இந்தியாவைப் பற்றி - அறிந்ததும் அறியாததும் பாகம் - 2
யேல் பல்கலைகழகத்தில் ( அமெரிக்கா ) டாக்டர் பட்டம் பெற்ற ஒரே தமிழர் அறிஞர் அண்ணாதுரை .

இந்தியாவில் முதல் ரயில் போக்குவரத்து பம்பாய் - குர்லா இடையே உண்டானது.

தமிழ்நாட்டில் தயாராகும் துணிகளில் 27 % கைத்தறி மூலமே உருவானது.

சென்னையில் டெலிவிஷன் நிலையம் 15 - 08 - 1975 ல் தொடங்கப்பட்டது.

மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஒரு முறை கூட விமானப் பயணம் செய்தது கிடையாது.

தமிழகத்தில் அதிசய இடங்களில் ஒன்றாக விளங்கி வருவது V . G . P தங்க கடற்கரையாகும்.

இந்தியாவில் அதிக அளவு அணைகள் உள்ள மாநிலங்கள் - மராட்டியம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா.

உலகிலேயே அதிக அளவு தபால் பட்டுவாடா செய்யும் நாடு இந்தியா .

தமிழ்நாட்டில் முதல் தொலைபேசி இணைப்பு வசதி கல்கத்தாவுக்கும் டைமண்ட் ஹார்பர் துறைமுகத்திற்கும் இடையே போடப்பட்டது.

குதுப்மினார் என்பதே மொகலாயர்களால் கட்டப்பட்ட கோபுரங்களில் மிகவும் உயரமானது.

பழங்கால கண்ணாடி மாளிகை ஓன்று பாண்டிச்சேரியில் உள்ளது.

1197 தீவுகள் இந்தியாவுக்கு சொந்தமாக உள்ளது.

இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ஆனந்தி பாய் ஜோஷி என்பவர்.

தேசிய விருது பெற்ற முதல் தமிழ் கவிஞர் கவியரசு கண்ணதாசன்.

தமிழ்நாடு என்ற பெயரை சென்னைக்கு அளித்தவர் அறிஞர் அண்ணா .

நடிகராக இருந்து முதலமைச்சர் ஆனவர்கள் இந்தியாவை பொறுத்தவரை
- - என் . டி . ராமாராவ்
- - எம் . ஜி . ராமச்சந்திரன்
- - ஜெயலலிதா

ஆதிசங்கரர் பிறந்த ஊர் கேரளாவில் உள்ள காலடி .

..........................

பி . குறிப்பு :- இங்கே குறிப்பிட்டிருக்கும் செய்திகள் பத்து வருடங்களுக்கு முன்பு சேகரிக்கப்பட்டது. ஒருவேளை சில மாற்றங்கள் இருக்கலாம்.................................................... பதிவுப் படம் ............................................

3 comments:

NIZAMUDEEN said...

நெஜமாவே
தகவல்கள்
நல்லா
இருக்குங்க...

வெறும்பய said...

நன்றி NIZAMUDEEN

annamalai said...

CN.Annadurai did not get any PhD in Yale university.He visited just like any other tourist.It was a mere propaganda.You can either check
with Yale or visit
http://www.tamilhindu.com/2010/09/haunted_corpse_tells_arinjar_story/