இன்றைய இயக்குனர் 2 - மகேந்திரன் (உதிரிப்பூக்கள்)


என்னை கவர்ந்த இயக்குநர்களை உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்
இந்த பதிவு ..
தமிழ் திரையுலக இயக்குனர்களில் என்றும் நினைவில் நிற்பவர்களில் ஒருவர் இயக்குனர் மகேந்திரன் அவர்கள். இவருடைய படங்கள் ஆழமான கதையும், மென்மையான உணர்வுகளையும் சொல்லக் கூடியதாகவும் இருக்கும்.
இயக்குனர் மகேந்திரன் அவர்களின் முதல் படமான முள்ளும் மலரும் சினிமா என்பது விஷுவல் மீடியா என்பதை தமிழ் சினிமாவுக்கு எடுத்து சொன்னப் படம். முள்ளும் மலரும் படம் 1978 ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்தது.இத்திரைப்படம் உமா சந்திரன் எழுதி கல்கி வார இதழில் வெளிவந்த கதையாகும். இப்படம் ரஜினிகாந்த்துக்கு புகழ் தேடித்தந்த படமாகும். ரஜினிகாந்தின் உன்னத வளர்ச்சிக்கு காரணமானவர்களில் இயக்குனர் மகேந்திரன் முக்கியமானவர் எனலாம்.
இவரது இரண்டாவது படமான உதிரிப்பூக்கள் 1979 ல் அதிரடியான இசை இல்லாமல், ஆர்ப்பாட்ட காட்சிகள் இல்லாமல்,இயல்பான ஒளியில் யதார்த்தமான நடிப்பில் வெளிவந்ததது. இந்த படத்தின் மொத்த வசனத்தையும் இரண்டு பேப்பரில் எழுதிவிடலாம். படம் முழுவதும் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது. இப்படம் பல பாராட்டுகளைப் பெற்றது.
மகேந்திரன் அவர்களின் இந்த இரண்டு படங்களும் தமிழ் சினிமா வரலாற்றில் மிகச் சிறந்த படங்களாக கருதப் படுகிறது. மேலும் ஜானி, மெட்டி, நெஞ்சத்தை கிள்ளாதே என 12 படங்களை இயக்கியுள்ளார், இவை அனைத்துமே பெயர் சொல்லும் படங்களாகவே அமைந்ததன.

இயக்குனர் மகேந்திரன் அவர்கள் தங்கப்பதக்கம், காளி, கள்ளழகர், அழகிய பூவே என 25 படங்களுக்கு மேல் கதை, வசனம், திரைக்கதை எழுதியுள்ளார். இவர் இன முழக்கம், துக்ளக் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். மேலும் சினிமாவும் நானும் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

2005 ம் ஆண்டு விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த சச்சின் என்ற திரைப்படத்தை இயக்கிய ஜான் மகேந்திரன் என்பவர் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த படங்கள் என்றாலும், சிறந்த ஐந்து படங்கள் என்றாலும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் படம் அந்த பட்டியலில் இருக்கும்.என்னைக் கவர்ந்தவர்கள் இன்னும் வருவார்கள்...

7 comments:

எப்பூடி.. said...

என்னை பொறுத்தவரை முள்ளும் மலரும் 'காளி' மாதிரி இதுவரை ரஜினியை யாரும் 100 வீதம் பயன்படுத்தவில்லை, உண்மையை சொல்லப்போனால் காளியின் மாஸ்தான் இன்றைய ரஜினியின் மாஸ் ஹீரோயிசத்தின் ஆரம்பம். நெஞ்சத்தை கிள்ளாதே எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று, 'பருவமே 'பாடலும் அசோக்குமாரின் ஒளிப்பதிவும் பிரம்மாதம்.

vijayan said...

மெட்டி ஒரு அற்புதமான காவியம்.

director said...

என்னைப்பொறுத்தவரை, (தமிழ் இயக்குனர்கள்.ல) என்னோட டாப் டென் ( 2 ) இயக்குனர்கள்.ல இவரும் ஒருத்தர். இவரோட படங்கள பாத்தாலே நல்ல படம் எடுக்கறதுக்கு ஒரு வெறி வரும். புதுசா வர்றவங்க எத்தனபேர் இவரோட எல்லா படங்களையும் பாத்துருப்பாங்க சொல்லுங்க? நல்ல பதிவு இன்னும் சினிமாவ பத்தி நெறைய பயலே.
சரவணன்,
குருமபலூர்

director said...

என்னைப்பொறுத்தவரை, (தமிழ் இயக்குனர்கள்.ல) என்னோட டாப் டென் ( 2 ) இயக்குனர்கள்.ல இவரும் ஒருத்தர். இவரோட படங்கள பாத்தாலே நல்ல படம் எடுக்கறதுக்கு ஒரு வெறி வரும். புதுசா வர்றவங்க எத்தனபேர் இவரோட எல்லா படங்களையும் பாத்துருப்பாங்க சொல்லுங்க? நல்ல பதிவு இன்னும் சினிமாவ பத்தி நெறைய எழுதுங்க பயலே.
சரவணன்,
குருமபலூர்

வெறும்பய said...

நன்றி எப்பூடி..

நன்றி vijayan

நன்றி director

வந்தமைக்கும் வாசித்தமைக்கும்..

அப்பாவி தங்கமணி said...

சூப்பர் selections ...

வெறும்பய said...

அப்பாவி தங்கமணி said...

சூப்பர் selections ...
//

நன்றி சகோதரி அப்பாவி தங்கமணி..