மிட்டாய்க் கிழவி..

முதல் காதல், முதல் முத்தம் போன்றவை வாழ்வின் இறுதி நிமிடங்கள் வரை மறவாமல் இருப்பது போன்று என்றும் மனதிற்குள் குடிகொண்டிருப்பவை பள்ளி மற்றும் கல்லூரிக் கால நினைவுகள் தான். இந்த காலங்களை மட்டும் நாம் பின்னாளில் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒதுக்கி வைக்க முடியாது. இழந்தால் திரும்ப பெற முடியாத பொற்க்காலம் இவை.

ஆரம்ப கல்விகள் வீட்டருகில் உள்ள ஒரு சிறிய தொடக்கப்பள்ளியில் தான். அப்போதெல்லாம் ஒன்றாம் வகுப்பு சேர்வதற்கு கையை தலைக்கு மேலாக கொண்டு சென்று காதுகளை தொட வேண்டும், அப்படி காதுகளை தொட முடியவில்லை என்றால் அடுத்த வருடம் தான் பள்ளியில் சேர முடியும். நான் பள்ளியில் சேரும் போது என் தாத்தா ஒருவர் அங்கு ஆசிரியராக வேலை பார்த்ததால் அதிகம் சிரமப்படவில்லை. ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றளவில் வேறு எந்த பள்ளிகளும் இல்லாததால் மக்கள் தொகைக்கு பஞ்சமில்லை.

பள்ளிக்கூடத்தில் ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தான் சிமெண்ட் கட்டிடம், இந்த கட்டிடத்தை ஆபீஸ் ரூமுக்காகவும் சத்துணவு பொருட்கள் வைப்பதற்கும் மட்டுமே பயன் படுத்தினார்கள். மற்ற படி வகுப்பறைகள் அனைத்தும் மூன்றடிக்கு மண்சுவரால் கட்டப்பட்டு அதற்கு மேல் தென்னை ஓலைகளால் கூரைகள் போட்டிருப்பார்கள். ஐந்தாம் வகுப்பு உள்ள மாணவர்கள் தரையில் தான் அமர வேண்டும். அதற்கு மேல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பெஞ்ச் போட்டிருப்பார்கள்.

நான் படித்த பொழுது எனக்கு மிகவும் பிடித்த வகுப்பறை பூவரசு மர நிழலில் நடக்கும் வகுப்பு தான். தொட்டு செல்லும் தென்றலும், மரத்திலிருந்து எட்டி பார்க்கும் அணில்களும், பாடம் நடத்தும் வேளைகளில் வந்தமர்ந்து ராகம் பாடும் காகங்களும், மரத்திலிருந்து விழுந்து கொண்டிருக்கும் பூக்களும், காற்றோட்டமான வெட்ட வெளியும் இந்த இடத்தை தவிர வேறெங்கு கிடைக்கும். இது மட்டுமல்லாமல் பள்ளி வளாகத்தில் நான்கைந்து மாமரங்களும் உண்டு. அவைகளின் நிழல்களிலும் வகுப்புகள் நடக்கும். காற்றோட்டமான இடத்தில் வைத்து பாடம் நடத்துகிறோம் என்று ஆசிரியர்கள் கூறினாலும் இதற்கு முக்கிய காரணம் வகுப்பு பற்றாக்குறைகள் தான். மழைக்காலங்கள் என்றால் வேறு வகுப்புகளுடன் அமர வைத்து விடுவார்கள். பெரும்பாலும் அந்த வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரிய, ஆசிரியைகள் தான் நமக்கும் ஆசிரியர்களாக இருப்பார்கள் அதனால் அவர்களுடனையே நமக்கும் பாடம் நடத்துவார்கள்.

பள்ளியில் என்னை மிகவும் கவர்ந்தது சுற்றிலும் வளர்ந்து நிற்கும் மா மரம், இலந்தை மரம், நாக மரம், கொய்யா மரம் போன்றவை தான். மதிய இடைவேளையிலும், மற்ற இடைவேளைகளிலும் நாங்கள் சங்கமிப்பது இந்த மரங்களில் அடியில் தான். இந்த மரங்களில் கல்லடி படாத மரங்களே கிடையாது. நாங்கள் எறியும் கல்லிற்கு தப்பாதே பழங்களே இல்லை எனலாம். இதற்காக நானும் நண்பர்களும் வாங்கிய பிரம்படிகளும் ஏராளம்.

மிட்டாய்க்கிழவி எங்களுக்கு மறக்கமுடியாத ஒரு தெய்வம். பள்ளிக்கூடத்தின் பின்புறம் தான் கிழவியின் வீடு. கடையெல்லாம் கிடையாது. ஒரு கூடையில் தான் மிட்டாய்களை அள்ளிக் கொண்டு வந்து பள்ளியருகில் கடைவிரிப்பாள். மீன் மிட்டாய் (மீன் வடிவில் இருக்கும்), தேன் மிட்டாய், இலந்தை ஆடை, ஆரஞ்சு மிட்டாய், ரப்பர் மிட்டாய், பம்பர மிட்டாய் (நிறைய பெயர்கள் மறந்து விட்டன) என நாங்கள் கண்டு கேட்டிராத மிட்டாய்கள் எல்லாம் எங்களுக்கு கிழவி தான் அறிமுகம் செய்வாள். இதில் எந்த மிட்டாயும் 20 பைசாவுக்கு மேல இருக்காது. தினமும் வீட்டிலிருந்து அழுது அடம்பிடித்து எப்படியும் அஞ்சு அல்லது பத்து பைசா வாங்கி தினமும் மிட்டாய் வாங்கிவிடுவேன். அது மட்டுமில்லாமல் புளி காய்க்கும் சீசனில் பள்ளி அருகிலுள்ள புளிய மரத்திலிருந்து புளியம்பழங்களையும் அருகிலுள்ள முந்திரி தோப்பிலிருந்து முந்திரிப்பழங்களை பொறுக்கி வந்து மிட்டாய்க் கிழவியிடம் கொடுத்தும் மிட்டாய் வாங்கி தின்றிருக்கிறோம். இதோ போதாதென்று மிட்டாய்க்காக வீட்டில் காசு திருடி அம்மாவிடமிருந்து தோசைக் கரண்டியால் வாங்கிக் கட்டிக்கொண்ட நாட்கள் ஏராளம்.

1992 நவம்பர் மாதம் நிற்காமல் பெய்த மழையின் பிடிவாதத்தால் அணைகள் நிரம்பி உடைந்துவிடுமோ என்ற அச்சத்தில் நள்ளிரவில் அணையை திறந்து விட எங்கு செல்வதென்று தெரியாமல் ஆவேசமாய் ஊருக்குள் புகுந்த தண்ணீரால் நூறுக்கணக்கான விடுகள் இல்லாமல் போக ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு இப்பள்ளிக்கூடம் தான் தன் மடிகொடுத்து ஓரிரு வாரங்கள் தூங்க வைத்தது.

ஐந்தாம் வகுப்பு வரை தான் நான் இப்பள்ளியில் பயின்றேன். பின்னாளில் நான்கைந்து வருடங்களுக்கு பின் இப்பள்ளி கொஞ்சம் கொஞ்சமாக உருமாற ஆரம்பித்திருந்தது. மண்சுவர்களும், ஓலைக்கூரைகளும் ஓரந்தள்ளப்பட்டு மாடிகள் வளர்ந்தன. சுதந்திரமாய் இருந்த பள்ளியை சுற்றிலும் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டன. பள்ளிக்குள் நின்ற ஒரே ஒரு மாமரத்தை தவிர எங்களுக்கு நிழல் தந்த பூவரசு மரம் உட்பட அனைத்தும் வெட்டப்பட்டன. இப்போது தலை சுற்றி காது தொட்டு பிள்ளைகளை சேர்க்கும் பழக்கமும் இல்லை. ஆறு வருடம் முன்பு மிட்டாய்க் கிழவியும் போய் சேர்ந்து விட்டாள். கடந்த விடுமுறையில் எதேச்சையாய் அவ்வழியே சென்ற போது எல்லாம் புதியதாகிய பின்னரும் அம்மாமரமும், அதே பழைய ஆபீஸ் ரூமும் மட்டும் தான் நான் பயின்ற பள்ளிக்கு அடையாளமாய் அங்கிருந்தன. ஆனால் அந்த பழைய ஞாபகங்கள் என்றும் மனதில் இனிமையாய் பசுமைமாறா நினைவுகளுடன் இன்றும் அசைபோடுகின்றன..



70 comments:

எஸ்.கே said...

அதெல்லாம் ஒரு காலம். மாங்காய், கொய்யாக்காய் என்று பள்ளி நாட்களில் வாங்கி சாப்பிட்டது. என்றும் பசுமையாய் உள்ளது!

மாணவன் said...

ஆஹா எஸ்கே சார் இன்னைக்கு ஃபர்ஸ்டா நல்ல வரவேற்பு good...

karthikkumar said...

வாழ்வின் பொற்காலங்கள் அவை.... எந்த கவலையும் இல்லாம சந்தோசமா திரிஞ்ச காலம் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கிழவிகிட்ட மிட்டாய் திருடு தின்னவனா நீ.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கிழவிகிட்ட மிட்டாய் திருடு தின்னவனா நீ.

//

ஸ்ஸ் ஸ்ஸ் ரகசியம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கிழவிகிட்ட மிட்டாய் திருடு தின்னவனா நீ.

//

ஸ்ஸ் ஸ்ஸ் ரகசியம்...///

ஓ ரகசியாவ வேற வச்சிருக்கியா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கிழவிகிட்ட மிட்டாய் திருடு தின்னவனா நீ.

//

ஸ்ஸ் ஸ்ஸ் ரகசியம்...///

ஓ ரகசியாவ வேற வச்சிருக்கியா?

//

ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே....

Unknown said...

நீங்கள் சொன்னவையெல்லாம் எங்களின் தினசரிகள் இருக்கிறது, கொஞ்சம் வடிவம் மாறியிருக்கிறது.
இப்போது பள்ளிகளின் கட்டங்கள், காட்சிகள் மாறிவிட்ட போதிலிலும், பள்ளிகளில் இந்த இன்பங்கள் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றன.
எங்கள் பள்ளி என்பதும் சின்னஞ்ச்சிறு சொர்க்கம் என்பதும் ஒன்று தான்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

பாரத்... பாரதி... said...

நீங்கள் சொன்னவையெல்லாம் எங்களின் தினசரிகள் இருக்கிறது, கொஞ்சம் வடிவம் மாறியிருக்கிறது.
இப்போது பள்ளிகளின் கட்டங்கள், காட்சிகள் மாறிவிட்ட போதிலிலும், பள்ளிகளில் இந்த இன்பங்கள் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றன.
எங்கள் பள்ளி என்பதும் சின்னஞ்ச்சிறு சொர்க்கம் என்பதும் ஒன்று தான்

//

உங்கள் பள்ளி மட்டுமல்ல .. ஒவ்வொருவரின் பள்ளிக்காலமும் குட்டி சொர்க்கம் தான்...
மறக்கவும் முடியாது.. மறுக்கவும் முடியாது...

மாணவன் said...

//அதே பழைய ஆபீஸ் ரூமும் மட்டும் தான் நான் பயின்ற பள்ளிக்கு அடையாளமாய் அங்கிருந்தன. ஆனால் அந்த பழைய ஞாபகங்கள் என்றும் மனதில் இனிமையாய் பசுமைமாறா நினைவுகளுடன் இன்றும் அசைபோடுகின்றன..//

நிச்சயமாக பள்ளிக்கால நிகழ்வுகள் எத்தனை காலங்கள் மாறினாலும் என்றும் நம் மனதில் பசுமரத்து ஆணிபோல பதிந்து அசைபோட்டுக்கொண்டிருக்கும்....

மாணவன் said...

//ஓ ரகசியாவ வேற வச்சிருக்கியா//

என்னாது ரகசியாவா? இந்த மேட்டர் ஜோதிக்கு தெரியுமா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

//ஓ ரகசியாவ வேற வச்சிருக்கியா//

என்னாது ரகசியாவா? இந்த மேட்டர் ஜோதிக்கு தெரியுமா?

//

அட நல்லவனே நீயுமா.... ரைட்டு.... நடத்துங்க....

எஸ்.கே said...

எங்க ஸ்கூல் விட்டு வரும்போ தினமும் எதிர்கடையில் ரஸ்னா குடிப்போம். ஒரு சின்ன டம்ளரில் 2 ரூபாய்க்கு குடுப்பாங்க. அதுக்கு காசு சேர்த்து ஒரு நாள் எல்லோரும் குடிப்போம். அதெல்லாம் ஒரு தனி சுகம்!

மாணவன் said...

//எஸ்.கே said...
எங்க ஸ்கூல் விட்டு வரும்போ தினமும் எதிர்கடையில் ரஸ்னா குடிப்போம். ஒரு சின்ன டம்ளரில் 2 ரூபாய்க்கு குடுப்பாங்க. அதுக்கு காசு சேர்த்து ஒரு நாள் எல்லோரும் குடிப்போம். அதெல்லாம் ஒரு தனி சுகம்!//

இதை நினைக்கும்போது இப்போது ஏந்தான் பள்ளிக்காலம் சீக்கிரம் முடிந்ததோ என்று ஏங்க வைக்கிறது

மாணவன் said...

என்ன செய்வது காலம் எல்லாத்தையும் மாற்றிவிடும் இதுதானே இயற்கையின் நியதி

மாறிவரும் உலகில் மாற்றம் என்ற வார்த்தை மட்டுமே மாறாதிருக்கிறது

செல்வா said...

// பாடம் நடத்தும் வேளைகளில் வந்தமர்ந்து ராகம் பாடும் காகங்களும், மரத்திலிருந்து விழுந்து கொண்டிருக்கும் பூக்களும், காற்றோட்டமான வெட்ட வெளியும் இந்த இடத்தை தவிர வேறெங்கு கிடைக்கும். /

தூங்குறதுக்கு அருமையா இருக்கும்ல ..?!

ஜெயந்த் கிருஷ்ணா said...

கோமாளி செல்வா said...

// பாடம் நடத்தும் வேளைகளில் வந்தமர்ந்து ராகம் பாடும் காகங்களும், மரத்திலிருந்து விழுந்து கொண்டிருக்கும் பூக்களும், காற்றோட்டமான வெட்ட வெளியும் இந்த இடத்தை தவிர வேறெங்கு கிடைக்கும். /

தூங்குறதுக்கு அருமையா இருக்கும்ல ..?!

//

போகுது பாரு புத்தி... இதிலேருந்தே தெரியுது நீ கிளாஸ்ல என்ன பண்ணியிருப்பேன்னு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

என்ன செய்வது காலம் எல்லாத்தையும் மாற்றிவிடும் இதுதானே இயற்கையின் நியதி

மாறிவரும் உலகில் மாற்றம் என்ற வார்த்தை மட்டுமே மாறாதிருக்கிறது

//

உண்மை தான் மாணவரே...

செல்வா said...

// நாங்கள் எறியும் கல்லிற்கு தப்பாதே பழங்களே இல்லை எனலாம். இதற்காக நானும் நண்பர்களும் வாங்கிய பிரம்படிகளும் ஏராளம்./

நாங்க ஒரு சமயம் எங்க பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்துல இருக்குற இலந்தை மரத்துல கல்லுல அடிச்சு அது பக்கத்துல இருந்த ஓட்டு வீடு மேல போய் விழுந்துடுச்சு .. அப்புறம் எல்லோரும் ஒரே ஓட்டமா ஓடிட்டோம் ..!

செல்வா said...

// (நிறைய பெயர்கள் மறந்து விட்டன) /

பம்பாய் மிட்டாய் ..?!

pichaikaaran said...

உணர்வு பூர்வமான பதிவு

செல்வா said...

//ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு இப்பள்ளிக்கூடம் தான் தன் மடிகொடுத்து ஓரிரு வாரங்கள் தூங்க வைத்தது./

மழையால் பதிக்கப்படும் அனே கிராமங்களில் இவ்வாறு தான் நடக்கிறது ..

இம்சைஅரசன் பாபு.. said...

மிட்டாய் கிழவி ன்னு தலைப்பு பார்த்த பின் .இந்த பய மிட்டாய் கிழவிக்கு காதல் கவிதை எழுதி இருக்கான் நினைசேன்

இம்சைஅரசன் பாபு.. said...

நினைவுகளை பின்னோக்கி பார்க்கும் பொழுது சந்தோசமும் ,துக்கங்களும் இருக்கும் .நீங்கள் சந்தோசங்களை அழகாக கூறி இருக்கு றீர்கள்

மாணவன் said...

//இம்சைஅரசன் பாபு.. said...
மிட்டாய் கிழவி ன்னு தலைப்பு பார்த்த பின் .இந்த பய மிட்டாய் கிழவிக்கு காதல் கவிதை எழுதி இருக்கான் நினைசேன்//

நீங்க வேற புதுசா ஒரு பிட்ட போடாதீங்க...
ஏற்கனவே ஜோதி நம்ம அண்ணன் மேல செம்ம கோபமா இருக்காங்க........

எப்படி சமாளிக்கபோறாருன்னு தெரியல...

ஹிஹிஹி

இம்சைஅரசன் பாபு.. said...

//நீங்க வேற புதுசா ஒரு பிட்ட போடாதீங்க...
ஏற்கனவே ஜோதி நம்ம அண்ணன் மேல செம்ம கோபமா இருக்காங்க........//


பரங்கி மலை ஜோதி தான் அந்த மிட்டாய் கிழவி அது தெரியாத மக்கா ????உங்களுக்கு

Sriakila said...

//அப்போதெல்லாம் ஒன்றாம் வகுப்பு சேர்வதற்கு கையை தலைக்கு மேலாக கொண்டு சென்று காதுகளை தொட வேண்டும், அப்படி காதுகளை தொட முடியவில்லை என்றால் அடுத்த வருடம் தான் பள்ளியில் சேர முடியும்//

என்னக் கொடுமை ஜெயந்த் இது..

Sriakila said...

//ஆனால் அந்த பழைய ஞாபகங்கள் என்றும் மனதில் இனிமையாய் பசுமைமாறா நினைவுகளுடன் இன்றும் அசைபோடுகின்றன..//

அருமையான நினைவுகள்..

Sriakila said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கிழவிகிட்ட மிட்டாய் திருடு தின்னவனா நீ //


// ஸ்ஸ் ஸ்ஸ் ரகசியம்...

ஓ ரகசியாவ வேற வச்சிருக்கியா? //


ஹா..ஹா... நல்ல ரசிக்கும்படியான கமெண்ட்ஸ்.

Sriakila said...

//முதல் காதல், முதல் முத்தம் போன்றவை வாழ்வின் இறுதி நிமிடங்கள் வரை மறவாமல் இருப்பது போன்று என்றும் மனதிற்குள் குடிகொண்டிருப்பவை பள்ளி மற்றும் கல்லூரிக் கால நினைவுகள் தான். இந்த காலங்களை மட்டும் நாம் பின்னாளில் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒதுக்கி வைக்க முடியாது. இழந்தால் திரும்ப பெற முடியாத பொற்க்காலம் இவை.//

yes. it's true.

Anonymous said...

நான் படித்த பொழுது எனக்கு மிகவும் பிடித்த வகுப்பறை பூவரசு மர நிழலில் நடக்கும் வகுப்பு தான்//
எனக்கும் அந்த அனுபவம் இருக்கு மிட்டாய் மேட்டர்ல இல்ல

MANO நாஞ்சில் மனோ said...

இதோ படிச்சிட்டு வர்றேன்...

MANO நாஞ்சில் மனோ said...

// அந்த பழைய ஞாபகங்கள் என்றும் மனதில் இனிமையாய் பசுமைமாறா நினைவுகளுடன் இன்றும் அசைபோடுகின்றன..///


ஆஹா ரியலி சூப்பர்....

Praveenkumar said...

அப்படியெ.. பள்ளிபருவத்தை கண்முன் கொண்டுவந்து நிறுத்தீட்டிங்க தல கலக்கல்.

arasan said...

நல்ல பதிவு நண்பரே ....
மிகவும் அருமையான பதிவு ...
நீங்கள் பயின்ற மாதிரி தான் நானும் அதே சூழ்நிலையில் பயின்று வந்தேன்,,,,
உங்கள் பதிவை படிக்கும்போது எனது சிறிய வயது பள்ளிக்காலங்கள் நிழலாடுகிறது ...

நன்றி .... மிக்க நன்றி ...

தினேஷ்குமார் said...

மறக்க முடியா இன்ப நினைவுகள் அவை நினைக்காமல் நம்மால் இருக்கமுடியுமா

சௌந்தர் said...

பாட்டி கடையில் வாங்கி சாப்பிட்டது எல்லாம் நினைவுக்கு வருகிறது

எப்பூடி.. said...

அன்றைய துன்பமான விடயங்கள் கூட இன்று நினைக்கும்போது பசுமையாக இருப்பதுதான் காலத்தை நாம் இழந்த உணர்வின் வெளிப்பாடு

வினோ said...

இதே போன்ற ஒரு உணர்வு எனக்கும் ஏற்பட்டது இந்த தடவை ஊருக்கு சென்றபொழுது..

Anonymous said...

அடடா என்ன ஒரு ரகசியம்

வைகை said...

மாமு இதெல்லாம் நெஞ்சில் ரோஜா முள் குத்துவது போன்றது வலியா...சுகமான்னு தெரியாது....இருந்தாலும் அனுபவிக்க தூண்டும்..ம்ம்ம்ம்ம்ம்....

a said...

பழையன நினைக்கவைக்கும் பதிவு...

வைகை said...

இன்றும் ஊருக்கு போனால் பள்ளியை கடக்கும் பொழுது என் மனது என்னை கடந்துவிடும்!

அன்பரசன் said...

பழைய நினைவுகளை கிளரும் விதத்தில் ஒரு பதிவு.

NaSo said...

//மாமு இதெல்லாம் நெஞ்சில் ரோஜா முள் குத்துவது போன்றது வலியா...சுகமான்னு தெரியாது....இருந்தாலும் அனுபவிக்க தூண்டும்..ம்ம்ம்ம்ம்ம்.... //

ரிப்பீட்டு மச்சி!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/வைகை said...

இன்றும் ஊருக்கு போனால் பள்ளியை கடக்கும் பொழுது என் மனது என்னை கடந்துவிடும்!//

ஸ்கூல்ல படிச்சிருக்கலாம்னு தோணுமோ. சரி விடு. காலம்போன காலத்துல என்ன பீலிங்கு

அம்பிகா said...

அருமையான நினைவலைகள்.

test said...

//அந்த பழைய ஞாபகங்கள் என்றும் மனதில் இனிமையாய் பசுமைமாறா நினைவுகளுடன் இன்றும் அசைபோடுகின்றன..//
எனக்கும் ஞாபகப்படுத்திட்டீங்க!

Unknown said...

உணர்வுபூர்வமான பதிவுக்கு நன்றி

ராஜி said...

சற்றேரக்குறைய இந்நிகழ்வுகள் அனைத்தும் என்வாழ்விலும் நடந்ததை ஒத்திருக்கிறது சகோதரா. என் பால்ய பருவத்தை நினைத்து ஏங்க வைத்த பதிவு. நன்றி சகோதரா

Anonymous said...

பழைய நினைவுகளின் பிம்பங்களை மீட்டெடுத்தது இப்பதிவு.. :)

ஆமினா said...

//நான் படித்த பொழுது எனக்கு மிகவும் பிடித்த வகுப்பறை பூவரசு மர நிழலில் நடக்கும் வகுப்பு தான்.//

அது தான் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.....

ரொம்ப வேடிக்கை பாக்கலாம்....

பழைய நினைவுகளுக்கு அழைத்துச்சென்றமைக்கு மிக்க நன்றி!!

என் பள்ளிகூடமும் உருமாற தொடங்கி உயர்ந்த கட்டடமா நிக்குது!!!

Madhavan Srinivasagopalan said...

online !

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/வைகை said...

இன்றும் ஊருக்கு போனால் பள்ளியை கடக்கும் பொழுது என் மனது என்னை கடந்துவிடும்!//

ஸ்கூல்ல படிச்சிருக்கலாம்னு தோணுமோ. சரி விடு. காலம்போன காலத்துல என்ன பீலிங்கு//////////

அதானே....ஒங்கள பாத்து சமாதானபடுத்திக்க வேண்டியதுதான்! படிச்ச புள்ளைஎல்லாம் என்ன சந்திரனுக்கு ராக்கெட்டா விடுது?! வாரம் ரெண்டு மொக்கதான போடுது?!!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

இனிமையான நினைவலை.. எனக்கும் பள்ளியின் நினைவு வந்து விட்டது... :)
பகிர்வுக்கு நன்றி.. :)

கருடன் said...

@வெறும்பய

மிக அருமையான பதிவு.. உங்கள் இனிய நினைவை பகிர்ந்தமைக்கு நன்றி!!

(பாரதேசி! வீட்டுல காசு திருடி அடிவாங்கின மேட்டர எப்படி மூடி மறைக்குது பாரு)

Mathi said...

பள்ளிகால நினைவுகள் ...
நம் வாழ்வில் கிடைத்த
விலை மதிப்பற்ற
பொக்கிஷம் !!
நல்ல எழுத்து திறன் உங்களுக்கு !!!

Mathi said...

பள்ளிகால நினைவுகள் ...
நம் வாழ்வில் கிடைத்த
விலை மதிப்பற்ற
பொக்கிஷம் !!
நல்ல எழுத்து திறன் உங்களுக்கு !!!

சசிகுமார் said...

நல்ல பதிவு. டெம்ப்ளேட் மாற்றி விட்டீர்களா மிகவும் அழகாகவும் சீக்கிரமாகவும் திறக்கிறது வாழ்த்துக்கள்.

Anonymous said...

திருட்டு ராஸ்கல்ல்ல்..

அவனா நீங்க???

'பரிவை' சே.குமார் said...

சில வேளைகளில் ஞாபகங்கள் தாலாட்டும்.அதை உங்கள் எழுத்துக்கள் அழகாக செய்து எங்கள் மனசுக்குள் இருக்கும் நினைவுகளை எழச்செய்துவிட்டது.

சுசி said...

அழகான நினைவு ஜெயந்த்.

புது வீடு நல்லாருக்கு.

சி.பி.செந்தில்குமார் said...

iNdlila 50th vote

சி.பி.செந்தில்குமார் said...

>>மாணவன் said...

//ஓ ரகசியாவ வேற வச்சிருக்கியா//

என்னாது ரகசியாவா? இந்த மேட்டர் ஜோதிக்கு தெரியுமா?

aah , who is that jothi?

ஆனந்தி.. said...

சகோ...நினைவுகள் ரொம்ப நெகிழ்ச்சி...அனேகமா எல்லாருமே அந்த மிட்டாய் கிழவியை பள்ளி பருவத்தில்....அவங்க அவங்க பள்ளிகிட்டே பார்த்து இருப்போம்...சோளம் விக்கும் கிழவி..கிழங்கு விக்கும் கிழவி..மாங்காய் விக்கும் கிழவி ...இப்படி..ம்ம்...படிக்க படிக்க நிஜமாவே என் பள்ளி பிராயத்துக்கு போயிட்டேன்...ரொம்ப நல்லா இருந்தது சகோ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சாரி மச்சி உடனே வரமுடியல, கலக்கிட்டே............ பள்ளிக்கொடம் பள்ளிக்கொடம் தான்............!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா ஜோதி டீச்சரப் பத்தி ஒன்னுமே சொல்லல?

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்னுடன் தங்களது நினைவுகளையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி....

Unknown said...

நினைவுகளை அருமையாக சொல்லியிருக்கீங்க நண்பா..

புது டெம்ப்ளேட் சூப்பர்..

Jaleela Kamal said...

பழைய ஞாபகங்களை நினைவு கூறுவதஏ மிக பெரிய சந்தோஷம் தான்.

உங்களுக்கு நட்பு வட்ட விருது கொடுத்துள்ளேன் பெற்றுகொள்ளுங்கள்.