மானே என்றேன்..
மானங்கெட்டவனே என்றாள் -
மனம் தளரவில்லை.
கண்ணே என்றேன்..
போடா கழுதை என்றாள் -
நான் கலங்கவில்லை.
நீயின்றி நானில்லை என்றேன்..
இல்லாமல் போகப்போகிறாய் என்றாள் -
அவளை விட்டு நகரவில்லை.
என் உலகமே நீதான் என்றேன்..
உன்னை உதைக்கப் போகிறேன் என்றாள் -
அவளை உதறவில்லை
அழகாய் இருக்கிறாய் என்றேன்..
அடி வாங்கப் போகிறாய் என்றாள் -
அவளை அலட்சியப் படுத்தவில்லை
என் அகிலமும் நீ தான் என்றேன்
சற்றும் யோசிக்காமல்
அண்ணா ...என்றாள்
பேசாமல் திரும்பி வந்துவிட்டேன்....
இதுக்கும் மேல அங்க நின்னா நமக்கு என்ன மரியாதை ...
19 comments:
நல்லா இருக்கே,
உங்களோட சொந்த கதையோ ..
அருமை.
cRaZy said...
நல்லா இருக்கே,
உங்களோட சொந்த கதையோ ..
///
உண்மையெல்லாம் வெளியில் சொல்லக்கூடாது
$ நன்றி Crazy
$ நன்றி Malgudi
//என் அகிலமும் நீ தான் என்றேன்
சற்றும் யோசிக்காமல்
அண்ணா ...என்றாள்//
Why blood ahhhhh same blood.....
நல்லா இருந்ததுங்க....
anna sowkkiyamaa
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
anna sowkkiyamaa
///
ஒரு குறையும் இல்ல தம்பி.. .
ஹா ஹா ஹா.... சூப்பர்...அடி பலம் தான் போல... பேரு தான் வெறும்பய. விசயம் உள்ள ஆளு தான் நீங்க... கலக்கல்
அப்பாவி தங்கமணி said...
ஹா ஹா ஹா.... சூப்பர்...அடி பலம் தான் போல... பேரு தான் வெறும்பய. விசயம் உள்ள ஆளு தான் நீங்க... கலக்கல்
///
நன்றி... நன்றி... நன்றி...
ரெம்ப நல்லாயிருக்கு உங்க கவிதை. ரசித்தேன், சிரித்தேன்.
//இதுக்கும் மேல அங்க நின்னா நமக்கு என்ன மரியாதை
என்னமோ இதுக்கு முன்னாடி ரெம்ப மரியாதை கொடுத்த மாதிரி.
குந்தவை said...
ரெம்ப நல்லாயிருக்கு உங்க கவிதை. ரசித்தேன், சிரித்தேன்.
என்னமோ இதுக்கு முன்னாடி ரெம்ப மரியாதை கொடுத்த மாதிரி.
///
நன்றி சகோதரி..
அப்படீனா அதெல்லாம் மரியாதை இல்லையா.?
வெறும்பயன்னு யாரு சொன்னது ,நிறைய மேட்டர் இருக்கு போல. ,ரொம்ப நல்லா இருக்கு
ManA said...
வெறும்பயன்னு யாரு சொன்னது ,நிறைய மேட்டர் இருக்கு போல. ,ரொம்ப நல்லா இருக்கு
///
ஐயையோ ரொம்ப புகழாதிங்க .. எனக்கு வெக்கமா இருக்கு..
நன்றிகள் வந்தமைக்கும் வாசித்தமைக்கும்..
ரெம்ப நல்லாயிருக்கு உங்க கவிதை. ரசித்தேன், சிரித்தேன்
காமெடிப் படங்கள் பார்த்திருக்கிறேன். இப்பொழுது காமெடிக் கவிதையையும் வாசித்து விட்டேன். நல்லா இருக்கு :-)
Post a Comment