ஜோதி - X

  கதையின் முந்தைய பாகங்கள்.. 
சென்னை. அழுது கொண்டிருந்த ஜெகனை சமாதானப்படுத்தி தூங்க வைத்தேன். அவன் அம்மாவிற்காக ஏங்குகிறான். நான் என்ன செய்வது?

எதேட்சையாய் பஸ்ஸில் கார்த்திக்-அபிநயாவை சந்தித்ததும் நான் அவர்களை தேடியது அவர்கள் பேசியதை கேட்டதை சொன்னவுடன் என்னிடம் உதவி கேட்டது எனக்கு வியப்பாகத் தான் இருந்தது. இருந்தாலும் என் மனது அவர்களுக்கு உதவச் சொன்னது. அருணிடம் பேசி அவன் உதவியால் இங்கே தெரிந்தவர்கள் வீட்டில் தங்க வைத்தோம். இன்னும் இரண்டொரு நாட்களில் அவர்களுக்கு திருமணம் செய்ய உதவ வேண்டும். பாஸுக்கு இது தெரிந்தால் என்ன ஆகப் போகிறதோ?

அன்று மகேஷேப் பார்க்க அவர் வீட்டுக்குச் சென்றேன் அவர் பாத்ரூமில் இருந்தார் போல அவரை கூப்பிட்டவுடன் அங்கே உட்காரச் சொன்னார். அங்கேதான் நான் எதேட்சையாய் அந்த டேப்ரிக்கார்டரில் பாஸ் பண்ணிய நிலையில் இருந்த ஒலிநாடாவை போட்டேன். முதலில் ஒரு பெண் பாடுவது கேட்டது. இந்தக் குரல் இந்தக் குரல் ஜோதியினுடையதல்லாவா.... பாடல் முடிந்தவுடன் நீண்ட நேரம் அமைதியாக இருந்தது பிறகு இரண்டு பேர் சண்டை போட்டுக் கொள்வது ஒலித்தது.

ஒலிநாடாவை முழுவதுமாக கேட்டேன். கடைசியாக ஒலித்தது நினைவுக்கு வந்தது, 

“என்னை அடிங்க, இன்னும் எவ்வளவு வேணும்னாலும் அடிங்க, ஆனா நான் அவனை பார்க்க போவேன்! போவேன்! போவேன்!”
“புருஷன்காரன் இவ்வளவு சொல்றேன் கேட்காம போவேன்னு சொல்றியா உன்னை என்ன பண்றேன் பார்” அத்துடன் டேப் முடிந்து போயிருந்தது.

முதன் முறையாக எனக்கு சந்தேகம் வந்தது... மகேஷால் ஜோதிக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமோ?

---------------------------------------
Dialogue - 1
 ---------------------------------------
“ஷீலாவை தேடி ஒருமுறை போலீஸ் வந்தது ஏதோ என்கொயரின்னு அதிலிருந்து ஷீலாவை எல்லோரும் தப்பா நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க. நானும் எங்கம்மாவும் கூட. இதனால் ஜோதியை அவளை பார்க்க போக வேண்டாம்னு சொன்னோம். ஆனால் ஜெகன் கூட ரொம்ப அட்டாச் ஆயிட்ட அவனை பார்க்க போவேன் போவேன் சண்டை போட்டா ஒரு நாள். அன்னைக்கு நான் ஷீலாவை பார்த்து ரொம்ப கடுமையா திட்டினேன். அவளால எங்க வாழ்க்கை பாதிக்கப்படுறதா. அதற்கடுத்த நாள் ஷீலா இந்த ஊரை விட்டு போயிட்டா, அப்புறம் ஜோதியும்... ஒரு விதத்தில் நான் அதுக்கு காரணம்”

மகேஷ் திட்டியதைதான் ஷீலா மறைத்திருக்கிறாள் என எனக்கு புரிந்தது. அப்படியானால் ஜோதி இப்போ எங்கே??

---------------------------------------
“இடியட்.. நான் சொன்ன வேலையை செய்யறதை விட உனக்கென்ன பெர்சனல் வொர்க். சே உன்னை மாதிரி ஆளுங்களை வேலைக்கு வெச்சுகிட்ட என்ன பண்ணுறது. நீயெல்லாம் எதுக்கு வேலைக்கு வர?”

ஏண்டா வேலைக்கு வந்தோம்கிற அளவுக்கு திட்டினார் தீனதயாள். ஆபிஸ் வேலைக்கு கூட இப்படி திட்டு வாங்கியதில்லை பாஸிடம். இதுக்கே இப்படி திட்டுறார்னா இவரு பொண்ணையும் அவ காதலையும் ஒளிச்சு வைச்சிருக்கிறது தெரிஞ்சா என்னாகுமோ??

“இந்தா பிடி இந்த பைல்களை மதுரையில் இருக்கிற பிராஞ்ச் மேனேஜர் ரகுன்னு ஒருத்தர் இருப்பார் அவர்கிட்ட கொடுத்துட்டு வா. இதையாவது உருப்படியா செய்”

பெருமூச்சுடன் எம்டி அறையிலிருந்து வெளியே வந்தேன். ஸ்வப்னா நின்றிருந்தாள். வேகமாக என்னருகே வந்து “ஜெயந்த் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.
“அது வந்து.. ஸ்வப்னா. எம்டி அர்ஜண்டா மதுரைக்கு போகச் சொன்னார். நான் போய் வந்ததும் பேசலாம்” “இல்ல ஜெயந்த்...”  அவள் தயக்கத்தை பொருட்படுத்தாமல் கிளம்பினேன்.
---------------------------------------
Dialogue - 2
---------------------------------------
மதுரை. இங்கே என்ன நடக்கப்போகிறதோ? நல்லவேளை ஜெகனை அருணிடமும் அவன் மனைவியிடமும் விட்டு வந்தாச்சு. மகேஷ் ஏனோ ஜெகனை பார்த்து முதலில் கோபப்பட்டார். பிறகு சமாதானமாகி விட்டார். சரி நாம வந்த வேலையை பார்ப்போம்.

அந்த ரகுவின் வீட்டை தேடிப் போனேன். அவர் வீடு பூட்டியிருந்தது. குழப்பத்துடன் பக்கத்து வீட்டுச் சென்று விசாரிக்கலாமெனச் சென்றேன்.

அது ஒரு பழங்காலத்து வீடு. அந்த வீடு லேசாக திறந்திருந்தது. உள்ளே சில ஃபோட்டோக்களை பார்த்தேன். ஒரு ஃபோட்டோவில் நண்பர்களோ சகோதரர்களோ தெரியவில்லை...இருவர் சந்தோசமாக தோள்மேல் கைபோட்டபடி இருந்தார்கள். ஒரு ஃபோட்டோவில் ஒருவர் டாக்டர் போல நின்றிருந்தார். மற்ற ஃபோட்டோக்களை பார்க்க முயற்சித்த போது ஒரு பெண்மணி வந்தார். “யார் வேணுங்க?”
“இல்ல இங்க ரகுன்னு பக்கத்து வீட்டில”
“ஓ அவரா.. அவரு மனைவிக்கு ஹார்ட் அட்டாக். இங்கதான் பக்கத்தில் ஹாஸ்பிடல் ஒன்னு இருக்கு அதில் சேர்த்திருக்காங்க”

அடடா.. எங்க போனாலும் ஏதாவது பிரச்சினை. இப்ப என்ன பண்ணுறது? விசயம் கேள்விப்பட்டும் போகலன்னா நல்லா இருக்காது. சும்மா பார்த்துட்டாவது போவோம். முகவரி விசாரித்துக் கொண்டு கிளம்பினேன்.

---------------------------------------
Dialogue - 3
---------------------------------------
ரகுவை சந்தித்தேன். நல்லவேளை அவர் மனைவிக்கு மைல்ட் அட்டாக்தானாம். அவரை சந்தித்து விவரம் சொல்லி மன்னிப்பு கேட்டு விட்டு, ஃபைல்களை தந்துவிட்டு கிளம்பினேன். நல்லவேளை இதை ஒழுங்காக முடித்து விட்டோம் என மகிழ்ச்சியோடு கிளம்பினேன். வராண்டாவில் நடந்து  வெளியே செல்லும்போது அந்த பாடல் என் காதில் கேட்டது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்... நான் காதல் வலியை அனுபவிக்கும்போது அடிக்கடி கேட்பேன்....

“வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம்தாம் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் ...................”

பாடலை ஒரு அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது. யாரோ எஃப்எம் கேட்கிறார்களோ. மெதுவாக நடந்தபடி கேட்டுக் கொண்டே சென்று கொண்டிருந்தேன். அந்த அறையை கடந்த போது ஒரு குரல் கேட்டது.

“சிஸ்டர் இந்த ஹாஸ்பிட்டல்லயே இருக்கிற என்னவோ போல் இருக்கு எனக்கு எப்ப சரியாகுமோ நான் இன்னைக்கு வெளியே போலாமா?”

அந்த குரல் என்னை திடுக்கிட வைத்தது. அதிர்ச்சியுடன் அறைக்குள் பார்த்தேன். அது....ஜோதி!

தொடரும்... 

57 comments:

மாணவன் said...

வந்தேன் வந்தேன்...............

மாணவன் said...

//அந்த குரல் என்னை திடுக்கிட வைத்தது. அதிர்ச்சியுடன் அறைக்குள் பார்த்தேன். அது....ஜோதி!//

யப்பா........ ஒருவழியா இப்பவாவது ஜோதி தரிசனம் (நேரில்) கிடைச்சுதே.......!!!!!!! என்பது சந்தோஷமாக இருந்தாலும் இப்பதான் ஜோதிய வந்துருக்காங்க இனி எத்தன பாகம் வரப்போகுதோ?????????அத நினைச்சாதான்.............????????

மாணவன் said...

சரி எல்லாம் நல்லாதான் இருக்கு, படிச்சுட்டுதான் கமெண்ட் போடனுமா?? இல்ல வழக்கம்போல என் மாஸ்டர்பீஸ் கமெண்ட் போட்டா போதுமா????ஹிஹி

Chitra said...

சரியான இடத்தில தொடரும் போட்டுருக்கீங்க....

மாணவன் said...

என்னா ஒரு சின்ன வருத்தமுன்னா சாப்பிடபோற நேரம் பார்த்து போஸ்ட் போட்டுட்டீங்களே.........(மைண்ட் வாய்ஸ்- ம்கும் இல்லன்னா மட்டும் படிச்சுட்டுதான் மறுவேலை பார்ப்பாரு இவரு) அப்டின்னு நீங்க சொல்றது கேட்குதுண்ணே........ஹிஹி

மாணவன் said...

// Chitra said...
சரியான இடத்தில தொடரும் போட்டுருக்கீங்க....//

இதுவேறயா.... இன்னும் எத்தன பாகம் தொடரபோகுதுன்னு நானே மிரண்டு கிடக்கிறேன்....ஹிஹி

vinu said...

presenttu

மாணவன் said...

அண்ணே “லஞ்ச் ப்ரேக்” சாப்டபோறேன் வர்றீங்களா????

சாப்ட்டு வந்து ஜோதிய பார்க்குறேன்... ஸாரி படிக்கிறேன் ஓகேவா????ஹிஹி

மாணவன் said...

// vinu said...
presenttu//

என்னா மாமு இங்க school attends ஆ எடுக்குறாங்க...he he

மாணவன் said...

ஓகே வரேன்.....

Arun Prasath said...

இனி ஜோதி தரிசனம்

vinu said...

மாணவன் said...
ஓகே வரேன்.....


athukkullea odittaa eppudiiiiiiii

vinu said...

story superrrrrrrrrrrrrrrrrrrrba poguthu machi

இந்திரா said...

அட.. அதுக்குள்ள தொடரும் போட்டுட்டீங்களே..
கதை சூப்பரா போகுதுங்க..

மாணவன் said...

// vinu said...
story superrrrrrrrrrrrrrrrrrrrba poguthu machi//

என்னா மாமு நெசமாவே படிச்சியா???

ஜீ... said...

அப்பாடா! ஒருமாதிரி ஜோதியை பார்த்தாச்சுல்ல! :-)

யாதவன் said...

“என்னை அடிங்க, இன்னும் எவ்வளவு வேணும்னாலும் அடிங்க, ஆனா நான் அவனை பார்க்க போவேன்! போவேன்! போவேன்

அருண் பிரசாத் said...

நல்லாதான் போகுது.....ஆனா ஏதோ மெகா தொடர் மாதிரி இருக்குது....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருண் பிரசாத் said... நல்லாதான் போகுது.....ஆனா ஏதோ மெகா தொடர் மாதிரி இருக்குது....//

என்ன ஒரு கண்டுபிடிப்பு. இததான பல வருசமா இவன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்திரா said...

அட.. அதுக்குள்ள தொடரும் போட்டுட்டீங்களே..
கதை சூப்பரா போகுதுங்க.. ///

பார்டா இந்திராவுக்கு படிக்க தெரியுமாம். இது கதைன்னு கண்டு பிடிச்சிடீங்களே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

“வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம்தாம் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் ...................”//

உங்கள் கவிதை அருமை. தொடர்ந்து கவிதை எழுதவும். ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஷீலாவை தேடி ஒருமுறை போலீஸ் வந்தது ஏதோ என்கொயரின்னு அதிலிருந்து ஷீலாவை எல்லோரும் தப்பா நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க. //

அய்யய்யோ என் கிட்ட சொல்லிருக்கலாமே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

//அந்த குரல் என்னை திடுக்கிட வைத்தது. அதிர்ச்சியுடன் அறைக்குள் பார்த்தேன். அது....ஜோதி!//

யப்பா........ ஒருவழியா இப்பவாவது ஜோதி தரிசனம் (நேரில்) கிடைச்சுதே.......!!!!!!! என்பது சந்தோஷமாக இருந்தாலும் இப்பதான் ஜோதிய வந்துருக்காங்க இனி எத்தன பாகம் வரப்போகுதோ?????????அத நினைச்சாதான்.............????????///

எனக்கு இப்பவே வயித்த கலக்குது...கன்னித்தீவு கூட முடிய போகுதாமே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

24

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

சசிகுமார் said...

அருமை வாழ்த்துக்கள். ஏதாவது மெகா சீரியல் எடுக்க போறீங்களா

Harini Nathan said...

ஒருமாறி தரிசனம் கிடைச்சிட்டு but கதைச்சின்களா? இல்லையா?
ம் அடுத்த பதிவு மட்டும் காத்திருக்கணும்.

கதை நல்லா இருக்கு, இன்றைய படம் அருமை வாழ்த்துக்கள் நண்பா

ஜில்தண்ணி - யோகேஷ் said...

இன்னாது ஒன்பது பாகம் படிச்சிட்டு இத படிக்கனுமா நான் ஆட்டத்துக்கு வரல :)

சீக்கிரம் முற்றும் போட்டுட்டு சொல்லு முழுசா படிச்சிக்கிறன் :)

vinu said...

indraiya thinagaran papper vaangip padikkavum;

namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;


vaalthukkal mani @http://kavithaikadhalan.blogspot.com/

mobile :+919043194811

sakthistudycentre-கருன் said...

Nice,

நறுக்குன்னு இரண்டு ஒட்டு குத்தியாச்சு...

http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_26.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒருவழியா ஜோதியோட குரலைக் கேட்டாச்சு.... இத வெச்சி இன்னும் எத்தனை பார்ட்டோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
“வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம்தாம் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் ...................”//

உங்கள் கவிதை அருமை. தொடர்ந்து கவிதை எழுதவும். ஹிஹி////

ங்கொய்யால இதுல இது வேறயா...?

வைகை said...

மாணவன் said...
//அந்த குரல் என்னை திடுக்கிட வைத்தது. அதிர்ச்சியுடன் அறைக்குள் பார்த்தேன். அது....ஜோதி!//

யப்பா........ ஒருவழியா இப்பவாவது ஜோதி தரிசனம் (நேரில்) கிடைச்சுதே.......!!!!!!! என்பது சந்தோஷமாக இருந்தாலும் இப்பதான் ஜோதிய வந்துருக்காங்க இனி எத்தன பாகம் வரப்போகுதோ?????????அத நினைச்சாதான்.............???????////

ஜோதிதான் முழுசா வந்தாச்சே? அப்பறம் ஏன் பாகம் பாகமா வரணும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தொடரட்டும் உங்கள் பொண்ணான பணி!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஒருவழியா ஜோதியோட குரலைக் கேட்டாச்சு.... இத வெச்சி இன்னும் எத்தனை பார்ட்டோ//////


முடிக்கலைனா கொரவளைய கடிக்க வேண்டியதுதான்!

வைகை said...

மாணவன் said...
என்னா ஒரு சின்ன வருத்தமுன்னா சாப்பிடபோற நேரம் பார்த்து போஸ்ட் போட்டுட்டீங்களே.........(மைண்ட் வாய்ஸ்- ம்கும் இல்லன்னா மட்டும் படிச்சுட்டுதான் மறுவேலை பார்ப்பாரு இவரு) அப்டின்னு நீங்க சொல்றது கேட்குதுண்ணே........ஹி/////

இதுவரைக்கும் படிக்கலதானே?

karthikkumar said...

நல்லா சொல்றேன் புல்லா கேட்டுக்குங்க
லதாவுக்கும் ஆனந்துக்கும் கள்ளத்தொடர்பு இருக்குறது உண்மைதான் .
இது லதாவோட புருஷன் ராஜேசுக்கு தெரியாது.
ஆனா ராஜேசுக்கும் வசந்திக்கும் சின்ன கனெக்சன் இருக்கு.
வசந்தி யாருன்னா ஆனந்தோட காதலி.
நடராஜ் அவல ஒன்சைடா லவ் பண்றான்.
ஆனா ஆனந்த் ரேவதிய வெச்சிருக்கிறது வசந்திக்கு தெரியாது..
வெளங்குச்சா........:)

இப்படியெல்லாம் என்ன கமென்ட் போட வெச்சிட்டாரே..... மொதல்ல அவர (வெறும்பயல) நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்தறேன்..... :)

தினேஷ்குமார் said...

ஆஹா அப்பா அடுத்த பகுதியில் ஜோதியை பார்க்க போறோம்னு சொல்லுங்க சாரி பாஸ் பார்க்க போறீங்க எதோ நமக்கு இன்னைக்கு குரலாவது கேட்டுச்சே சார் சீக்கரம் அடுத்த பதிவை போடுங்க வீ ஆர் வெயிடிங்

MANO நாஞ்சில் மனோ said...

தொடருங்க தொடருங்க நல்ல ரசனையா போயிட்டு இருக்குலே மக்கா....

சுசி said...

ஸ்வீட் எடுங்க கொண்டாட.. ஜோதி வந்திட்டா..

தொடருங்க ஜெயந்த். விறுவிறுப்பா போது கதை :)

மாத்தி யோசி said...

அந்த குரல் என்னை திடுக்கிட வைத்தது. அதிர்ச்சியுடன் அறைக்குள் பார்த்தேன். அது....ஜோதி!

இப்படி பொறுத்த இடத்துல ஸ்டாப் பண்ணினா என்னங்க ஞாயம்? நாங்க பாவம் இல்லையா?

எஸ்.கே said...

நல்லா போகுது கதை நண்பரே!

கோமாளி செல்வா said...

//முதலில் ஒரு பெண் பாடுவது கேட்டது. இந்தக் குரல் இந்தக் குரல் ஜோதியினுடையதல்லாவா.... பாடல் முடிந்தவுடன் நீண்ட நேரம் அமைதியாக இருந்தது பிறகு இரண்டு பேர் சண்டை போட்டுக் கொள்வது ஒலித்தது.
//

அவுங்க என்ன என்ன பாட்டு எல்லாம் பாடி இருக்காங்க ?

கோமாளி செல்வா said...

//மகேஷ் திட்டியதைதான் ஷீலா மறைத்திருக்கிறாள் என எனக்கு புரிந்தது. அப்படியானால் ஜோதி இப்போ எங்கே??//

தெரியலையே ?

கோமாளி செல்வா said...

/
“வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம்தாம் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் ...................”
//

இந்தப் பாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும் .ஹி ஹி

கோமாளி செல்வா said...

ஐ ஜோதி வந்திட்டாங்க ..

மாணவன் said...

//சுசி said...
ஸ்வீட் எடுங்க கொண்டாட.. ஜோதி வந்திட்டா..

தொடருங்க ஜெயந்த். விறுவிறுப்பா போது கதை :)//


ஆஹா இது வேறயா...போச்சுடா பயபுள்ள இன்னும் எத்தன பாகம் எழுதப்போகுதோ?????ஹிஹி

மாணவன் said...

//ஜோதிதான் முழுசா வந்தாச்சே? அப்பறம் ஏன் பாகம் பாகமா வரணும்?//

அதானே என்னான்னு கேளுங்கண்ணே....

மாணவன் said...

// கோமாளி செல்வா said...
ஐ ஜோதி வந்திட்டாங்க ..//

ம்ம்..ஜோதி தரிசனம் கிடச்சதுல ரொம்ப சந்தோஷமா இருக்கா????

மாணவன் said...

// அருண் பிரசாத் said...
நல்லாதான் போகுது.....ஆனா ஏதோ மெகா தொடர் மாதிரி இருக்குது...//

அண்ணே இதோட அடுத்த முயற்சியா “ஜோதி” புத்தகமா வெளியிடப்போறாரம்...பார்த்துக்குங்க....ஹிஹி

மாணவன் said...

ஓகே ரைட்டு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு அடுத்த ஆட்டத்துக்கு வரேன்...

பாரத்... பாரதி... said...

எப்படியோ நல்ல இருந்த மாணவரை அபி அபி என்று குணா ஸ்டைலில் மாற்றி விட்டீர்கள்..

பாரத்... பாரதி... said...

ரொம்ப தாமதமா வந்து விட்டேன்.. ஒவ்வொரு முறையும் நான் வருவதற்குள் ஜோதி திருவிழா முடிந்து விடுகிறது.

தோழி பிரஷா said...

அருமையாக நகர்கின்றது கதை.. ஒரு மாதிரி ஜோதியை கண்டு பிடிச்சாசு.. அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் சகோதரா..

அப்பாவி தங்கமணி said...

அடேயப்பா... எவ்ளோ கேரக்டர்ஸ்...எவ்ளோ கிளைகதை... எல்லாமும் எங்கயோ வந்து ஒண்ணா சேருது... நல்ல ஸ்க்ரீன் ப்ளே ஸ்டைல் இருக்கு... விட்ட எல்லா பாகமும் இப்போ தான் ஒண்ணா படிச்சேன்... கலக்கறீங்க... வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

1st ச்டில் செம கலக்கல். ஜோதியை முடிக்கற ஐடியாவே இல்ல [போல

சே.குமார் said...

ஜோதி தரிசனம்... உங்கள் கதையின் வேகத்தை கூட்டிவிட்டது.
ஆமா அடுத்த பதிவு எப்போ?