அறிந்ததும் அறியாததும் 4 - "ஓசனிச்சிட்டு" (HUMMING BIRD)

"ஓசனிச்சிட்டு" பெயரை கேட்டாலே வித்யாசமா இருக்குதில்ல , ஆமாங்க நாம் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு அதிசயமான ஒரு பறவைங்க இந்த ஓசனிச்சிட்டு, அட அதுதாங்க HUMMING BIRD .உலகத்திலுள்ள பறவை இனத்திலேயே மிக மிகச் சிறிய பறவை இந்த ஓசனிச்சிட்டுகள். இவை சிறகடித்துக்கொண்டே பூவிலிருந்து தேனை உறிஞ்சு வாழும். ஓசனிச்சிட்டு பேரினத்தில் 320 வகைகள் உள்ளன. ஓசனிச்சிட்டுகள் பறவை இனத்திலேயே மிக அதிக வகைகள் கொண்ட ஒரு பேரினமாகும்.சுண்டு ஓசனிச்சிட்டு என்ற இவ்வினத்தைச் சேர்ந்த பறவை 5 செ.மீ நீளமே கொண்டுள்ளது, எடையும் 1.8 கிராம் மட்டுமே. இதன் இறக்கைகள் நொடிக்கு 60-80 தடவை மிகமிக வேகமாக அடிக்கும். இந்த பறவை கியூபா நாட்டில் காணப்படுகிறது.

ஓசனிச்சிட்டுகளுள் மிகப் பெரியது பேரோசனிச்சிட்டு ஆகும். இந்த பேரோசனிச்சிட்டு 18-20 கிராம் எடையும் ஏறத்தாழ 21-22 செ.மீ நீளமும் கொண்டது. இவை நொடிக்கு 8-10 முறைகள்தான் இறக்கைகளை அடிக்கின்றன, இவ்வகை தென் அமெரிக்காவின் ஆண்டீய மலைத்தொடர்ப் பகுதிகளில் ஈக்வெடோர் முதல் தெற்கே சிலி, அர்ஜென்டினா நாடுகள் வரை உள்ள பகுதிகளில் வாழ்கின்றன.
நடு எடை உள்ள ஓசனிச்சிட்டுகள் நொடிக்கு 20-25 முறைகள் சிறகடிக்கின்றன.

இப்பறவைகளின் புகழ்பெற்ற சிறப்பியல்புகளின் ஒன்று அந்தரத்தில் பறந்துகொண்டே பூவில் இருந்து தேன் உண்ணுவது, இது பறந்துகொண்டே பின்னோக்கியும் நகரவல்லது; நெட்டாக, நேர் செங்குத்தாக, மேலெழுந்து பறந்து நகரவும் வல்லது.
ஓசனிச்சிட்டுகள் பூவுக்குப் பூ தாவி பூந்தேன் உண்ணும் பொழுது செடிகளுக்குத் தேவையான மகரந்த சேர்க்கை நிகழ்கின்றது. ஓசனிச்சிட்டுகள் பூந்தேன் நிறைந்த பூக்களை நாடிப் பூவில் இருந்து பூந்தேன் உண்கின்றன. இனிப்புப் பொருள் மிகுந்துள்ள பூக்களையே அதிகம் விரும்புகின்றன.

பெரும்பாலான ஓசனிச்சிட்டுகள் கண்ணைக் கவரும் பளபளப்பாக ஒளிரும் நிறங்கள் கொண்ட தோற்றம் கொண்டவை. பெரும்பாலும் ஆண் பறவைகள் அழகான நிறம் கொண்டிருக்கும். பெண்பறவைகள் அப்படி இருக்காது, ஆனால் இருபால் பறவைகளுக்கும் ஒளிரும் நிறங்கள் காணப்படும்.ஹம்மிங் பறவை from Jayanth on Vimeo.

இந்த பகிர்வு உங்களை கவர்ந்திருந்தால் (இல்லையென்றாலும்) நீங்க வந்ததுக்கு அடையாளமா கருத்துக்களை சொல்லிவிட்டு போகலாமே...

மீண்டும் சிந்திப்போம்...
21 comments:

பிரவின்குமார் said...

அருமை நண்பரே..! புதுமையான சுவாரஸ்யமான தகவல்கள்..! படங்களும் மிக அருமை..!

வெறும்பய said...

சகோதரர் பிரவீன்குமார் அவர்களுக்கு ..

வந்தமைக்கு வந்தனம்...

அஹமது இர்ஷாத் said...

Very Good Information....

வெறும்பய said...

அஹமது இர்ஷாத் said...

Very Good Information....

//

Thanks Brother..

Chitra said...

Thats cool! You know what .... We have few lovely hummingbirds that come to our backyard. I love to watch them. They are cute! :-)

வவ்வால் said...

Osani chittu peyare arumaiya irukku,pudiya thagaval nanri. vazhakkama thenchittu solvanga. Aanthaiyai moongai enru sila idangalil padithullen. Makkal payan paduthuvathillai.

Puthiya peyarkalai puzhakathirku kondu varunum.

Osani siragukalai asaippathan moolame humming soumd varukirathu enpathaiyum serthu irukkalam.

Vinnai thaandi padathila vara hosana song ,osani chittuva than kurikutho?

எப்பூடி.. said...

புதிய தகவலுக்கு நன்றி

//hummingbirds//

இந்த சொல்லை ஆரம்பகால நோக்கியா போனின் ரிங்கிங் டோனில் பார்த்த ஞாபகம்.

ஜில்தண்ணி said...

ஓசனிச்சிட்டு அறியாத பெயர் தான்,இவற்றை நான் தேன் சிட்டுக் குருவி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்

அப்பறம் அந்த காணொலி நல்லாயிருக்குங்க(அது என்ன கேமரால எடுத்திருப்பாங்க)

பகிர்வுக்கு நன்றி

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

புதுமையான தகவல்கள் நண்பரே . எனக்கு ஒரு சந்தேகம் இப்பொழுது இந்த பறவைகள் இந்தியாவில் இருக்கிறதா ?

வெறும்பய said...

Chitra said...

Thats cool! You know what .... We have few lovely hummingbirds that come to our backyard. I love to watch them. They are cute! :-)

//

நன்றி சகோதரி ...

வந்தமைக்கும், தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கும்..

வெறும்பய said...

வவ்வால் said...

Osani chittu peyare arumaiya irukku,pudiya thagaval nanri. vazhakkama thenchittu solvanga. Aanthaiyai moongai enru sila idangalil padithullen. Makkal payan paduthuvathillai.

Puthiya peyarkalai puzhakathirku kondu varunum.

Osani siragukalai asaippathan moolame humming soumd varukirathu enpathaiyum serthu irukkalam.

Vinnai thaandi padathila vara hosana song ,osani chittuva than kurikutho?

///

தகவல்களுக்கு நன்றி சகோதரா ..

விட்டுப்போன தகவலுக்கு மன்னிக்கவும்.

இறக்கைகள் நொடிக்கு 60-80 தடவை மிகமிக வேகமாக அடிப்பதால் "உசுஉசு " என்று எழும் ஒலியால் இதற்கு ஓசனிச்சிட்டு என்று பெயர். ஓசனித்தல் என்றால் பறவைகளின் இறக்கைகள் விரைந்து அடிக்கும் பொழுது எழும் ஒலி என்று பொருள்

வெறும்பய said...

எப்பூடி.. said...

புதிய தகவலுக்கு நன்றி

//hummingbirds//

இந்த சொல்லை ஆரம்பகால நோக்கியா போனின் ரிங்கிங் டோனில் பார்த்த ஞாபகம்.

///

வாங்கப்பு நல்லாயிருக்கியளா...

தகவலுக்கு நன்றி சகோதரா.

வெறும்பய said...

ஓசனிச்சிட்டு அறியாத பெயர் தான்,இவற்றை நான் தேன் சிட்டுக் குருவி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்

அப்பறம் அந்த காணொலி நல்லாயிருக்குங்க(அது என்ன கேமரால எடுத்திருப்பாங்க)

பகிர்வுக்கு நன்றி

///

ஓசனிச்சிட்டுகளின் தமிழ் பெயர் சுரும்புச்சிட்டு என்பதாகும்.

மன்னிக்கவும் நண்பரே அவர்கள் பயன்படுத்திய கேமரா பற்றி தெரியவில்லை (பார்த்தால் கிராபிக்ஸ் என்று தோன்றுகிறது)

வெறும்பய said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

புதுமையான தகவல்கள் நண்பரே . எனக்கு ஒரு சந்தேகம் இப்பொழுது இந்த பறவைகள் இந்தியாவில் இருக்கிறதா ?

///

நன்றி நண்பரே.

இப்பறவைகள் இப்போது இந்தியாவில் இருப்பதாக தெரியவில்லை..

Anonymous said...

vanakkam its very nice keep it up

ப.செல்வக்குமார் said...

கண்டிப்பா கவர்ந்திருந்ததுங்க ... அதுவும் ஹம்மிங் birdக்கு ஓசனிச்சிட்டு அப்படிங்கற பேரு இருக்கறதே இதுக்கப்புறம் தானா எனக்கு தெரியும் .. படங்கள் அருமை .. !!!

santhanakrishnan said...

தகவலுக்கு நன்றி.
நம்ம ஊர் குருவிகளையும்
இப்படித்தான் படத்திலே பாக்கணும்
போலருக்கு.

Mrs.Menagasathia said...

சூப்பர்ர்!!தெரியாத தகவலை தெரிந்துக் கொண்டேன்..பகிர்வுக்கு நன்றி!!

அன்புடன் மலிக்கா said...

அம்மாடியோ அழகான சிட்டாவுல இருக்கு.
ஏங்க வெறும்பய. [அச்சோ உங்க பேரமாத்துங்கோ சங்கடமா இருக்கு கூப்பிட]

இந்த சிட்ட எங்க வீட்டுப்பக்கம் வரச்சொல்லுங்க.

தகவலும் சிட்டும் சூப்பர்..

வெறும்பய said...

@ ப.செல்வக்குமார்

@ Mrs.Menagasathia

@ santhanakrishnan

வருகைக்கு நன்றிகள்...

வெறும்பய said...

அன்புடன் மலிக்கா said...

அம்மாடியோ அழகான சிட்டாவுல இருக்கு.
தகவலும் சிட்டும் சூப்பர்..வருகைக்கு நன்றி சகோதரி..

///

ஏங்க வெறும்பய. [அச்சோ உங்க பேரமாத்துங்கோ சங்கடமா இருக்கு கூப்பிட]

நெஜமாவே நான் வெறும்பய (எதுவுமே தெரியாத) தானுங்க..

///

இந்த சிட்ட எங்க வீட்டுப்பக்கம் வரச்சொல்லுங்க.நேத்தைக்கே சிட்டுகள அனுப்பினேன்,
அதுக அட்ரெஸ் தெரியாம திரும்பி என் வீட்டுக்கே வந்திச்சு...