ஆண்டுவிழாக்களும் அலப்பறைகளும்..

வாழ்வின் கடைசி நாட்கள் வரை மறவாத அல்லது மறக்க முடியாத இனிமையான பொழுதுகள் என்று கேட்டாலே அதில என் பள்ளி நாட்களையும் தாராளமா, இல்ல இல்ல கண்டிப்பா சேர்க்கலாம். ஒரு கவலையும் இல்லாம, தெரியாம ஓடியாடி எல்லாரையும் ஓட்டி எடுத்து, பல பன் வாங்கி நடந்த காலம் அது. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படித்தது வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு தொடக்கப்பள்ளியில தான். அங்க ஆண்டுக்கொரு முறை ஏதாவது விழா நடத்த வேண்டுமே என்று வேண்டாவெறுப்பாக நடத்துவாங்க. அதுக்கு எங்க கிட்ட ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாய் வசூலிப்பாங்க அந்த காசை வீட்டிலிருந்து வாங்குவதற்கு ரெகமன்டேசன் தேடி அலைஞ்சிருக்கேன். எதுவும் கெடைக்காம வீட்ல இருந்து காசு வாங்க நான் பட்ட பாடு இன்னொரு கட்டுரை தேறும். அந்த காசில் தான் ஆண்டு விழாவிற்கான அலங்கார பெருட்கள், மதிய சாப்பாட்டுக்கு உணவுப்பொருட்கள் எல்லாம் வாங்குவாங்க. ஆண்டுவிழாவிற்கு தலைமை தாங்குவதற்கும் ஊரிலுள்ள பெரியவர்களை தான் அழைப்பார்கள். அவங்க அங்க வந்து நாட்டாமை பண்ணுவாங்க பாருங்க, எங்க வாத்தியார் எல்லாம் அசடு வழிஞ்சே சமாளிப்பாங்க. அந்த ஆண்டுவிழாவின் போது எங்களுக்கு சந்தோசம் தரக்கூடிய ஒரே விஷயம் ஆடை தான், அன்று மட்டும் தான் எங்கள் பள்ளியில் சீருடை இல்லாம மற்ற உடைகள் அணிய அனுமதி. மற்றபடி ஆண்டு விழாக்களில் நடக்கும் எந்த ஒரு போட்டியிலும் கலந்து கொண்டதில்லை. ஹி ஹி எப்டியும் நாம தான் ஜெய்போம். பாராட்டுவாங்க. நமக்கு தான் மத்தவங்க பாரடுனா ஒரே ஷய்யா இருக்குமே. நாங்க எல்லாம் அப்பவே அப்டி தெரியுமா.

ஆறாம் வகுப்பில் சற்று தொலைவில் உள்ள பள்ளியில் என்னை சேர்த்து, இல்ல தள்ளி விட்டாங்க . அந்த வட்டாரத்திலையே அது தான் பழமையான மற்றும் பெரிய பள்ளிக்கூடம். படிக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையும் அதிகம். இங்க பழைய பள்ளி போல இல்லாம ஆண்டு விழாக்களை பெரிய அளவில் நடத்துவாங்க. என்னடா விழாவ பத்தி மட்டும் சொல்றானேன்னு நெனைக்கலாம், அது தான் இப்பவும் பசுமையா ஞாபகம் இருக்கு. விழாவில் சிறப்பு விருந்தினராக MLA அல்லது MP தான் கலந்து கொள்வார்கள். விழா ஆரம்பிக்க ஒரு வாரத்திற்கும் முன்னாடியே அதுக்கான ஆயுத்த வேலைகள் தொடங்கிடும். பெரும்பாலும் பசங்களே எல்லா வேலைகளையும் செஞ்சிடுவாங்க, ரெண்டு மூணு ஆசிரியர்கள் மேற் பார்வை பாப்பாங்க . இது ஒரு பக்கம், மத்தவங்க ஆண்டுவிழாவில் நடைபெறவிருக்கும் ஆடல், பாடல்ன்னு பலவிதமான கலை நிகழ்சிகளுக்கு ஒத்திகை பார்க்க தொடங்குவாங்க. இப்படியாக விழாவிற்கு முந்தைய ஓரிரு வாரங்கள் பலருக்கு கொண்டாட்டம். காரணம் ஒன்னும் இல்ல, இந்த தினங்களில் வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. காலையில் வருகைப்பதிவு குடுத்தாலே போதும். அது தான நமக்கு முக்கியம்.

புது பள்ளி, புது சூழல், புதிய நண்பர்கள் என ரெண்டு வருஷம் நல்ல பிள்ளையாய் எந்த வம்பு தும்புக்கும் போனது இல்ல. எந்த நிகழ்சிகளும், மற்றும் விளையாட்டுகளும் கலந்து கொள்ளவில்லை. அப்பறம் எட்டாம் வகுப்பு வந்தவுடன் எல்லாம் மாறிவிட்டது. நண்பர்கள் கூட்டம் மாறிப்போனது, சீ நாறிப்போனது. எதிரிகள் அதிகமானார்கள் (ஒரு பையன் அழகா இருந்தாலே இது தாங்க பிரச்சனை, கிளாஸ்ல எவனெல்லாம் நல்லா படிக்கிறானோ அவனெல்லாம் நமக்கு எதிரி தான். முக்கியமா கிளாஸ் லீடர்) இவர்களில் யாரை எங்களுக்கு பிடிக்கவில்லையோ அவனை பழிவாங்குவது ஆண்டுவிழாக்களில் தான். பழிவாங்கறது அப்டினா அடிதடியெல்லாம் இல்லை அந்த பையன் எந்த விளையாட்டில் பங்கெடுக்கிறானோ அந்த விளையாட்டில் கண்டிப்பாக நாங்களும் இருப்போம். வாலி பால் விளையாட்டென்றால் அவன் டீமிலையே தான் நாங்களும் இருப்போம். எங்களுக்கு வெற்றி முக்கியமல்ல, எதிரியின் தோல்வி தான் முக்கியம் அது நம்ம டீமா இருந்தாலும் சரி. அதே மாதிரி ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு அவனுடனையே ஓடி அவன் காலை தட்டி விடுவது என எல்லா விதமான தொந்தரவுகளும் கொடுப்போம். சுருக்கமா சொன்னா வில்லன் வேலைய சரியா பாத்திருக்கேன்.

பேஸ் பால். கபடி, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் நாங்கள் தான் எப்பவும் ஹீரோ, வெற்றியும் எங்களுக்கு தான், காரணம் அந்த பால்வாடிகள் (அதுதாங்க படிக்கிற பசங்க) இந்த மாதிரி உடம்புக்கு சேதாரம் உண்டாகும் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை. அதனால் நமக்கு எதிரணி தான் எதிரி.

எதிரிகளை அதோடு விட்டுவிடுவதில்லை. படிக்கிற பசங்க தான் பாட்டு போட்டி, பேச்சு போட்டி என எல்லாவற்றிலும் கலந்துகொல்வார்களே, அப்படி பாடும் போதும், பேசும் போதும் சத்தமிடுவதும், அவர்கள் பாடும் பாட்டுகளுக்கு எதிர் பாட்டுகள் பாடுவதும் என அங்கேயும் நாங்கள் கைவரிசையை காட்டிவிடுவோம். இது போன்ற குறும்புகளும், சின்ன சின்ன சண்டைகளும் பத்தாம் படிக்கும் வரையில் தான் நடந்தது.

+1 மற்றும் +2 வந்த போது பள்ளியில் நாங்கள் தான் சீனியர். அதனால பெரும்பாலும் அலங்காரம், நிகழ்ச்சி தொகுப்பு மற்றும் உணவு சம்மந்தப்பட்டவை போன்ற எல்லா பொறுப்புகளும் எங்களிடம் தான் வரும். அந்த சமயங்களில் எங்களுக்கு எதிரிகள் மிகவும் குறைவு. சொல்லப்போனால் இல்லைன்னு தான் செல்லனும். அதனால எல்லா வேலைகளையும் மாணவர்கள், மாணவியர் என நாங்களனைவரும் ஒற்றுமையாக தான் செய்வோம். அந்த நேரங்களில் வகுப்புகளுக்கு செல்வதே கிடையாது. ஆசிரியர்களும் இதை கண்டுகொள்ள மாட்டாங்க. காரணம் அனைவரும் ஓரளவு படிக்கும் மாணவர்கள். (நானும் தாம்பா.. நம்புங்க). இப்படி எப்படியோ நல்லபடியா பள்ளிக்காலம் முடிவுக்கு வந்தது.

கல்லூரி நாட்களில் ஆண்டுவிழாக்கள் பள்ளிக்காலங்களை போன்று சுவாரஸ்யமாக இருந்ததில்லை. ஆனால் கல்லூரியில் ஆண்டுவிழா நடக்கப்போகிறது என்ற செய்தி நோட்டீஸ் போர்டில் பார்த்தால் உடனே எங்களுக்குள் ஒரு மீட்டிங் நடக்கும், அந்த நாளில் எங்கு செல்லலாம் என்று. அன்றே முடிவெடுத்து அதற்குண்டான வேலைகளையும் செய்ய துவங்கி விடுவோம். கல்லூரியில் எங்கள் டீமில் மொத்தம் 14 பேர். ஒரு ஆளுக்கு இவ்வளவு என்று கட்டண வசூல் தொடங்கி விடுவார்கள். ஒரு நண்பனின் வீட்டில் வைத்து வித விதமாய் சமைத்து எடுத்து வருவார்கள். முதல் தடவை நாங்கள் சென்றது காளிகேசம் என்றொரு இடம். அது மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள ஒரு காட்டு பகுதி. (கன்னியா குமரி மாவட்டத்தில் உள்ளது) அங்கே பொதுவா ஒரு குறிப்பிட்ட இடம் வரை செல்ல அனுமதி உண்டு. நமக்கு தான் ரூல்ஸ் பிடிக்காதே ஆனால் நாங்கள் காட்டிற்கு உள்ளே சென்று விடுவோம். காலையில் 10 அங்கே சென்றால் மாலை 5 மணி வரை மலையாற்றில் குளியலும் கும்மாளமமுமாய் தொடரும், அந்த இடம் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு. அப்பறம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை அங்க போய்டுவோம். முதல் ரெண்டு வருஷம் ஆண்டு விழா எங்களுக்கு காளிகேசத்திலையே கலகலப்பாய் கடந்து சென்றது. இறுதியாண்டில் நாங்கள் கட்டாயமாய் கலந்து கொள்ள வேண்டிய நிலை. பாட்டு கூத்து கும்மாளம் எதுவுமில்லாமல் எதிரிகள், நண்பர்கள் என அனைவரும் ஓன்று கூடி நண்பர்களாகவே பிரிந்தோம்.

**************************************************************

ஓரிரு மாதங்களுக்கு முன்பு சிதறல்கள் எனும் தளத்தில் எழுதும் சகோதரி தீபா அவர்கள் பள்ளி ஆண்டு விழா அனுபவங்கள் என்ற தலைப்பில் என்னை ஒரு தொடர்பதிவு எழுத அழைத்திருந்தார்கள், தாமத்திற்கு ஒரு மன்னிப்பை கூறிவிட்டு, என் வாழ்க்கையில் மீண்டும் கிடைக்காத பள்ளி மற்றும் கல்லூரி காலங்களை நினைவு கூற ஒரு நல்ல வாய்ப்பை தந்த சகோதரி தீபா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

**************************************************************

90 comments:

Mathi said...

me the first

செல்வா said...

வடை .! :-(

Mathi said...

//ஆறாம் வகுப்பில் சற்று தொலைவில் உள்ள பள்ளியில் என்னை சேர்த்து, இல்ல தள்ளி விட்டாங்க .//

appadiyaa...

செல்வா said...

//ஐந்தாம் வகுப்பு வரை படித்தது வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு தொடக்கப்பள்ளியில தான். அங்க ஆண்டுக்கொரு முறை ஏதாவது விழா நடத்த வேண்டுமே என்று வேண்டாவெறுப்பாக நடத்துவாங்க//

நான் படிச்ச இடத்துல வேண்டா வெறுப்பா கூட பண்ண மாட்டாங்க ..?!

Mathi said...

//(ஒரு பையன் அழகா இருந்தாலே இது தாங்க பிரச்சனை, கிளாஸ்ல எவனெல்லாம் நல்லா படிக்கிறானோ அவனெல்லாம் நமக்கு எதிரி தான். முக்கியமா கிளாஸ் லீடர்)//

appadiya??

Arun Prasath said...

vadai poachae..

அன்பரசன் said...

//ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படித்தது வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு தொடக்கப்பள்ளியில தான்.//

ஒண்ணாம் வகுப்பு நாங்கல்லாம் காலேஜுல படிச்சோம்.

Mathi said...

காரணம் அனைவரும் ஓரளவு படிக்கும் மாணவர்கள். (நானும் தாம்பா.. நம்புங்க).

nambitom ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Mathi said...

me the first

//

நீங்களே தான்... வடை வாங்கிட்டு போங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

கோமாளி செல்வா said...

வடை .! :-(

//

போச்சே... வடை போச்சே...

செல்வா said...

// என்னடா விழாவ பத்தி மட்டும் சொல்றானேன்னு நெனைக்கலாம், /

அப்ப மட்டும்தான பள்ளிக்க்கூடாம் போறது ..?! அப்புறம் அத பத்தி மட்டும் தான தெரியும் ..?

எஸ்.கே said...

அதெல்லாம் ஒரு காலம் பாட்டு டான்ஸ் நாடகம்னு ஒரே கோலாகலமா இருக்கும்! ம்ஹும்! எல்லாம் நினைவுகளில்......

Ramesh said...

அருமையா பதிவு பண்ணிருக்கீங்க நண்பா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Mathi said...

//ஆறாம் வகுப்பில் சற்று தொலைவில் உள்ள பள்ளியில் என்னை சேர்த்து, இல்ல தள்ளி விட்டாங்க .//

appadiyaa...

//

நிஜமா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

கோமாளி செல்வா said...

//ஐந்தாம் வகுப்பு வரை படித்தது வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு தொடக்கப்பள்ளியில தான். அங்க ஆண்டுக்கொரு முறை ஏதாவது விழா நடத்த வேண்டுமே என்று வேண்டாவெறுப்பாக நடத்துவாங்க//

நான் படிச்ச இடத்துல வேண்டா வெறுப்பா கூட பண்ண மாட்டாங்க ..?!

//

அதுக்கெல்லாம் பள்ளிக்கு போகணும் செல்வா... அப்பவே எங்கே மொக்கை கிடைக்குமுன்னு தேடி போயிருப்பே...

அன்பரசன் said...

//எங்களுக்கு வெற்றி முக்கியமல்ல, எதிரியின் தோல்வி தான்//

நல்ல கொள்கை..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Arun Prasath said...

vadai poachae..

//


அது தான் போயாச்சில்ல..

அன்பரசன் said...

//சுருக்கமா சொன்னா வில்லன் வேலைய சரியா பாத்திருக்கேன்.//

உண்மையை ஒதுக்கிட்டா சரிதான்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அன்பரசன் said...

//ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படித்தது வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு தொடக்கப்பள்ளியில தான்.//

ஒண்ணாம் வகுப்பு நாங்கல்லாம் காலேஜுல படிச்சோம்.
\
//


ஓஹோ பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கீங்க போல...

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

அதெல்லாம் ஒரு காலம் பாட்டு டான்ஸ் நாடகம்னு ஒரே கோலாகலமா இருக்கும்! ம்ஹும்! எல்லாம் நினைவுகளில்......

//

நிச்சயமாக நண்பரே...அதெல்லாம் திரும்ப கிடைக்காத நாட்கள்...

அன்பரசன் said...

//பேஸ் பால். கபடி, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் நாங்கள் தான் எப்பவும் ஹீரோ, வெற்றியும் எங்களுக்கு தான், காரணம் அந்த பால்வாடிகள் (அதுதாங்க படிக்கிற பசங்க) இந்த மாதிரி உடம்புக்கு சேதாரம் உண்டாகும் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை//

ஒடம்ப பாக்கும்போதே நெனச்சேன்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிரியமுடன் ரமேஷ் said...

அருமையா பதிவு பண்ணிருக்கீங்க நண்பா..

//

நன்றி நண்பரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அன்பரசன் said...

//எங்களுக்கு வெற்றி முக்கியமல்ல, எதிரியின் தோல்வி தான்//

நல்ல கொள்கை..

//

நமக்கு ஒரு கண்ணு போனாலும் எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணும்...

அன்பரசன் said...

//வாழ்வின் கடைசி நாட்கள் வரை மறவாத அல்லது மறக்க முடியாத இனிமையான பொழுதுகள் என்று கேட்டாலே அதில என் பள்ளி நாட்களையும் தாராளமா, இல்ல இல்ல கண்டிப்பா சேர்க்கலாம்.//

பெரும்பாலும் எல்லோருக்கும் அதுவாதான் இருக்கும்..
என்றும் பசுமையாய்...

மாணவன் said...

பள்ளிக்காலங்களையும்,கல்லூரிக் காலங்களையும் நினைவுகூர்ந்து நெகிழவைத்துவிட்டீர்கள்...

எத்தனை மாற்றங்கள் வந்தாலும் நமது பள்ளிக்காலங்களும் கல்லூரிக்காலங்களும் மறக்க முடியாத நினைவுகளாக என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும்......

பகிர்வுக்கு நன்றி அண்ணே

ஜெயந்த் கிருஷ்ணா said...

அன்பரசன் said...

//வாழ்வின் கடைசி நாட்கள் வரை மறவாத அல்லது மறக்க முடியாத இனிமையான பொழுதுகள் என்று கேட்டாலே அதில என் பள்ளி நாட்களையும் தாராளமா, இல்ல இல்ல கண்டிப்பா சேர்க்கலாம்.//

பெரும்பாலும் எல்லோருக்கும் அதுவாதான் இருக்கும்..
என்றும் பசுமையாய்...

//

உண்மை தான்... நண்பரே...
வருகைக்கு நன்றி நண்பரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

பள்ளிக்காலங்களையும்,கல்லூரிக் காலங்களையும் நினைவுகூர்ந்து நெகிழவைத்துவிட்டீர்கள்...

எத்தனை மாற்றங்கள் வந்தாலும் நமது பள்ளிக்காலங்களும் கல்லூரிக்காலங்களும் மறக்க முடியாத நினைவுகளாக என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும்......

//

வருகைக்கு நன்றி தம்பி...

செல்வா said...

//(ஒரு பையன் அழகா இருந்தாலே இது தாங்க பிரச்சனை, கிளாஸ்ல எவனெல்லாம் நல்லா படிக்கிறானோ அவனெல்லாம் நமக்கு எதிரி தான். முக்கியமா கிளாஸ் லீடர்)/

அழகா இருக்குற பையன் மீன்ஸ் ..?

செல்வா said...

/// அந்த சமயங்களில் எங்களுக்கு எதிரிகள் மிகவும் குறைவு. சொல்லப்போனால் இல்லைன்னு தான் செல்லனும். அதனால எல்லா வேலைகளையும் மாணவர்கள், மாணவியர் என நாங்களனைவரும் ஒற்றுமையாக தான் செய்வோம்.//

ஹி ஹி ஹி ஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

கோமாளி செல்வா said...

//(ஒரு பையன் அழகா இருந்தாலே இது தாங்க பிரச்சனை, கிளாஸ்ல எவனெல்லாம் நல்லா படிக்கிறானோ அவனெல்லாம் நமக்கு எதிரி தான். முக்கியமா கிளாஸ் லீடர்)/

அழகா இருக்குற பையன் மீன்ஸ் ..?

//

சத்தியமா உன்ன மாதிரி இருக்க மாட்டாங்க.. போதுமாடா ராசா...

karthikkumar said...

ரெண்டு மூணு ஆசிரியர்கள் மேற் பார்வை பாப்பாங்க .///
மேற் பர்வைன்னா தலைய மேல்நோக்கி வெச்சு மேல மட்டும் பாத்துட்டு இருப்பாங்களா... டவுட்டு

ஜெயந்த் கிருஷ்ணா said...

karthikkumar said...

ரெண்டு மூணு ஆசிரியர்கள் மேற் பார்வை பாப்பாங்க .///
மேற் பர்வைன்னா தலைய மேல்நோக்கி வெச்சு மேல மட்டும் பாத்துட்டு இருப்பாங்களா... டவுட்டு

//

நீ புத்திசாலி மக்கா....

karthikkumar said...

நீ புத்திசாலி மக்கா..///
எங்க வாத்தியார் கூட இப்படிதான் சொல்வாரு அதனாலதான் புத்திசாலியா இருந்துட்டு மேற்கொண்டு எதற்கு படிக்கணும் அப்டின்னு எங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டரே TC கொடுத்து அனுப்பிட்டாரு....

ஜெயந்த் கிருஷ்ணா said...

karthikkumar said...

நீ புத்திசாலி மக்கா..///
எங்க வாத்தியார் கூட இப்படிதான் சொல்வாரு அதனாலதான் புத்திசாலியா இருந்துட்டு மேற்கொண்டு எதற்கு படிக்கணும் அப்டின்னு எங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டரே TC கொடுத்து அனுப்பிட்டாரு...

//

இந்த வாத்தியாருங்களே இப்படி தான்... பாரு ஒரு புத்திசாலி புள்ளைய எப்படி பண்ணியிருக்காங்கன்னு...

karthikkumar said...

இந்த வாத்தியாருங்களே இப்படி தான்... பாரு ஒரு புத்திசாலி புள்ளைய எப்படி பண்ணியிருக்காங்கன்னு...//

இதைதான் வள்ளுவர் அன்றைக்கே சொன்னார்

கக்கக்க காகா வென கொக்கக்கோ

கோ கோ வென ...
சரிங்க நான் வரேன் கட்சி பணிகள் அழைப்பதால் செல்கிறேன்..

MEET

Anonymous said...

ஆண்டு விழாவா? அப்படின்னா என்னா மாப்பு? ;)
இவண்,
ஆண்டுவிழாவில் அப்ஸ்கான்ட் ஆகும் நல்ல மாணவர்கள் சங்கம்

sathishsangkavi.blogspot.com said...

அறுமையான பதிவு...

பொன் மாலை பொழுது said...

அலப்பறை நல்லாத இருக்கு !

எப்பூடி.. said...

சிறப்பான பதிவு

THOPPITHOPPI said...

எங்களுக்கு வெற்றி முக்கியமல்ல, எதிரியின் தோல்வி தான்


HAHAHA

Anonymous said...

எந்த வம்பு தும்புக்கும் போனது இல்ல//

apidiyaa ????

Anonymous said...

அருமையான அனுபவ பகிர்வு

வைகை said...

(ஒரு பையன் அழகா இருந்தாலே இது தாங்க பிரச்சனை, கிளாஸ்ல எவனெல்லாம் நல்லா படிக்கிறானோ அவனெல்லாம் நமக்கு எதிரி தான். முக்கியமா கிளாஸ் லீடர்)//////////

ஆமா மாமு சேம் ப்ளட்....

வைகை said...

படிக்கிற பசங்க தான் பாட்டு போட்டி, பேச்சு போட்டி என எல்லாவற்றிலும் கலந்துகொல்வார்களே,//////////


மாமு இதுல எதுவும் உள்குத்து இருக்கா?!!

அன்புடன் நான் said...

கலக்கல இருக்குங்க...

தினேஷ்குமார் said...

நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன நண்பரே அருமையான பதிவு

அன்புடன் நான் said...

ஒரு நண்பனின் வீட்டில் வைத்து வித விதமாய் சமைத்து எடுத்து வருவார்கள்.//
அதுமட்டும் தானா.... வேற எதாவது...
ஏன்னா காட்டுக்குள்ள போகனுமுன்னா....???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீ ஊதினாலே எல்லோரும் பறந்திடுவான்களே

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி. கருணாகரசு said... 47

ஒரு நண்பனின் வீட்டில் வைத்து வித விதமாய் சமைத்து எடுத்து வருவார்கள்.//
அதுமட்டும் தானா.... வேற எதாவது...
ஏன்னா காட்டுக்குள்ள போகனுமுன்னா....???


//

ஐயோ அண்ணா அதெல்லாம் இப்படி பப்ளிக்கா செல்ல முடியுமா... ஆனாலும் விட மாட்டீங்க போலிருக்கே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எப்படியோ படிச்ச பயதான் நீ

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீ ஊதினாலே எல்லோரும் பறந்திடுவான்களே

//

எதுக்கு இந்த கமெண்ட்... வேற ஏதாவது ப்ளாக்ல போட வேண்டியதா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எப்படியோ படிச்ச பயதான் நீ

//

அதுக்கு தானே இப்படி பட்டியல் போட்டு சொல்றோம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

dineshkumar said...

நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன நண்பரே அருமையான பதிவு

//

மிக்க நன்றி நண்பரே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி. கருணாகரசு said...

கலக்கல இருக்குங்க...

//
நன்றி அண்ணா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

படிக்கிற பசங்க தான் பாட்டு போட்டி, பேச்சு போட்டி என எல்லாவற்றிலும் கலந்துகொல்வார்களே,//////////


மாமு இதுல எதுவும் உள்குத்து இருக்கா?!!

//

உள்குத்தா அப்படீன்னா என்ன மாமு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

(ஒரு பையன் அழகா இருந்தாலே இது தாங்க பிரச்சனை, கிளாஸ்ல எவனெல்லாம் நல்லா படிக்கிறானோ அவனெல்லாம் நமக்கு எதிரி தான். முக்கியமா கிளாஸ் லீடர்)//////////

ஆமா மாமு சேம் ப்ளட்....

//

அட அங்கயும் இதே தானா,, ஓகே ஓகே

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அருமையான அனுபவ பகிர்வு

//

நன்றி அண்ணா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Balaji saravana said...

ஆண்டு விழாவா? அப்படின்னா என்னா மாப்பு? ;)
இவண்,
ஆண்டுவிழாவில் அப்ஸ்கான்ட் ஆகும் நல்ல மாணவர்கள் சங்கம்

//

நமக்கு பள்ளி காலத்தில எங்கையும் போக முடியாது... எங்கே பார்த்தாலும் வீட்டில சொல்லிடுவாங்க....

ஜெயந்த் கிருஷ்ணா said...

சங்கவி said...

அறுமையான பதிவு...

//

நன்றி அண்ணா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

கக்கு - மாணிக்கம் said...

அலப்பறை நல்லாத இருக்கு !

//

நன்றி அண்ணா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

எப்பூடி.. said...

சிறப்பான பதிவு

//

நன்றி நண்பரே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

THOPPITHOPPI said...

எங்களுக்கு வெற்றி முக்கியமல்ல, எதிரியின் தோல்வி தான்


HAHAHA

//

thanks for comming

ஜெயந்த் கிருஷ்ணா said...

கல்பனா said...

எந்த வம்பு தும்புக்கும் போனது இல்ல//

apidiyaa ????

//

நிஜமா...

நம்பனும்...

Unknown said...

நல்ல அனுபவப் பகிர்வு நண்பா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்றா.... இனிமே கமென்ட்டு போட வேண்டியதில்லன்னு சந்தோசமா இருந்தா இப்பிடிப் பண்ணிப் போட்ட?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன ஒன்றை மைலுக்கு பதிவு போட்டு வெச்சிருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓ தொடர்பதிவா இது.........? எழுது எழுது.................ஹி...ஹி.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வேற என்ன சொல்லனும்.... ம்ம்ம்ம் மறந்துடுச்சே..... மண்டபத்துல என்னமோ சொல்லி அனுப்பிச்சாங்களே?

சுசி said...

நல்ல பகிர்வு ஜெயந்த்.

சீமான்கனி said...

//எங்களுக்கு வெற்றி முக்கியமல்ல, எதிரியின் தோல்வி தான்//

ஓஹோ....ரைட்டு...

அலப்பறை கலக்கல்...

ஆமினா said...

உங்களோஒட சேர்ந்து நானும் பயணீத்தேன்


சூப்பர்

சி.பி.செந்தில்குமார் said...

சூப்பர் பதிவு

சி.பி.செந்தில்குமார் said...

தினமலர் வாரமலர் ,த பெ எண் 517,சென்னை 600008 என்ற முகவரிக்கு இதை பிரிண்ட் எடுத்து அனுப்பவும்,ரூ 1500 பரிசு கிடைக்கும்,தலைப்பில் இது உங்கள் இடம் என எழுதவும்

சி.பி.செந்தில்குமார் said...

உங்கள் எழுத்துக்களில் அதிகம் டீன் ஏஜ் ஞாபகங்கள் வருவதைக்கவனிக்கிறேன்,களிப்படைகிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீ ஊதினாலே எல்லோரும் பறந்திடுவான்களே

அங்கே மட்டும் என்ன வாழுது?

ஆனந்தி.. said...

பிளாஷ் பேக் சூப்பர்...எங்க ஸ்கூல்...ஆண்டு விழா எல்லாம் நானும் லேசா ரீவைண்ட் பண்ண ஆரம்பிச்சிட்டேன்...:))

Sriakila said...

ஆண்டுவிழா அனுபவங்களைப் படிக்க சுவாரஸ்யமா இருக்கு ஜெயந்த்.

ஒவ்வொருக் கட்டத்திலும் நீங்கள் காட்டிய உங்களின் மனநிலை ரொம்பவும் யதார்த்தம். அந்தந்த வயதில் ஏற்படக்கூடிய மனநிலை. அனைவரும் அந்த மனநிலையைக் கடந்து தான் வந்திருப்போம்.

அருமையான, யதார்த்தமான அனுபவங்கள். ரசிக்க முடிகிறது.

'பரிவை' சே.குமார் said...

//எங்களுக்கு வெற்றி முக்கியமல்ல, எதிரியின் தோல்வி தான்//

நல்ல கொள்கை..

அருமையான, யதார்த்தமான அனுபவங்கள். ரசிக்க முடிகிறது.

Unknown said...

நல்ல அனுபவம்
பகிர்வுக்கு நன்றி

Unknown said...

பள்ளிக்காலங்களும் கல்லூரிக்காலங்களும் மறக்கமுடியாதவைகள்.

பகிர்வுக்கு நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா said...

பதிவுலகில் பாபு said...

நல்ல அனுபவப் பகிர்வு நண்பா..

//

நன்றி நண்பரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்றா.... இனிமே கமென்ட்டு போட வேண்டியதில்லன்னு சந்தோசமா இருந்தா இப்பிடிப் பண்ணிப் போட்ட?

//

எல்லாம் உன்களுக்கு பயந்து தான்.. ஆனா என்ன பண்றது அன்பு தொல்லையால திறக்க வேண்டியதா போச்சு

@@@@

என்ன ஒன்றை மைலுக்கு பதிவு போட்டு வெச்சிருக்கே?

//

எப்படியும் படிக்க போறதில்ல அப்புறம் என்ன பேச்சு...

@@@

ஜெயந்த் கிருஷ்ணா said...

சுசி said... 69

நல்ல பகிர்வு ஜெயந்த்.


//

நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சீமான்கனி said... 70

//எங்களுக்கு வெற்றி முக்கியமல்ல, எதிரியின் தோல்வி தான்//

ஓஹோ....ரைட்டு...

அலப்பறை கலக்கல்...


//

வருகைக்கு நன்றி நண்பரே,,,

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆமினா said... 71

உங்களோஒட சேர்ந்து நானும் பயணீத்தேன்


சூப்பர்


//

நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி.பி.செந்தில்குமார் said... 73

தினமலர் வாரமலர் ,த பெ எண் 517,சென்னை 600008 என்ற முகவரிக்கு இதை பிரிண்ட் எடுத்து அனுப்பவும்,ரூ 1500 பரிசு கிடைக்கும்,தலைப்பில் இது உங்கள் இடம் என எழுதவும்


உங்கள் எழுத்துக்களில் அதிகம் டீன் ஏஜ் ஞாபகங்கள் வருவதைக்கவனிக்கிறேன்,களிப்படைகிறேன்

//

தகவலுக்கு நன்றி அண்ணா. நிச்சயம் செய்கிறேன்...

வருகைக்கு நன்றி அண்ணா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆனந்தி.. said... 76

பிளாஷ் பேக் சூப்பர்...எங்க ஸ்கூல்...ஆண்டு விழா எல்லாம் நானும் லேசா ரீவைண்ட் பண்ண ஆரம்பிச்சிட்டேன்...


//

நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Sriakila said... 77

ஆண்டுவிழா அனுபவங்களைப் படிக்க சுவாரஸ்யமா இருக்கு ஜெயந்த்.

ஒவ்வொருக் கட்டத்திலும் நீங்கள் காட்டிய உங்களின் மனநிலை ரொம்பவும் யதார்த்தம். அந்தந்த வயதில் ஏற்படக்கூடிய மனநிலை. அனைவரும் அந்த மனநிலையைக் கடந்து தான் வந்திருப்போம்.

அருமையான, யதார்த்தமான அனுபவங்கள். ரசிக்க முடிகிறது.


//

நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சே.குமார் said... 78

//எங்களுக்கு வெற்றி முக்கியமல்ல, எதிரியின் தோல்வி தான்//

நல்ல கொள்கை..

அருமையான, யதார்த்தமான அனுபவங்கள். ரசிக்க முடிகிறது.


//

வருகைக்கு நன்றி சகோதரா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

siva said... 79

நல்ல அனுபவம்
பகிர்வுக்கு நன்றி


thanks siva..

@@@@

விக்கி உலகம் said... 80

பள்ளிக்காலங்களும் கல்லூரிக்காலங்களும் மறக்கமுடியாதவைகள்.

பகிர்வுக்கு நன்றி


//
வருகைக்கு நன்றி சகோதரா...