இன்றைய இயக்குனர் - அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan)


என்னை கவர்ந்த இயக்குநர்களைப் பற்றி ஒரு பதிவு , உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்..




அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan, ஜூலை 3 , 1942)



கேரளத்தை சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். மலையாளப்படங்களை உலகத்தரத்திற்கு உயர்த்தியவர் இவர். 1972ஆம் ஆண்டில் சுயம்வரம் என்ற தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிக்க புகழ்பெற்றவை. உலக திரைப்பட விமர்சனப் பரிசினை, ஐந்து முறை இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து பெற்றன.
அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய திரைப்படங்கள்.
  • நிழல்குத்து (2002)
  • கதாபுருஷன் (1996)
  • விதேயன் (1994)
  • மதிலுகள் (1990)
  • அனந்தரம் (1987)
  • முகாமுகம் (1984)
  • எலிப்பத்தாயம் (1981)
  • கொடியெட்டம் (1977)
  • சுயம்வரம் (1972)


மேலும் பல குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் , சினிமாயுடே லோகம் {சினிமாவின் உலகம்},நிர்மால்யம் மற்றும் எலிப்பத்தாயம் போன்ற நூலகளைய்ம் எழுதியுள்ளார். இவை அனைத்தும் தமிழ் மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டது. இதில் , சினிமாயுடே லோகம் 1983 வருட தேசிய விருது பெற்ற புத்தகம்.

இவருடைய கலைப் பணிக்காக 2004ஆம் ஆண்டிற்கான தாதாசாஹெப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. 1983ஆம் ஆண்டில் இந்தியாவின் தலைசிறந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

என்னை கவர்ந்தவர்கள் இன்னும் வருவார்கள்....

13 comments:

பனித்துளி சங்கர் said...

ஒரு சிறந்த பகிர்வு நண்பரே . இப்பொழுதே அவரின் படங்களைப்பார்க்கவேண்டும் என்ற ஆவலை அதிகரித்துவிட்டீர்கள் .

ஜெயந்த் கிருஷ்ணா said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஒரு சிறந்த பகிர்வு நண்பரே . இப்பொழுதே அவரின் படங்களைப்பார்க்கவேண்டும் என்ற ஆவலை அதிகரித்துவிட்டீர்கள்

///

நன்று நண்பரே ..

அனைத்துமே கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்கள்..

மாதவராஜ் said...

சுருக்கமாக பதிவு செய்திருந்தாலும், அருமை. தொடருங்கள். அடூரின் ஓவியம் மிகவும் கவர்ந்திருக்கிறது.

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாதவராஜ் said...

சுருக்கமாக பதிவு செய்திருந்தாலும், அருமை. தொடருங்கள். அடூரின் ஓவியம் மிகவும் கவர்ந்திருக்கிறது.

///

நன்றி அண்ணா .,

என் வலைத்தளத்தில் உங்களோட முதல் பின்னூட்டம் இது..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப நல்ல பதிவுங்க.. தொடர்ந்து எழுதுங்கள்.. மீண்டும் வருகிறேன்.. :)

செ.சரவணக்குமார் said...

அடூரின் ஓவியம் மிக அருமை.

தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே.

vijayan said...

கடந்த ஆண்டு பெங்களூர் திரைபடவிழாவில் கலந்துகொண்ட போது,சிவாஜியை வைத்து ஒரு படம் பண்ணவேண்டும் என்ற ஆசை நிறைவேறவில்லை என்று அடூர்பத்திரிக்கையாளர்களிடம் சொன்னார்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நன்றி சகோதரி ஆனந்தி

நன்றி செ.சரவணக்குமார்

வந்தமைக்கும் வாசித்தமிக்கும்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

vijayan said...

கடந்த ஆண்டு பெங்களூர் திரைபடவிழாவில் கலந்துகொண்ட போது,சிவாஜியை வைத்து ஒரு படம் பண்ணவேண்டும் என்ற ஆசை நிறைவேறவில்லை என்று அடூர்பத்திரிக்கையாளர்களிடம் சொன்னார்.

///

அடூரின் ஆசை மட்டும் நிறைவேறியிருந்தால்.... உலகத்தரம் வாய்ந்த படைப்பை பார்த்திருக்கலாம்..

இது நமக்கும் அது ஏமாற்றம் தான்...

Unknown said...

நல்பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

Thanks Mr. Kalanesan

ரைட்டர் நட்சத்திரா said...

அடூர் திரைபடங்கள் பற்றி அறிய mtvenkateshwar.blogspot.com

ரைட்டர் நட்சத்திரா said...

அடூர் திரைபடங்கள் பற்றி அறிய mtvenkateshwar.blogspot.com