தமிழ் மனம் விருதுகள் அனைவரும் அறிந்ததே. அந்த போட்டியில் கலந்து கொள்ளாத பதிவர்களே இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எனது பதிவுகள் எனைத்தும் மொக்கையாக இருந்தாலும் அதிலிருந்து சில சுமாரான பதிவுகளை தேர்ந்தெடுத்து ஒரு ஆர்வக்கோளாறில் மூன்று பதிவுகளை நானும் போட்டிக்கான பகுதியில் இணைத்திருந்தேன். இது நடந்து சில வாரங்கள் ஆகிவிட்டன. ஏறக்குறைய இந்த விஷயத்தை மறந்து விட்டேன் எனலாம். சொல்லப் போனால் எந்த பகுதியில் எந்த இடுகையை இணைத்தேன் என்பதையே மறந்து விட்டேன்.
இன்று எதேச்சையாக தமிழ்மணத்தில் ஏதாவது விசேஷம் இருக்கிறதா என்று நோட்டம் விடுகையில் கண்ணில் பட்டது தமிழ்மணம் விருதுகள் 2010 முதல் சுற்று முடிவுகள் . அப்போது தான் நானும் இந்த போட்டியில் பங்கேற்றதும் எனது சில இடுகைகளை இணைத்ததும் நினைவுக்கு வந்தது. நமது இடுகை எப்படியும் இங்கு இருக்கப்போவதில்லை என்ற நம்பிக்கையில் யார் யாரது இடுகைகள் எல்லாம் முதல் சுற்றில் தேர்வாகியிருக்கிறது என்று ஒவ்வொரு பகுதியாக பார்த்துக்கொண்டிருக்கையில் அங்கே ஒரு பிரிவில் பார்த்த ஒரு பதிவை என்னால் நம்பவே முடியவில்லை. என்னுடைய ஒரு பதிவும் இரண்டாவது சுற்றிற்கு தேர்வாகியிருக்கிறது.
தமிழிசை, நடனம், தமிழ் கிராமியக் கலைகள் தொடர்பான கட்டுரைகள்
என்ற பிரிவில்
தமிழிசை & தமிழிசைக் கருவிகள் பற்றி - அறிந்ததும் அறியாத்ததும் - 3
என்ற பிரிவில்
தமிழிசை & தமிழிசைக் கருவிகள் பற்றி - அறிந்ததும் அறியாத்ததும் - 3
வாக்களித்து முதல் சுற்றில் வெற்றி பெற செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி, மற்றும் மக்களே யார் யார் இன்னும் இந்த இடுகைக்கு வாக்களிக்கவில்லையோ அவர்கள் கோழி பிரியாணிக்கும், 2000 / - ரூபாய் பணத்திற்கும் (ஒரு ஓட்டுக்கு இப்போ 2000/- ரூபாய் தானே தறாங்க) ஆசைப்படாமல் சென்று வாக்களியுங்கள்.
..நன்றி..
************************************************************ *****************
******************************
சீரான எழுத்துக்களால் கவிதைகள், கதைகள் என எழுதி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அலைவரிசை நண்பர் அஹமத் இர்ஷாத் அவர்கள் கடந்த ஜூலை மாதம் என்னை தொடர் பதிவெழுத அழைத்திருந்தார். என்ன காரணமோ தெரியவில்லை இன்று வரை அந்த பதிவை என்னால் எழுத முடியவில்லை. ரொம்ப கஷ்டமான விசயமாக இருக்குமோ என்று நீங்கள் யோசிக்கலாம், உண்மை தான்.. நீங்களே ஏதாவது ஒரு தலைப்பை தேர்வு செய்து எழுதுங்கள் என்று முழு சுதந்திரமும் தந்திருந்தார்.
ஒரு தலைப்பை தந்து இந்த தலைப்பில் தான் எழுத வேண்டும் என்றாலே நமக்கு கண் விழி பிதுங்கி போய் விடும். நானும் நண்பர் அன்பாக அழைத்தாரே எப்படியாவது ஏதாவது ஒரு தலைப்பை வைத்து எழுதி விட வேண்டுமென்று எழுத முடிவு செய்து மாதங்கள் ஐந்து ஆகி விட்டது. ஆனால் இன்னும் என்னால் எந்த தலைப்பையும் தேர்வு செய்து எழுத முடியவில்லை. எப்படியோ அதையும் காரணமா வச்சு ஒரு பதிவு ரெடி பண்ணியாச்சு..
************************************************************ *****************
நீ நான் அவன் என்ற தளத்தில் எழுதும் நண்பர் வெற்றி அவர்கள் என்னை கமலின் சிறந்த பத்து படங்கள் என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார். அவருக்காக எனக்கு பிடித்த சில படங்களை இங்கே பகிர்கிறேன்.
- அன்பே சிவம்
- வேட்டையாடு விளையாடு
- வசூல் ராஜா M B B S
- பம்மல் K சமந்தம்
- பஞ்ச தந்திரம்
- அவ்வை சண்முகி
- அபூர்வ சகோதரர்கள்
- சத்யா
- தெனாலி
- மைக்கேல் மதன காமராஜன்.
************************************************************ *****************
அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு.. ஒரு வழியா நான் ப்ளாக் எழுத ஆரம்பிச்சதிலிருந்து போன வாரம் வரைக்கும் என்னையும் மதிச்சு கூப்பிட்ட அத்தனை தொடர்பதிவுகள் எல்லாம் எழுதி முடிச்சாச்சு.. இது தான் என்னோட கடைசி பதிவும், யாருல அங்கே விசிலடிச்சு கை தட்டி சிரிக்கிறது... படுவா கொன்னேபுடுவேன்.. ஓவரா சந்தோஷ படாதீங்கல.. நான் சொன்னது இந்த வருசத்துக்கு.. ஓகே மக்கள்ஸ் எல்லாருக்கும் என்னோட புத்தாண்டு நல்வாழ்த்துக்களை இப்பவே சொல்லிக்கிறேன்.. சந்தோசமா அடுத்தவங்களுக்கு சங்கடமில்லாம கொண்டாடுங்க..
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.