ஜோதி - VI

கதையின் முந்தைய பாகங்கள்..

============================================================


ஷீலா சொன்னதை கேட்டு எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

”என்ன சொல்ற ஷீலா? நீ சென்னை வரக் காரணம் ஜோதியா?”

“ஜெயந்த். நான் காலேஜ்ல படிக்கிறப்பா காதலிச்சு வீட்டை விட்டு வந்துட்டேன். ஆனா ஆசையை செஞ்சுகிட்ட கல்யாணம் நிலைக்கல.” சிறிது மவுனமாய் இருந்து விட்டு தொடர்ந்தாள்.

“யாருமில்லாத அனாதையாய் நானும் என் மகன் ஜெகனும் இந்த சென்னைக்கு வந்தோம். அங்கே ஒரு கம்பெனியில் லேபரா வேலை செஞ்கிட்டு இருந்தேன். புதுசா வீடு மாத்தினப்பதான் தெரிஞ்சது அங்க பக்கத்திலதான் ஜோதி இருந்தா.”

“பழைய நட்பை அவ புதுப்பிச்சுக்க விரும்பினாள். எந்த உறவுகளும் இல்லாம இருந்த எனக்கும் அவ நட்பு ஒரு சந்தோசத்தை கொடுத்திச்சு. அவளுக்கு குழந்தைங்கன்னா ரொம்ப புடிக்கும். அவளுக்கு குழந்தை பிறக்கலை. அதனாலாயே என்னவோ என் மகன் ஜெகன் கூட ரொம்ப அட்டாச் ஆயிட்டா.”

“முக்காவாசி நேரம் என் வீட்லதான் இருப்பா. நான் வேலைக்கு போற நேரத்தில் குழந்தையை வழக்கமா கிரச்லதான் விடுவேன். ஆனா அவ தானே கவனிச்சிக்கிறேன்னு சொல்லிட்டு பார்த்துப்பா. அவ எங்க கூட பழகினது எங்களுக்கும் அவளுக்கும் ரொம்ப சந்தோசத்தை தந்தாலும் அது அவ கணவருக்கும் மாமியாருக்கும் சுத்தமா பிடிக்கலை.”

“இருந்தாலும் அவ எங்க கூட பழகறதை விடலை. எங்களை பார்க்காம பேசாம ஒரு நாள் கூட இருந்ததில்ல. இதனால அவ வீட்ல அடிக்கடி சண்டை கூட வரும். நான் கூட என்னால எதுக்குடி சண்டை? நீ என் வீட்டு வராதேன்னு கூட சொல்லிப் பார்த்தேன் அவ கேட்கலை.”

“ஒருகட்டத்தில் அவளுக்கும் அவ வீட்டுக்காருக்கும் பயங்கர சண்டை. அப்புறம்...”

அமைதியாக இருந்தாள் ஷீலா. எதையோ மறைக்கிறாள் என புரிந்தது.

“அப்புறம் நான் அவங்களுக்கு பிரச்சினை தர வேணாம்னு நான் இங்க வந்துட்டேன். இப்ப அவ சென்னையில் அவ புருசனோட சந்தோசமா இருப்பா.”

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த நான் பேசினேன். “இல்லை ஷீலா. நீ இங்க வந்து ஆறு மாசமாச்சுல்ல. அதே ஆறுமாசம் முன்னால ஜோதி காணாமபோயிட்டா”

“என்ன ஜெயந்த் சொல்ற?”

“ஆமா அவ காணாம போயிட்டா இதுவரை தேடி எங்கேயும் கிடைக்கலை. அவ புருசன் அங்கே கவலையோட சுத்திகிட்டு இருக்கார். எனக்கே இது கொஞ்ச நாள் முன்னாடிதான் தெரியும்”

ஷீலா வருத்தப்பட்டாள். அவள் எதற்காக வீட்டை விட்டு வந்தாளோ அந்த காரணம் நிறைவேறவே இல்லையே!

“சரி ஷீலா. எனக்கு ஒன்னே ஒன்னுதான் புரியலை. ஜோதியோட ஹஸ்பெண்டும் மாமியாரும் ஏன் உன் கூட பழகுறத விரும்பலை?”

அமைதியாக இருந்தாள். கண்களில் கண்ணீர்....! அழுகிறாளா என்ன?

“நான் ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன்றதுதான் காரணம்”


**************************


ஒரு டைரி:
***************************

”சார் நீங்க கூட்டிட்டு வந்த பேஷண்ட் கண்ணு முழிச்சிட்டார். உங்களை பார்க்கணும்னு சொன்னார் நர்ஸ் வந்து சொன்னதும் அவரை பார்க்கச் சென்றேன்.

ஷீலா சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. அவள் ஜெயிலுக்கு போய்ட்டு வந்தவளா? ஆனால் அவள் அப்படி எந்த தப்பும் செய்பவளில்லையே. காரணம் கேட்டால், கண்ணீர்தான் பதிலாக வருகிறது. அவளை வற்புறுத்த எனக்கு மனமில்லை. ஷீலாவின் கணவன் பற்றியும் தெரியவில்லை. அவள் ஜெயிலுக்கு சென்றேன் என்கிறாள். ஒரே புதிராக இருக்கிறாள். ஆனால் அவளை நினைத்தால் பாவமாகத்தான் இருந்தது. சரி இவள் ஜோதிக்காக இங்கே வந்துவிட்டாள். அப்படியானால் ஜோதி அங்கேயே அவள் கணவனோடு வாழ்க்கையை தொடர்ந்திருக்க வேண்டுமே. ஆனால் அப்படி நடக்கவில்லை. அப்படியானால் ஜோதி எங்கே? என்ன ஆனாள்?

செல்போன் அடித்தது. கோகுல் அழைக்கிறான்.

“ஹலோ கோகுல்?”

“ஜெயந்த் நான் சொல்ற அட்ரஸ்ல இருக்கிற லாட்ஜுக்கு வந்துடு. நம்ம இரண்டு பேரும் தங்க ரூம் போட்ருக்கேன்.”

“சரிடா. போன காரியம் என்னாச்சு?”

“எல்லாம் வந்தவுடனே சொல்றேன். நாம இங்க இன்னும் கொஞ்ச நாள் தங்க வேண்டியதிருக்கு.”

****************************************

ஒரு படம்:

**********************************

அந்த அடிபட்டவரை பார்க்கச் சென்றேன். ரொம்ப அடிபடவில்லை. பிரஷர் இருப்பதால்தான் மயங்கியிருக்கிறார். இரவு இருந்துவிட்டு காலையில் டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்றார் டாக்டர்.

“ஹலோ சார். வணக்கம். என் பேர் ஜெயந்த்”

“வணக்கம் தம்பி. என் பேர் ராஜசேகர். ரொம்ப நன்றி தம்பி ஆஸ்பிட்டல்ல சேர்த்ததுக்கு”

”அதெல்லாம் எதுக்கு சார்? நாங்க தான் அவசரப்பட்டு வண்டியில இடிச்சிட்டோம். மன்னிச்சிருங்க சார்.”

“எத்தனையோ பேர் விட்டுட்டு போறாங்க நீங்க அக்கறையா சேர்த்தீங்க அது போதும்பா. ஒரு சின்ன உதவி. என் செல்ஃபோன் எங்கே போச்சுன்னு தெரியலை. அது...”

“அதுவா, உங்க ஃபோன், பை எல்லாம் நான்தான் எடுத்து வச்சேன். இதோ இருக்கு.”

“ஒன்னுமில்ல தம்பி நான் இன்னைக்கு நைட் சென்னை போறதா இருந்தேன். இப்படி ஆயிடுச்சு வீட்ல பொண்ணு தனியா இருக்கும் அதான் ஃபோன் பண்ணி சொல்லனும்.”

அவர் ஃபோன் செய்து பேச ஆரம்பித்தார்.

“அம்மாடி ஸ்வப்னா.. நான் அப்பா பேசறேன். இன்னை வரதா சொன்னேன்ல. இங்கே ஒரு சின்ன பிரச்சினை. அதான் வர முடியலை. நாளைக்கு சாயங்காலத்துக்குள்ள கண்டிப்பா வந்துருவேன்.. நீ பத்திரமா இரும்மா”

(தொடரும்)..

61 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

I am first

வெறும்பய said...

Welcome Welcome...

கவிதை காதலன் said...

அச்சச்சோ.. அப்புறம் என்ன ஆச்சு? கதை நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு? cont....

வெறும்பய said...

கவிதை காதலன் said...

அச்சச்சோ.. அப்புறம் என்ன ஆச்சு? கதை நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு? cont....

//

இனிதான் சுவாரஸ்யமே இருக்கு.. தொடர்ந்து படிங்க...

வருகைக்கு நன்றி...

Speed Master said...

Nice

வினோ said...

இப்படியே கட் போடுறீங்களே நண்பா...இது தகுமா?

வெறும்பய said...

Speed Master said...

Nice

//

Thanks

வெறும்பய said...

வினோ said...

இப்படியே கட் போடுறீங்களே நண்பா...இது தகுமா?

//

என்ன பண்றது நண்பா.. இல்லன்னா ஒரு சுவாரஸ்யம் இருக்காதே...

கலாநேசன் said...

திடீர் திருப்பம்.....?

பாரத்... பாரதி... said...

அந்த டைரியில் உள்ள வார்த்தைகள் ரசனையாக இருக்கிறது.

இம்சைஅரசன் பாபு.. said...

எலேய் எப்ப தான் கதைய முடிப்ப ரொம்ப Intresting அ போக்கும் போது cont போடதே

பாரத்... பாரதி... said...

இடைவேளைக்கு முன்பு வரும் திருப்பமா இது?

வெறும்பய said...

பாரத்... பாரதி... said...

அந்த டைரியில் உள்ள வார்த்தைகள் ரசனையாக இருக்கிறது.

//

அவை கதையின் இரண்டாவது பாகத்தில் பெண்ணிடம் காதலை கூறும் போது அவளிடமிருந்து வந்த பதில்...

வெறும்பய said...

இம்சைஅரசன் பாபு.. said...

எலேய் எப்ப தான் கதைய முடிப்ப ரொம்ப Intresting அ போக்கும் போது cont போடதே

//

ஹா ஹா ஹா.. இன்னும் கொஞ்சம் நாள் உங்களையெல்லாம் நிம்மதியா தூங்க விடமாட்டேன்...

வெறும்பய said...

கலாநேசன் said...

திடீர் திருப்பம்.....?

//

வருகைக்கு நன்றி அண்ணா.. தொடர்ந்து வாசிங்க...

வெறும்பய said...

பாரத்... பாரதி... said...

இடைவேளைக்கு முன்பு வரும் திருப்பமா இது?

//

அப்படி கூட வச்சுக்கலாம்...

எஸ்.கே said...

நல்லா போகுது நண்பா!

ஆமினா said...

அடுத்தவன் டைரிய படிக்குறது எவ்வளவு சுகமான விஷயம்??? அடேங்கப்பா ;)

செமையா இருந்துச்சு வார்த்தைகள்

அடுத்த பாகம் சீக்கிரமா போடுங்க சகோ

அருண் பிரசாத் said...

டிவிஸ்டு...டிவிஸ்டு ...டிவிஸ்டுனு போய்ய்டே இருந்த என்ன அர்த்தம்.... ராஸ்கல்....

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

வணக்கம் நண்பரே ஜோதிக்காகவே காத்திருந்தேன் வழமைபோல இன்றும் எதிர்பார்ப்பை அதிகரித்து தொடரும் என்று சொல்லி இருக்கிறீர்கள் இந்த எழுத்து நடைதான் என்னை தொடர செய்கிறது ஒவ்வொரு ஜோதியையும் . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

வெறும்பய said...

ஆமினா said...

அடுத்தவன் டைரிய படிக்குறது எவ்வளவு சுகமான விஷயம்??? அடேங்கப்பா ;)

செமையா இருந்துச்சு வார்த்தைகள்

அடுத்த பாகம் சீக்கிரமா போடுங்க சகோ

//

ஹா ஹா.. அதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது... நன்றி சகோதரி...

அதிலுள்ளவை எல்லாம் கதியின் இரண்டாவது பாகத்தில் உள்ளது தான்...

வெறும்பய said...

அருண் பிரசாத் said...

டிவிஸ்டு...டிவிஸ்டு ...டிவிஸ்டுனு போய்ய்டே இருந்த என்ன அர்த்தம்.... ராஸ்கல்....

//

அது ஒண்ணுமில்ல மச்சி.. நீ டெய்லி இத படிச்சுகிட்டு இனிமேல் புதிர் போட்டி போடக்கூடாதுன்னு அர்த்தம்...

நீ இனி மேல் புதிர் போட்டி வச்சா.. அடுத்தது ஸ்வப்னா ன்னு ஒரு தொடர் ஆரம்பிச்சிடுவேன்..

வெறும்பய said...

எஸ்.கே said...

நல்லா போகுது நண்பா!

//
\
\

Thnaks Dear..

வெறும்பய said...

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

வணக்கம் நண்பரே ஜோதிக்காகவே காத்திருந்தேன் வழமைபோல இன்றும் எதிர்பார்ப்பை அதிகரித்து தொடரும் என்று சொல்லி இருக்கிறீர்கள் இந்த எழுத்து நடைதான் என்னை தொடர செய்கிறது ஒவ்வொரு ஜோதியையும் . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

//

தங்களது வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி நண்பரே.. நிச்சயமாக உங்களையெல்லாம் அதிக நாட்கள் காத்திருக்க வைக்க மாட்டேன்..

ஜீ... said...

நல்லா இருக்கு! அதிலும் அந்த டைரி சூப்பர் பாஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வந்துட்டம்ல, இனி முந்தைய பகுதிகள்னு போடுறதே கதைய விட பெருசா வந்திடும் போல இருக்கே?

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வந்துட்டம்ல, இனி முந்தைய பகுதிகள்னு போடுறதே கதைய விட பெருசா வந்திடும் போல இருக்கே?

//

அப்படி வந்தாலும் சொல்றதுக்கில்ல... நீங்க என்ன தான் சொன்னாலும் வந்து படிச்சு தான் ஆகணும் .. அது தான் தண்டை... வேற வழியில்ல...

வெறும்பய said...

ஜீ... said...

நல்லா இருக்கு! அதிலும் அந்த டைரி சூப்பர் பாஸ்!

//

நன்றி நண்பரே... அந்த டைரி காதலை வெளிப்படுத்திய பகுதியில் வந்தது...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இன்று எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகள் சுமார்தான்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அருமையான தொடர்

வெறும்பய said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இன்று எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகள் சுமார்தான்

//

ஐயோ அண்ணா அது இலவச இணைப்பெல்லாம் இல்ல.. அதுவும் கதை கூடவே பயணிப்பவை தான்...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா..

மாணவன் said...

நல்லா சுவாரசியமா படிச்சுட்டு வரும்போது இப்படி திடீர்னு தொடரும்ன்னு போட்டா எப்படி????

சரி சரி மீதிகதைய எனக்கு மட்டும் மெயில் பண்ணுங்க..

ஹிஹிஹி..

karthikkumar said...

என்ன போக போக ரொம்ப TWIST தர்றீங்க..... இது தப்பாச்சே... :)

வெறும்பய said...

மாணவன் said...

நல்லா சுவாரசியமா படிச்சுட்டு வரும்போது இப்படி திடீர்னு தொடரும்ன்னு போட்டா எப்படி????

சரி சரி மீதிகதைய எனக்கு மட்டும் மெயில் பண்ணுங்க..

ஹிஹிஹி.

//

சரிங்கண்ணா.. எதுக்கு மெயில்.. நான் நேர்லயே வந்து தரேன்...

வெறும்பய said...

karthikkumar said...

என்ன போக போக ரொம்ப TWIST தர்றீங்க..... இது தப்பாச்சே... :

//

கூட்டுட்டுங்கையா பஞ்சாயத்த... நியாயம் கேப்போம்...

இரவு வானம் said...

ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க, தொடருங்க

வெறும்பய said...

இரவு வானம் said...

ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க, தொடருங்க

//

மிக்க மிக்க மிக்க நன்றிங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீ இப்பிடியே கொண்டு போ, அப்புறம் ஜோதின்னா யாரு, அவள எதுக்குத் தேடுறோம்னே எங்களுக்கு மறந்துடப்போகுது.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நடுவுல ஒரு டைரி இருக்கே அது என் டைரி மாதிரியே இருக்கு?

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீ இப்பிடியே கொண்டு போ, அப்புறம் ஜோதின்னா யாரு, அவள எதுக்குத் தேடுறோம்னே எங்களுக்கு மறந்துடப்போகுது.....!

//

இப்ப எனக்கே மறந்து போச்சு/... ஒவ்வொரு தடவையும் ஜோதி யாருன்னு முதல் ரெண்டு பார்ட்டையும் பார்த்து தான் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு...

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நடுவுல ஒரு டைரி இருக்கே அது என் டைரி மாதிரியே இருக்கு?

//

அடிங்க.. நானே கஷ்டப்பட்டு ஜோதிகிட்டேருந்து அந்த டைரிய சுட்டுட்டு வந்திருக்கேன்...

விக்கி உலகம் said...

கத கதையாம் காரணமாம்!

கல்பனா said...

செம கலக்கலா இருக்கு அண்ணா !!

Chitra said...

Super! தொடருங்கள்!

பொங்கல் வாழ்த்துக்கள்!

தோழி பிரஷா said...

ரொம்ப நல்லா இருக்கு கதை தொடருங்கள்.... மேலும் படிக்க காத்திருக்கோம்... சகோதரா...

பதிவுலகில் பாபு said...

என்னங்க ஜெய்ந்த்.. ஹில்ஸ் ஸ்டேசன் மாதிரி டர்னிங் நிறைய வருது..

விறுவிறுப்பாகப் போகுது..

சுசி said...

:))

அப்பாவி தங்கமணி said...

ahaa...swapna entryaa? evanga enna seyya poraangannu puriyaliye... seekaram next part please...

sultanonline said...

எப்பா கதைல எவ்வளவு turnings நீங்க சொன்ன மாதிரியே முதல் ரெண்டு பாகத்தை இல்ல startingல இருந்தே படிச்சாத்தான் புரியுது. கதை சுவாரசியமாக போகுது அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க

யாதவன் said...

ஜோதி கலக்குது
பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணாத்த

THOPPITHOPPI said...

அம்பத்தி ஒருவா ஒருதரம்

மைந்தன் சிவா said...

சட்டெண்டு அறுத்து விட்டிட்டீங்களே...அடுத்த பாகத்துக்கு வைட்டிங்

vinu said...

mr.sujaatha alias verupayaa; neenga ippudi addikadi break udurathu engalukku pidikkalai; athuvum illaamal intha paartil engal thaanaith thalaivi jothi avargalaipp patri ondrumea kooraathathathi vanmayaaaga kandikkurom;


thalaivar [thunai]
thanai thalaivi jothi thiyaana peedam,
covai,
[engalukku veru engum kurippaaga intha verumpaya irrukum ooril kiligal kiddaiyaathu]

கோமாளி செல்வா said...

//“நான் ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன்றதுதான் காரணம்”//

பாருயா , ஜெயிலுக்கு எல்லாம் போயிடு வந்திருக்காங்க !!

கோமாளி செல்வா said...

//அம்மாடி ஸ்வப்னா.. நான் அப்பா பேசறேன். இன்னை வரதா சொன்னேன்ல. இங்கே ஒரு சின்ன பிரச்சினை. அதான் வர முடியலை. நாளைக்கு சாயங்காலத்துக்குள்ள கண்டிப்பா வந்துருவேன்.. நீ பத்திரமா இரும்மா”//

ஓ , சொப்பனாவோட அப்பாவா ? அதான் காப்பாத்திருப்பாங்க போல .. ஹி ஹி

ம.தி.சுதா said...

இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

2009kr said...

சுவாரசியமான நடை.. சிறந்த தொடர்கதை.. வாழ்த்துக்கள்..

2009kr said...

சுவாரசியமான நடை.. சிறந்த தொடர்கதை.. வாழ்த்துக்கள்..

இரவு வானம் said...

தமிழ்மணம் போட்டியில ஜெயிச்சதுக்கு வாழ்த்துக்கள் சார் :-)

பலே பிரபு said...

உங்களை இங்கே அழைக்கிறேன்

http://bloggersbiodata.blogspot.com/

Sathishkumar said...

அடுத்த பாகத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..