகழாது! உறுதி! என் கம்மன்ட்களை அழித்து கொண்டு இருக்கிறேன் அங்கே!
//

ஆஹா......................! மறுபடியும் மொதல்லேர்ந்தா!

உங்களில் ஒருவன் said...

இதெல்லாவற்றிர்க்கும் காரணம் நமக்கு போதிக்கப் படுவது Materialism என்ற உலகாதாயக்கல்வியே, அது சொந்த வாழ்க்கைக்கு உதவாது,,,, இது சம்பந்தமாக நான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். பாருங்கள்
http://worldandcountry.blogspot.com/2010/11/blog-post.html

tamil blogs said...

அருமையானப் பதிவு. உங்கள் பதிவுகளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள் http://tamilblogs.corank.com/

THOPPITHOPPI said...

அருமையான பதிவு

வரவேண்டும் இதுபோல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

online. present sir

வெட்டிப்பேச்சு said...

//பட்டம் வாங்குவது திருமணம் என்ற பெயரில் அதிகமாக வரதட்சணை வாங்குவதற்கும், சுய மதிப்பிற்க்காகவும் மற்றும் வேறு சில லாபங்களுக்காகவும் என்பது தான் வேடிக்கை.//

இதைத்தான் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்றனரோ?

நல்ல பதிவு..

வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் said...

////இந்தியாவில் ஏற்ப்படும் பல ஜாதிக் கலவரங்களுக்கு மறைமுகமாக அரசாங்கமும், ஆசிரியர்களும் தான் காரணமாக இருக்கின்றனர்.///


தவறு நண்பரே.
அரசையும்
ஆசிரியர்களையும்
ஒரு சேரக் குறை கூறுவது.
ஒரு சில கல்வி நிறுவனங்கள் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த ஆசிரிரியர்களையும் பழி சொல்லாதீர்கள்.

Thanglish Payan said...

Arumai nanbare...

Parvaiyodu nillamal matra murpadin migavum nanru..

Priya said...

அருமையான அலசல்...

எப்பூடி.. said...

தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன், நேரேம் கிடைத்து விருப்பமிருந்தால் எழுதவும்.

http://eppoodi.blogspot.com/2010/12/blog-post_15.html

ஜெயந்த் கிருஷ்ணா said...

வருகை தந்து தங்கள் கருத்துக்களை கூறிய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி...