இன்றைய இயக்குனர் 3 - ஞான ராஜசேகரன்.


மகாகவி பாரதியையும், பெரியாரையும் பற்றி கேள்விபட்டிருக்கிறேன், புத்தகங்களில் படித்திருக்கிறேன் ஆனால் பார்த்ததில்லை. இவர்களை நம் கண் முன்னால் நிறுத்தியவர் எனது இன்றைய இயக்குனர் திரு ஞான ராஜசேகரன் அவர்கள். மகாகவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போகிறோம் என்று பல முன்னணி இயக்குனர்களும், நடிகர்களும் அறிவிப்புகள் விட்ட போதிலும் அதை சாதித்து காட்டிய பெருமை இயக்குனர் ஞான ராஜசேகரனையே சாரும்.

தனித்துவமான படங்களை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வமுடையவர், இளம்வயதிலேயே சினிமாவில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்த இவர் ஒரு குறும்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். ஞான ராஜசேகரன் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே சிறந்த படைப்புகளாகவே அமைந்தன.

மோகமுள்:

1995 ம் ஆண்டு ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம். இத்திரைப்படம் எழுதப்பட்ட காலத்தில் சர்ச்சைகளை தோற்றுவித்த தி. ஜானகிராமனின் மோகமுள் என்ற நாவலாகும். இந்த படம் கருநாடக சங்கீதத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட படம்.


மோகமுள் திரைப்படம் இந்திரா காந்தி தேசிய விருதை தமிழுக்கு பெற்றுத்தந்தது.

முகம்:

1999 ல் வெளிவந்த திரைப்படம். தமிழ் சினிமாவில் வில்லனாகவே அறியப்பட்ட ஒரு சிறந்த நடிகர் நாசர் மீது நம்பிக்கை வைத்து, அவை கதாநாயகனாக அறிமுகம் செய்த படம்.

பாரதி:

2000 ல் இளையராஜாவின் இசையில், தங்கர்பச்சான் ஒளிப்பதிவில், ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்தது. இத்திரைப்படம் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மகாகவி பாரதியின் வேடத்தில் ஷியாஜி ஷிண்டே என்ற மராட்டிய நாடக நடிகரை நடிக்க வைத்தார்.


பாரதி திரைப்படம் 2001 ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது.


பெரியார்:

2007 ல் வெளியானது, இத்திரைப்படம் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. பெரியாராக சத்தியராஜ் நடித்திருந்தார்.


பெரியார் திரைப்படத்திற்கு தமிழக அரசால் 95 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

ஞான
ராஜசேகரன் எழுதிய வயிறு, மரபு மற்றும் பாடலிபுத்திரம் என்ற நாடகங்கள் 1980 ல் வயிறு என்ற தொகுப்பாக வெளிவந்தது.

என்னை கவர்ந்த இயக்குனர்களோடு மீண்டும் சந்திக்கிறேன்....

9 comments:

ஜில்தண்ணி - யோகேஷ் said...

எதார்த்தமான படைப்பாளி

என்னை மிகவும் கவர்ந்த படம் பாரதி

அருமயான இயக்குனர்களையும்,படங்களையும் எடுத்துக் காட்டும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

தொடருங்க நன்பரே

அஹமது இர்ஷாத் said...

நல்ல புனைவு..அருமை...

Riyas said...

நல்ல தொகுப்பு..

பாரதி படம் மட்டும்தான் நான் பார்த்திருக்கிறேன்.

எப்பூடி.. said...

கோலங்கள் நாடகத்தில் ரமணா என்னும் பெயரில் நடித்த நடிகரது முதற்ப்படம் என்று நினைக்கிறேன், சரியா?

எப்பூடி.. said...

மன்னிக்கவும், எந்தப்படமேன்று குறிப்பிட மறந்து விடேன், 'மோகமுள்' திரைப்படம்தான் நான் குறிப்பிட்டது.

வெறும்பய said...

@ நன்றி ஜில்தண்ணி - யோகேஷ்

@ நன்றி அஹமது இர்ஷாத்

@ நன்றி Riyas

@ நன்றி எப்பூடி..

வந்தமைக்கும், உங்களின் கருத்துக்களுக்கும்.

வெறும்பய said...

எப்பூடி.. said...

கோலங்கள் நாடகத்தில் ரமணா என்னும் பெயரில் நடித்த நடிகரது முதற்ப்படம் என்று நினைக்கிறேன், சரியா?

மன்னிக்கவும், எந்தப்படமேன்று குறிப்பிட மறந்து விடேன், 'மோகமுள்' திரைப்படம்தான் நான் குறிப்பிட்டது.

///


அவரே தான், சமீபத்தில் கதை என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்..

Chitra said...

ஒரு நல்ல இயக்குனரையும் அவரின் அருமையான படைப்புகளையும் தொகுத்து தரும் இந்த தொடர் இடுகைக்காக பாராட்டுக்கள்!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை