============================== ==============================
“கோகுல் எப்படி எம்டி இவ்வளவு கட்டுப்பாடோடவா இருந்தாரு”
“ஆமாண்டா. பார்த்தேல்ல. சொந்த பொண்ணையே ஹவுஸ் அரஸ்ட் பண்ணி வச்சிருக்காரு. போனை கூட யாராவது பேசுனா பேசியது பதிவாகிற மாதிரி செட் பண்ணி வச்சிருந்திருக்காரு.”
“என்ன பண்ணி என்ன புண்ணியம். அவர் பொண்ணு எப்படியோ ஓடிப் போச்சுல்ல!”
“அநேகமா அவர் காவலுக்கு வெச்சிருந்த வேலைக்காரங்க யாராவது உதவியிருக்கணும்”
“சரிடா. நாம இப்ப எதுக்கு திருச்சி போறோம்?”
“ஏய். நீதான் கேட்டல்ல? அந்த அபிநயாவும், அவ ஃபிரண்ட் கவிதாவும் போன்ல பேசிகிட்ட டேப்பை. அதில் திருச்சிக்கு ஓடிப் போக போறதாதான்னே சொன்னாங்க.”
”அதுசரிடா. ஆனா திருச்சியில எங்கேன்னு போய் தேடுவ?”
கோகுல் புன்னகைத்தான். “ஜெயந்த். நீ எம்டி வீட்டுக்கு வரதுக்கு முன்னால அபிநயா ஃபிரண்ட் கவிதா வீட்டுக்கு ஃபோன் பண்ணி எம்டியே அவங்க அம்மா அப்பாகிட்ட விசயத்தை சொல்லி மிரட்டி கேட்டிருக்காரு. அந்த கவிதாவும் பயந்து உண்மையை சொல்லியிருச்சு. அந்த அபிநயாவும் அவ காதலன் கார்த்திக்கும் திருச்சி உச்சி பிள்ளையார் கோயில்ல கல்யாணம் பண்ணக்க போறதா சொன்னாங்களாம்”
============================== ==============================
============================== ==============================
நாங்கள் திருச்சி சென்றோம். அந்த உச்சி பிள்ளையார் கோயிலுக்கும். அங்கே விசாரித்ததற்கு யாரும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யவில்லை என்றார்கள். இருந்தாலும் கோகுலும் நானும் அன்று முழுவதும் உச்சி பிள்ளையார் கோவிலருகே காத்து கொண்டிருந்தோம். ஆனால் யாரும் வரவில்லை.
சுற்றியுள்ள பகுதிகளிலும் விசாரித்தோம். எந்த நல்ல தகவலும் கிடைக்கவில்லை. நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம்.
“சே! அந்த கவிதா பொய் சொல்லியிருக்கா. நாம நல்லா ஏமாந்துட்டோம்” கோகுல் கோபத்தின் உச்சியில் இருந்தான். காரில் திரும்பி வரும்போது புலம்பிக் கொண்டே வந்தான். எம்டிக்கு ஃபோன் செய்து விசயத்தை கூறினான்.
“கோகுல். டென்ஷனாவாதே! வா ஒரு டீ சாப்ட்டு யோசிக்கலாம்.” காரை இடையில் ஓரிடத்தில் நிறுத்தி அவனை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள கடைக்கு சென்றேன். செல்லும் வழியில் சிலர் வருவோர் போவோரிடம் ஏதோ நோட்டீஸ் தந்து கொண்டிருப்பதை பார்த்தேன். என்னிடமும் ஒன்று தந்தார்கள்.
நான் அதை வாங்கி பார்த்துக் கொண்டே நடந்தேன். அதில்.... செயலாளர்கள் என்பதில் ஒரு பெயரை கண்டு ஆச்சரியமானேன். ஸ்பீடு ரமேஷ்!
“கோகுல்”
“என்ன ஜெயந்த்?”
“இங்க பாரு.. இந்த பேரு ஸ்பீடு ரமேஷ்..”
“ஆமா அதுக்கென்ன?”
“டேய் நாம கேட்டோம்ல அபிநயா-கவிதா பேசின டேப். அதில் அந்த கார்த்திக் மாமா பேர் ஏதோ ஸ்பீடு ரமேஷோ சுரேசோன்னு சொல்லிருந்தா இல்ல? அந்த மாமா இவரா இருக்குமோ?”
“அட ஆமாண்டா! இவனாத்தான் இருக்கணும்.”
கோகுல் அதிகமாக பரவசப்பட்டான். உடனே வேகமாக ஓடி நோட்டீஸ் தந்தவரிடம் அந்த பண்ணாரியம்மன் கோயில் எங்கே உள்ளது என விசாரித்தான். அந்த கோயில் அருகில் உள்ள ஒரு பகுதியில் உள்ளதென்று சொன்னார்கள்.
“ஜெயந்த். வா சீக்கிரம் வா.. உடனே அந்த கோயில்ல போய் இந்தாளைப் பற்றி விசாரிக்கலாம்”
”கோகுல் ரொம்ப எக்ஸைடட் ஆவாதே. பொறுமையா இரு.”
“டேய் வாடா..”
என்னை இழுத்துக் கொண்டு காரில் ஏறி கோயிலை நோக்கி வண்டியை செலுத்தினான். அவனை டென்ஷனாக்குவது போல ட்ராஃபிக்கும் அவனை தொல்லை செய்தது. வண்டியை கொஞ்சம் வேகமாகவே ஓட்டிச் சென்றான். நான் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. ஒரு திருப்பத்தில் வேகமாக வண்டியை திருப்பும்போது ஒருவரை இடித்து விட்டான்.
============================== ==============================
இடிபட்டவர் கையிலிருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. நல்லவேளையாக தலையில் எந்த அடியும் படவில்லை. ஆனால் அவர் மயங்கி விழுந்து விட்டார். கொஞ்சம் வயதானவராகவே இருந்தார். கையிலிருந்த பெட்டி தள்ளி விழுந்திருந்தது.
விபத்தை பார்த்து லேசாக கூட்டம் வேடிக்கை பார்த்தது. கோகுல் இருக்கும் அவசரத்தி விட்டு விட்டு போய்விடலாம் என்றான். நான் தான் கோபமாக அவனிடம் கத்தினேன். அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என சொன்னேன்.
அருகிலிருக்கும் ஒரு கிளினிக்கிற்கு அழைத்து சென்றோம். ஆனால் விபத்து என்பதால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சொல்லிவிட்டார்கள். நல்லவேளையாக அரசு மருத்துவமனைக்கு அருகில்தான் இருந்தோம். அவரை அங்கே அழைத்துச் சென்று சேர்த்து விட்டோம். அங்கிருந்து கிளம்பலாம் என்றால் அவருக்கு மயக்கம் தெளியவில்லை. டாக்டர் எங்களை இருக்கச் சொன்னார். கோகுல் என்னை இருக்க சொல்லிவிட்டு தான் மட்டும் அந்த ரமேஷை தேடிச் செல்வதாக சொல்லி விட்டு சென்றான்.
============================== ==============================
நான் மருத்துவமனையில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். என்ன வாழ்க்கையிது? என் காதலியை தேடினேன். அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. இப்போதும் அவள் எங்கே என தெரியவில்லை. அவளைக் கூட தேடாமல் யாரையோ தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். நேற்றிரவு மகேஷ் பேசியது நினைவுக்கு வந்தது. வேறு ஏதோ பிரச்சினை வந்ததாக சொல்ல ஆரம்பித்தாரே அது என்னவாக இருக்கும்?
யோசித்து கொண்டிருந்த என்னை நர்ஸின் குரல் அழைத்தது. ஏதோ ஒரு மருந்து வாங்கி வரச் சொன்னார். மருந்தை வாங்கி கொண்டு வரும்போது ஒரு பெண் ஒரு சிறுவனுடன் நின்று கொண்டு வேறொரு நர்ஸிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தேன். அந்த பெண்ணை எங்கேயோ பார்த்தது போல் இருந்தது. எங்கே??? அவள் ஒரு வார்டுக்குள் சிறுவனுடன் நுழைவதை பார்த்தேன்.
யோசித்தபோது நினைவுக்கு வந்தது. அவள் ஷீலா. என்னுடன் காலேஜில் படித்தவள்தான். ஜோதிக்கு நல்ல நெருக்கமான தோழியாக இருந்தாள். ஆனால் கல்லூரி இரண்டாம் ஆண்டு முடிவிலிருந்து அவள் கல்லூரிக்கு வரவில்லை. கொஞ்ச நாளில் தெரிந்தது. அவள் வீட்டருகே உள்ள யாரையோ காதலித்து ஓடி போய் விட்டாளாம். அதற்கப்புறம் அவளை இப்போதுதான் பார்க்கிறேன்.
அவள் எங்கே இங்கே? வாங்கி வந்த மருந்தை நர்ஸிடம் கொடுத்து விட்டு ஷீலா சென்ற வார்டுக்குள் சென்றேன். ஷீலா ஒரு படுக்கையில் படுத்திருந்தாள். அவளா நோயாளி?
“ஷீலா”
“ம்? யார் சார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்? என் பேர் எப்படி தெரியும்?”
“ஷீலா என்னை தெரியலை நான்தான் ஜெயந்த் காலேஜ்ல ஒன்னா படிச்சோமே”
============================== ==============================
ஒரு பாடல் |
வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் |
ஷீலா என்னை அடையாளம் கண்டு கொண்டாள். அவளைப் பற்றி விசாரித்தேன்.. அந்த சிறுவன் பெயர் ஜெகன் அவளுடைய மகனாம். அவள் கணவன் பற்றி கேட்டதற்கு அமைதிதான் பதிலாக கிடைத்தது. ஆறுமாதம் முன்பு வரை சென்னையில்தான் இருந்திருக்கிறாள். அவளுக்கு ஏதோ வயிற்று வலியாம். அப்படியே பேசிக்கொண்டிருந்தோம்.
“நீ எங்க ஜெயந்த்?”
“ஒரு வேலை விசயமா வந்தேன்.”
அப்படியே பேச்சு நண்பர்கள் பற்றி சென்றது.. இவள் ஜோதிக்கு நெருக்கமாக இருந்தவள்தானே அவளைப் பற்றி கேட்டுப் பார்க்கலாமா?
“ஷீலா ஜோதி ஞாபகம் இருக்கா? அவளை அப்புறம் எங்கேயாவது பார்த்தியா?”
ஷீலா சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு சொன்னாள்....
“ம்ஹும். நான் சென்னையிலிருந்து திருச்சி வர காரணமே அவதானே!”
(தொடரும்)...
130 comments:
vadai
karthikkumar said...
vadai
//
ஆளே இல்ல எத்தன வடை வேணுமின்னாலும் எடுத்துக்கலாம்...
சூப்பர் பாஸ்! அந்த நோட்டீஸ் பாகம் IV இல் தானே இருக்கு? அப்போ எல்லாம் இப்பிடித்தான் வருமா?
பாடல் இனிமை!
கதையும் சுவாரசியம்!
ஜீ... said...
சூப்பர் பாஸ்! அந்த நோட்டீஸ் பாகம் IV இல் தானே இருக்கு? அப்போ எல்லாம் இப்பிடித்தான் வருமா?
//
கதைக்கு ஒரு சுவாரசியம் வர வேண்டாமா தல.. அதனால் தான் தல....
எஸ்.கே said...
பாடல் இனிமை!
கதையும் சுவாரசியம்!
//
நன்றி நண்பரே...
ஆளே இல்ல எத்தன வடை வேணுமின்னாலும் எடுத்துக்கலாம்..///
நான் படிக்கறப்போ இன்ட்லில அஞ்சு வோட்டு இருந்துது.. எல்லோரும் கதைய படிக்கிற ஆர்வத்தில வடை வாங்க மறந்துட்டாங்க..
karthikkumar said...
ஆளே இல்ல எத்தன வடை வேணுமின்னாலும் எடுத்துக்கலாம்..///
நான் படிக்கறப்போ இன்ட்லில அஞ்சு வோட்டு இருந்துது.. எல்லோரும் கதைய படிக்கிற ஆர்வத்தில வடை வாங்க மறந்துட்டாங்க..
//
ஹா ஹா அப்போ நீங்க தான் அதிஷ்ட சாலி..
கதைக்கு ஒரு சுவாரசியம் வர வேண்டாமா தல.. அதனால் தான் தல...///
சுவாரசியம் சிலது புரியுது சிலது இன்னும் கொழப்பமா இருக்கு... இனி வரும் பதிவுகளில் பார்ப்போம்... ஆமா என்ன லவ் ஸ்டோரி ஆரம்பிச்சுட்டு ஒரு ஆக்சன் மசாலா படம் மாதிரி கொண்டுபோறீங்க...
கதை எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு, எது உண்மை... எது பொய்னே... புரியல!

கண்டிப்பாக .. ஒவ்வொரு பாகங்களில் வரும் குழப்பங்களும் அடுத்தடுத்த பதிவுகளில் தெளிவாகும் நண்பரே... தொடர்ந்து வாசியுங்கள்...
நீ இல்லாத என் வாழ்க்கையில் நானும் இருக்கமாட்டேன் அபி..////.
இருங்க மாணவன் வரட்டும் சொல்றேன்...:)
/// வெறும்பய said...
ஜீ... said...
சூப்பர் பாஸ்! அந்த நோட்டீஸ் பாகம் IV இல் தானே இருக்கு? அப்போ எல்லாம் இப்பிடித்தான் வருமா?
//
கதைக்கு ஒரு சுவாரசியம் வர வேண்டாமா தல.. அதனால் தான் தல....///
ஆமா பாஸ்! அது நல்லா ஐடியா! :-)
பன்னிக்குட்டி ராம்சாமி said...
கதை எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு, எது உண்மை... எது பொய்னே... புரியல!
//
அப்படி எங்கே போனாலும் கடைசியா இந்த வெறும்பய ஏரியாவுக்கு தான் வந்தாகணும்.... அதனால தைரியமா படிங்க...
ஆமா இவ்வளவு உண்மைச் சம்பவங்கள் நடந்திருக்கே, இதுக்கப்புறமும் ஜோதி தேவையா?
karthikkumar said...
நீ இல்லாத என் வாழ்க்கையில் நானும் இருக்கமாட்டேன் அபி..////.
இருங்க மாணவன் வரட்டும் சொல்றேன்...:)
//
இப்படியெல்லாம் போட்டுகுடுக்க கூடாது.. பயல காலையிலிருந்தே காணோம்... ஒரு வேலை கவுந்திட்டானோ...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆமா இவ்வளவு உண்மைச் சம்பவங்கள் நடந்திருக்கே, இதுக்கப்புறமும் ஜோதி தேவையா?
//
நடந்தது என்னனு உங்களுக்கு தெரிய வேணாமா.. நான் ரொம்ப நல்லவன்னும் உங்களுக்கு தெரியனுமில்லையா...
தொடரட்டும் தங்கள் பொண்ணான பணி......!
//////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆமா இவ்வளவு உண்மைச் சம்பவங்கள் நடந்திருக்கே, இதுக்கப்புறமும் ஜோதி தேவையா?
//
நடந்தது என்னனு உங்களுக்கு தெரிய வேணாமா.. நான் ரொம்ப நல்லவன்னும் உங்களுக்கு தெரியனுமில்லையா.../////
ம்ம்ம்.... வெளங்கிருச்சு..........
இப்ப திரும்ப முதல்ல இருந்து வாசிக்கணும்!
அருமை...... தொடருங்கள்.....!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
தொடரட்டும் தங்கள் பொண்ணான பணி......!
//
பொண்ணான பனியா.. ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்.. கண்டிப்பா உங்க நல்லாசியோடு தான் தொடரும்...
ஜோதியோட முழுப் பேரு என்ன? ஜோதிமீனாவா, ஜோதிலட்சுமியா, ஜோதிகாவா?
எல்லா பாகமும் சேர்த்து வச்சி படிக்கிறப்ப, ஒரு தேர்ந்த எழுத்தாளரின் நடையாக ரசிக்க வைக்கிறது ஜெயந்த். எந்த இடம் ரசிக்க வைக்கிறது என்று பிரிச்சி சொல்ல முடியல...
மொத்தத்தில் கதை சூப்பர்...அடுத்த பாகத்திற்காக காத்து இருக்கிறேன் ஆவலுடன்...
எனக்கு பிடித்த சாங் !
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ம்ம்ம்.... வெளங்கிருச்சு..........
//
ம்ம்ம் எனக்கும் விளங்கிடிச்சு/....
/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
தொடரட்டும் தங்கள் பொண்ணான பணி......!
//
பொண்ணான பனியா.. ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்.. கண்டிப்பா உங்க நல்லாசியோடு தான் தொடரும்...//////
ங்கொய்யா பண்றதெல்லாம் நீய்யி, அதுக்கு ஆசி மட்டும் நானா? பிச்சிபுடுவேன் பிச்சி........!
ஜீ... said...
இப்ப திரும்ப முதல்ல இருந்து வாசிக்கணும்!
//
கண்டிப்பா வாசிங்க தல... உங்களை யாரு தடுக்கிரான்னு பார்ப்போம்...
ஆமா நாங்கல்லாம் காத்திருந்து வாசிக்க கடைசில 'பொனைவு'ன்னு சொல்லிடுவீங்களோ?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
தொடரட்டும் தங்கள் பொண்ணான பணி......!
//
பொண்ணான பனியா.. ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்.. கண்டிப்பா உங்க நல்லாசியோடு தான் தொடரும்...//////
ங்கொய்யா பண்றதெல்லாம் நீய்யி, அதுக்கு ஆசி மட்டும் நானா? பிச்சிபுடுவேன் பிச்சி........!
//
இதுக்கு போய் கொவிச்சுக்கிறதா... பொறுமை . பொறுமை ..
பொறுமை தானே நம்ம தொழிலுக்கு முக்கியம்...
ங்கொய்யா பண்றதெல்லாம் நீய்யி, அதுக்கு ஆசி மட்டும் நானா? பிச்சிபுடுவேன் பிச்சி........!////
எத பிச்சுபுடுவீங்க? சபைல எத சொன்னாலும் தெளிவா சொல்லுங்க....
ஜீ... said...
ஆமா நாங்கல்லாம் காத்திருந்து வாசிக்க கடைசில 'பொனைவு'ன்னு சொல்லிடுவீங்களோ?
//
கண்டிப்பா இல்லை நண்பரே...
////ஜீ... said...
ஆமா நாங்கல்லாம் காத்திருந்து வாசிக்க கடைசில 'பொனைவு'ன்னு சொல்லிடுவீங்களோ?/////
இப்பவே அப்படித்தானுங்க சொல்றாரு....!
ஜீ... said...
ஆமா நாங்கல்லாம் காத்திருந்து வாசிக்க கடைசில 'பொனைவு'ன்னு சொல்லிடுவீங்களோ?///
ச்சே ச்சே அப்டியெல்லாம் சொல்ல விட்ருவமா.. அந்த ஜோதிய எங்கன்னாலும் தேடி கண்டுபிடிச்சு அண்ணனுக்கு கட்டி வெச்சுட்டுத்தான் மறுவேலையே...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஜோதியோட முழுப் பேரு என்ன? ஜோதிமீனாவா, ஜோதிலட்சுமியா, ஜோதிகாவா?
//
ஜோதியிலையே இத்தனை வகை இருக்கா...
ஹி ஹி ஹி நமக்கு வெறும் ஜோதி தான்...

தலைவரே எனக்கொரு டவுட்டு... ஆமா பொனைவுன்னா என்ன... ??????
//////karthikkumar said...
ங்கொய்யா பண்றதெல்லாம் நீய்யி, அதுக்கு ஆசி மட்டும் நானா? பிச்சிபுடுவேன் பிச்சி........!////
எத பிச்சுபுடுவீங்க? சபைல எத சொன்னாலும் தெளிவா சொல்லுங்க..../////
இது என்றா பெரிய சபை.... மந்திரிசபை.... படுவா.... தெளிவா சொன்னா நீ போயி பிச்சிடுவியா? பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்.... எங்கேருந்து வந்துச்சு இம்புட்டு தெகிரியம்?
karthikkumar said...
ஜீ... said...
ஆமா நாங்கல்லாம் காத்திருந்து வாசிக்க கடைசில 'பொனைவு'ன்னு சொல்லிடுவீங்களோ?///
ச்சே ச்சே அப்டியெல்லாம் சொல்ல விட்ருவமா.. அந்த ஜோதிய எங்கன்னாலும் தேடி கண்டுபிடிச்சு அண்ணனுக்கு கட்டி வெச்சுட்டுத்தான் மறுவேலையே...
//
அடப்பாவி மக்கா அவளுக்கு ஏற்க்கனவே கல்யாணம் ஆகிப்போச்சு...
தலைவரே எனக்கொரு டவுட்டு... ஆமா பொனைவுன்னா என்ன... ????//
நான் சொல்றேன் உதாரனத்திற்க்கு நீங்க "எங்கள் அண்ணன் விடிவெள்ளி எழுச்சிநாயகன் பண்ணிகுட்டிய" மனசுல வெச்சுட்டு திட்டி ஒரு கதை எழுதுனீங்கன்னா அதுதான் பொனைவு..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////karthikkumar said...
ங்கொய்யா பண்றதெல்லாம் நீய்யி, அதுக்கு ஆசி மட்டும் நானா? பிச்சிபுடுவேன் பிச்சி........!////
எத பிச்சுபுடுவீங்க? சபைல எத சொன்னாலும் தெளிவா சொல்லுங்க..../////
இது என்றா பெரிய சபை.... மந்திரிசபை.... படுவா.... தெளிவா சொன்னா நீ போயி பிச்சிடுவியா? பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்.... எங்கேருந்து வந்துச்சு இம்புட்டு தெகிரியம்?
//
நாட்டமை சார்.. கோவப்படாதீங்க நாட்டமை சார்... இந்த அளவுக்கு தைரியம் கொடுத்தது Terror தான் இருக்கும்... அவன போட்டு தள்ளனும் முதல்ல...
/////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////ஜீ... said...
ஆமா நாங்கல்லாம் காத்திருந்து வாசிக்க கடைசில 'பொனைவு'ன்னு சொல்லிடுவீங்களோ?/////
இப்பவே அப்படித்தானுங்க சொல்றாரு....!
//
தலைவரே எனக்கொரு டவுட்டு... ஆமா பொனைவுன்னா என்ன... ??????//////
உண்மைச் சம்பவமா, இல்ல பீலாவான்னே தெரியாத அளவுக்கு இப்போ நீ அள்ளி விட்டுக்கிட்டு இருக்கியே, அதுக்குப் பேருதான் பொனைவு...... புரிஞ்சுதா....?
இது என்றா பெரிய சபை.... மந்திரிசபை.... படுவா.... தெளிவா சொன்னா நீ போயி பிச்சிடுவியா? பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்.... எங்கேருந்து வந்துச்சு இம்புட்டு தெகிரியம்?///
அதுவாண்ணே கொஞ்ச நாளா உங்களோட அப்புறம் சிரிப்பு போலிசோட பழைய பதிவுகள படிச்சேனா அதுல வந்துது இந்த தைரியம்...
karthikkumar said...
தலைவரே எனக்கொரு டவுட்டு... ஆமா பொனைவுன்னா என்ன... ????//
நான் சொல்றேன் உதாரனத்திற்க்கு நீங்க "எங்கள் அண்ணன் விடிவெள்ளி எழுச்சிநாயகன் பண்ணிகுட்டிய" மனசுல வெச்சுட்டு திட்டி ஒரு கதை எழுதுனீங்கன்னா அதுதான் பொனைவு..
//
என்னாது விடி வெள்ளியா.. யோவ் அவங்களுக்கெல்லாம் வெள்ளிக்கிழமை விடியுறதே இல்ல...
அதுக்கெதுக்கு பொனவு எழுதணும் இப்பவே இங்கயே பச்சை பச்சையா திட்டல்லாமே... ஒண்ணும் செல்ல மாட்டாரு...
இந்த முறைதான் விரைவில் ஜோதியில் ஐக்கியம்மாகி விட்டேன்
//////karthikkumar said...
இது என்றா பெரிய சபை.... மந்திரிசபை.... படுவா.... தெளிவா சொன்னா நீ போயி பிச்சிடுவியா? பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்.... எங்கேருந்து வந்துச்சு இம்புட்டு தெகிரியம்?///
அதுவாண்ணே கொஞ்ச நாளா உங்களோட அப்புறம் சிரிப்பு போலிசோட பழைய பதிவுகள படிச்சேனா அதுல வந்துது இந்த தைரியம்.../////
அதானே பார்த்தேன், அவன் ப்ளாக்க புல்லா படிச்சுட்டு தெளிஞ்சு வந்துட்டேன்னா, நீ பெரிய ஆளுதாம்ல..... ஒத்துக்கிறேன்.....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
தலைவரே எனக்கொரு டவுட்டு... ஆமா பொனைவுன்னா என்ன... ??????//////
உண்மைச் சம்பவமா, இல்ல பீலாவான்னே தெரியாத அளவுக்கு இப்போ நீ அள்ளி விட்டுக்கிட்டு இருக்கியே, அதுக்குப் பேருதான் பொனைவு...... புரிஞ்சுதா....?
//
இம்புட்டு தானா.. இதுக்கு போயா நாயா பேயா அடிச்சுக்கிறாங்க... வேலையத்தவனனுங்க....
நாட்டமை சார்.. கோவப்படாதீங்க நாட்டமை சார்... இந்த அளவுக்கு தைரியம் கொடுத்தது Terror தான் இருக்கும்... அவன போட்டு தள்ளனும் முத////
விட்ருவமா இல்ல எங்க டெரர்-அ போட்டுத்தள்ள விட்ருவமா....
டெரர் - காக யாரையாவது தீக்குளிக்க வெய்ப்பேன்...
நல்லா இருக்குங்க நண்பரே
karthikkumar said...
இது என்றா பெரிய சபை.... மந்திரிசபை.... படுவா.... தெளிவா சொன்னா நீ போயி பிச்சிடுவியா? பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்.... எங்கேருந்து வந்துச்சு இம்புட்டு தெகிரியம்?///
அதுவாண்ணே கொஞ்ச நாளா உங்களோட அப்புறம் சிரிப்பு போலிசோட பழைய பதிவுகள படிச்சேனா அதுல வந்துது இந்த தைரியம்...
//
திடுக்கிடும் தகவல்..
சிரிப்பு போலீசின் பதிவுகளை படித்து விட்டு ஒருவர் உயிருடன் வெளியுலகில் நடமாட்டம்.. இது ஆச்சர்யம் ஆனால் உண்மை....
50
//////வெறும்பய said...
karthikkumar said...
தலைவரே எனக்கொரு டவுட்டு... ஆமா பொனைவுன்னா என்ன... ????//
நான் சொல்றேன் உதாரனத்திற்க்கு நீங்க "எங்கள் அண்ணன் விடிவெள்ளி எழுச்சிநாயகன் பண்ணிகுட்டிய" மனசுல வெச்சுட்டு திட்டி ஒரு கதை எழுதுனீங்கன்னா அதுதான் பொனைவு..
//
என்னாது விடி வெள்ளியா.. யோவ் அவங்களுக்கெல்லாம் வெள்ளிக்கிழமை விடியுறதே இல்ல...
அதுக்கெதுக்கு பொனவு எழுதணும் இப்பவே இங்கயே பச்சை பச்சையா திட்டல்லாமே... ஒண்ணும் செல்ல மாட்டாரு...//////
ஏன் இந்த வெளம்பரம்? படுவா... என்னப் பத்தி தெரியும்ல? எனக்கு வெளம்பரம் புடிக்காதுன்னு தெரியுமில்ல? தொலச்சிபுடுவேன் தொலச்சி!
THOPPITHOPPI said...
இந்த முறைதான் விரைவில் ஜோதியில் ஐக்கியம்மாகி விட்டேன்
//
இப்படி சட்டுன்னு எந்த முடிவும் எடுத்திடாதீங்க.. இன்னும் நிறைய இருக்கு...
அரசன் said...
நல்லா இருக்குங்க நண்பரே
//
நன்றி நண்பரே..
எல்லாத்தையும் திரும்ப படிச்சிட்டு வந்தேன் பாஸ்!
''நமக்கு வாய்த்த ஜெயந்த் மிகுந்த திறமைசாலி...ஆனா ஜோதிக்குத்தான் அது தெரியல!''
Kousalya said...
எல்லா பாகமும் சேர்த்து வச்சி படிக்கிறப்ப, ஒரு தேர்ந்த எழுத்தாளரின் நடையாக ரசிக்க வைக்கிறது ஜெயந்த். எந்த இடம் ரசிக்க வைக்கிறது என்று பிரிச்சி சொல்ல முடியல...
மொத்தத்தில் கதை சூப்பர்...அடுத்த பாகத்திற்காக காத்து இருக்கிறேன் ஆவலுடன்...
எனக்கு பிடித்த சாங் !
//
மிக்க நன்றி சகோதரி... அந்த பாடல் எனக்கு மிகவும் மிகவும் பிடித்த் அப்பாடல்...
ஜீ... said...
எல்லாத்தையும் திரும்ப படிச்சிட்டு வந்தேன் பாஸ்!
''நமக்கு வாய்த்த ஜெயந்த் மிகுந்த திறமைசாலி...ஆனா ஜோதிக்குத்தான் அது தெரியல!''
//
ஹா ஹா அதற்குள்ளாகவா... சரி சரி.. அப்படிஎன்றால் நீங்கள் அடிக்கடி திரும்ப திரும்ப படிக்க வேண்டியிருக்கும் நண்பரே....
goog one
சி.பி.செந்தில்குமார் said...
goog one
//
நன்றி அண்ணா...
ஷீலா என்னை அடையாளம் கண்டு கொண்டாள். அவளைப் பற்றி விசாரித்தேன்//அடுத்து ஷீலா கதை ஆரம்பம்
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஷீலா என்னை அடையாளம் கண்டு கொண்டாள். அவளைப் பற்றி விசாரித்தேன்//அடுத்து ஷீலா கதை ஆரம்பம்
//
ஆமா.. ஆமா.. அந்த ஷீலாவும் கதையில் ஒரு முக்கிய அங்கம் தானே
பாகம் III , IV ல வர்ற ஒலிநாடா, நோட்டீஸ்கான முடிச்சு பாகம் V ல தெளிவாகுது!
அது புரியாம அசட்டுத்தனமா எதுக்கு ஒலிநாடான்னு நானும் (பின்னூட்டத்தில) கேட்டிருக்கேன்! ஹி ஹி...
சூப்பர் பாஸ்!
தொடரட்டும் தங்கள் பொண்ணான பணி......
தொடரட்டும் தங்கள் பொண்ணான பணி......
தொடரட்டும் தங்கள் பொண்ணான பணி......
தொடரட்டும் தங்கள் பொண்ணான பணி......
மாணவன் said...
தொடரட்டும் தங்கள் பொண்ணான பணி......
//
என்னாது இங்கயும் பொண்ணான பனியா.. எலேய் உன்ன இன்னைக்கு கொள்ளாம விட மாட்டேன்...
ஜீ... said...
பாகம் III , IV ல வர்ற ஒலிநாடா, நோட்டீஸ்கான முடிச்சு பாகம் V ல தெளிவாகுது!
அது புரியாம அசட்டுத்தனமா எதுக்கு ஒலிநாடான்னு நானும் (பின்னூட்டத்தில) கேட்டிருக்கேன்! ஹி ஹி...
சூப்பர் பாஸ்!
//
மிக்க நன்றி நண்பரே.. இவ்வளவு பொறுமையா திரும்பவும் படித்ததற்கு.. இந்த பாகத்தில் வரும் குழப்பங்களும் வரும் பாகங்களில் தெளியும்..
நல்லா எழுதி இருக்கிங்க..
பாடல்.. செம..
சுசி said...
நல்லா எழுதி இருக்கிங்க..
பாடல்.. செம..
//
நன்றி சகோதரி..
ஜோதிய இன்னும் படிக்கல....
சாப்ட்டு வந்து படிக்கிறேன்... சாப்டபோறேன் வர்றீங்களா...
எலேய் மக்க கதை முடியவே முடியாத .......சரி சரி நல்ல இருக்கு எழுது.... எழுது ....
பாட்டு, பதிவு இரண்டும் சிறப்பு.
அருமையான கவிதை!! ஆழமான வரிகள்!! தேர்ந்த நடை!!
நல்ல அலசல்! கலக்குங்க!!
ஆகா...அருமை....செமையா சிரிச்சிட்டேன்!!
:-)))))) ((((-:
நடுநிலையான விமர்சனம் போங்கோ!!!
இதில் அபிநயா போட்டோ இல்லாததால் மாணவனுக்காக வெளிநடப்பு செய்கிறேன்!
79
ஆமா...............ஜோதி யாரு?!!!
வெறும்பய said...
karthikkumar said...
இது என்றா பெரிய சபை.... மந்திரிசபை.... படுவா.... தெளிவா சொன்னா நீ போயி பிச்சிடுவியா? பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்.... எங்கேருந்து வந்துச்சு இம்புட்டு தெகிரியம்?///
அதுவாண்ணே கொஞ்ச நாளா உங்களோட அப்புறம் சிரிப்பு போலிசோட பழைய பதிவுகள படிச்சேனா அதுல வந்துது இந்த தைரியம்...
//
திடுக்கிடும் தகவல்..
சிரிப்பு போலீசின் பதிவுகளை படித்து விட்டு ஒருவர் உயிருடன் வெளியுலகில் நடமாட்டம்.. இது ஆச்சர்யம் ஆனால் உண்மை....///
ஆள் இல்லைன்னா என்ன வேணாலும் பேசுவீங்களா ராஸ்கல்ஸ்
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
80
//////////////////////
81
82
83
84
85
86
87
88
89
90
நாங்களும் எண்ணுவோம்!! எங்களுக்கும் எண்ண தெரியும்!!
இந்த படம் எங்க ஓடுது? பரங்கிமலை ஜோதியா?
90 இன் முன்னி 89. 90 இன் தொடரி 91
வைகை said...
TERROR-PANDIYAN(VAS) said...
@வைகை
//ஓ...அதான் மேட்ரா?!! அப்ப இது ரமேசு இல்லையோ?!!! //
ரமேச பார்த்தா வெஷம் குடிக்காமலே செத்து போய்டுவ////////////
அவர ஒருவாட்டி எங்க ஊருக்கு வரசொல்லுங்க....எங்க வயலெல்லாம் ஒரே பூச்சி!! இவரு மூஞ்சிய காமிச்சா எல்லாம் செத்திருமா? எனக்கு பூச்சிமருந்து செலவு மிச்சம்! அவருக்கு ஒரு டீ வாங்கி கொடுக்கிறேன்!(இதுவே அதிகமோ?
வைகை said...
வைகை said...
TERROR-PANDIYAN(VAS) said...
@வைகை
//ஓ...அதான் மேட்ரா?!! அப்ப இது ரமேசு இல்லையோ?!!! //
ரமேச பார்த்தா வெஷம் குடிக்காமலே செத்து போய்டுவ////////////
அவர ஒருவாட்டி எங்க ஊருக்கு வரசொல்லுங்க....எங்க வயலெல்லாம் ஒரே பூச்சி!! இவரு மூஞ்சிய காமிச்சா எல்லாம் செத்திருமா? எனக்கு பூச்சிமருந்து செலவு மிச்சம்! அவருக்கு ஒரு டீ வாங்கி கொடுக்கிறேன்!(இதுவே அதிகமோ?//
தர்மம் வாழ்வினை சூழ்ச்சி கவ்வும். தர்மம் அதை வெல்லும்(எங்க உள்ள கமேண்ட எங்க போடுராணுக)டீ எப்ப வாங்கி தருவீங்க ஹிஹி
தர்மம் வாழ்வினை சூழ்ச்சி கவ்வும். //
பார்த்துங்க கண்ட இடத்தில் கவ்விட போகுது!
எஸ்.கே said...
தர்மம் வாழ்வினை சூழ்ச்சி கவ்வும். //
பார்த்துங்க கண்ட இடத்தில் கவ்விட போகுது////////////
விடுங்க எஸ்,கே....கவ்விட்டு போகுது!
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வைகை said...
வைகை said...
TERROR-PANDIYAN(VAS) said..
தர்மம் வாழ்வினை சூழ்ச்சி கவ்வும். தர்மம் அதை வெல்லும்(எங்க உள்ள கமேண்ட எங்க போடுராணுக)டீ எப்ப வாங்கி தருவீங்க ஹி//////////////
ஒரு வெளம்பரம்ம்ம்ம்ம்........
போய் தூங்குங்க . சனிகிழமை போய் சரக்கடிக்காம இங்க என்ன வேலை..
90 இன் முன்னி 89. 90 இன் தொடரி 91
சூப்பர் பாஸ்! அந்த நோட்டீஸ் பாகம் IV இல் தானே இருக்கு? அப்போ எல்லாம் இப்பிடித்தான் வருமா?
@ TERROR
டேய்பன்னாடை பரதேசி, மானம் கெட்டவனே இளையதளபதி விஜய் மாதிரி அழகானவனே(இதை விட கேவலமா திட்ட முடியாது//////////
”மரியாதையா ஒத்துக்கோ நீ ஒரு சிங்கம்னு!”////
இது தான் டாப்பு நம்ம ஆளுங்க நம்ம ஆளுங்க தான்
எல்லா ஜோக்கும் ரோமப் நல்லாயிருக்கு...
என்னாச்சு மக்கள் ஒருத்தரையும் காணோம்...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
போய் தூங்குங்க . சனிகிழமை போய் சரக்கடிக்காம இங்க என்ன வேலை.///////////
OK BOSS!!!
நன்றி எஸ்கே உங்க போட்டோ ரொம்ப நல்லாருக்கு..... வெரி நைஸ்..... ஐ லைக் இட்.....!
kathai zuuuuuuuuperaa poguthu kalakkunga
ஆமா எந்த நகைய விக்கிறீங்க? எதையுமெ காணோம்?
ay vadai
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
போய் தூங்குங்க . சனிகிழமை போய் சரக்கடிக்காம இங்க என்ன வேலை..
ikyaaaaa me the 100
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
போய் தூங்குங்க . சனிகிழமை போய் சரக்கடிக்காம இங்க என்ன வேலை..
ikyaaaaa me the 100
ada poppppaaa eppavumea intha policeaala intha pirachanai varuthu naan thoongapporean
vinu said...
ada poppppaaa eppavumea intha policeaala intha pirachanai varuthu naan thoongapporean//
Good night
இன்னொருத்தர் பதிவில ஒரு நண்பர். வெறும்பய வாழ்க்கையில் ஜோதி ஒளிரட்டும் என்று பின்னூட்டமிட்டிருந்தார். இதுதானா மேட்டரு ?
அங்கன இங்கன கொண்டு போய் கலக்கல இருக்கு ஜெய்....
அருமை காத்திருக்கிறேன்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..
எனக்கென்னமோ கதை ஒரு 50/50 ஆக போயிகிட்டு இருக்குன்னு நினைக்கிறேன்!?
தல சாரி பார் தி லேட் கொஞ்சம் ஆணி தல
இன்னைக்கும் ஜோதி தரிசனம் இல்லையா சூப்பர் நீங்க தேடிகிட்டே இருங்க நாங்களும் சேர்ந்து தேடுறோம்
அருமை...அருமை.
ம்ம்ம்.... வெளங்கிருச்சு..........
ம்ம்ம்.... வெளங்கிருச்சு..........
வணக்கம் நண்பரே உங்களின் ஜோதி தொடரில் இன்றுதான் வாசிக்கத் தொடங்கினேன் வாசித்த சில வரிகளிலே மூழ்கிப் போகிவிட்டேன் . எதிர்பார்ப்பை அள்ளிவீசும் ஒரு எழுத்து நடை வாழ்த்துக்கள் நண்பரே . இன்னும் இதற்கு முந்தையப் பகுதிகளை வாசிக்கவில்லை முழுவதும் வாசித்துவிட்டு மீண்டும் அடுத்த ஜோதியில் சந்திக்கிறேன் . பகிர்வுக்கு நன்றி
எல்லா பாகமும் படிச்ச்ட்டேன். விறுவிறுப்பா போகுது கதை.
வாசித்த வரிகளிலே மூழ்கிப் போகிவிட்டேன்
அருமை......
பகிர்வுக்கு நன்றி
பல டிவிஸ்டுகளைக் கொண்டு வர்றீங்களே.. நல்லாயிருக்கு நண்பா..
தங்களின் வருகைக்கும், ஒருமித்த கருத்திட்டமைக்கும் நன்றி!
அவன் சரியில்லை!, இவன் சரியில்லை! யாரும் சரியில்லை?
சரி நாம் என்ன செய்தோம்?.., யாராவது நல்லவன்(அவதார புருஷன்) வரமாட்டானா? நமக்கும் மக்களுக்கும் நல்லது பண்ண.., ஏன்?
யாராவது வந்து நல்லது பண்ணனும்..,!
ஆனா அது நான் இல்ல??? என் புள்ள இல்ல!,
ஏன் இந்த சுயநலம்??? வக்கிர புத்தி???
நம்மை போலவே எல்லாரும் சிந்திப்பதால்,
நாட்டில் நல்லவன் எவனும் அரசியலுக்கும் வரதில்லை,
நல்லதும் பண்றதில்லை!
விளைவு?????????????????????????.
நடந்தது நடந்ததாக இருக்கட்டும்!
இனி நம் அடுத்த தலைமுறையின் நலன் காக்க..,
சிறு துளி பெருவெள்ளம்!
எதையும் நம்மிலிருந்து துவக்குவோம்!
வாருங்கள்! கரம் சேருங்கள்!
நல்ல எண்ணங்களால், எழுத்தால், சிந்தனையால், சீரிய செயலால்..,
தூய்மையாக்கப் பட வேண்டியது நிறைய உள்ளது..,
வலைத்தளம் முதல்... வடகோடி இமயம் வரை!!!
வாய்ப்புகள் நம்மை தேடி வராது., நாம் தான் அதை அமைத்துக்கொள்ளவேண்டும்!
இனிதே துவங்கியுள்ள இந்த சீரமைப்பு பயணம் சிறப்பாய் தொடர ..,
தங்களின் நல் ஆதரவும், முயற்சியும், சிந்தனையும், செயலும் வலு சேர்க்கட்டும்..,!!!
நன்றியுடன், உங்கள் அன்பு சகோதரன்
சாய் கோகுலகிருஷ்ணா!
அருமை...... தொடருங்கள்.....!
மென்மையா கதைய கொண்டு போகிற உத்தி ரொம்ப நல்லா இருக்குங்க சார்
மிக அருமை...நல்ல விறு விருப்பாக செல்கிறது வாழ்த்துக்கள்
யப்பா.. இத்தன நாளா உங்க பிளாக் ஒப்பன் ஆகவே இல்ல.. இன்னைக்கு தான் முதல் முறையா படிக்கிறேன்.. கதைகளில் எனக்கு விருப்பம் அதிகம்.. இனி தொடர்ந்து படிக்கிறேன்..
நிறைய சுவாரஸ்யங்கள் கொடுக்க வாழ்த்துக்கள் தோழா..
ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்.. வெண்மதி பாடல் அருமை... :)
அண்ணா இது உண்மை கதையா ?
125
இம்சைஅரசன் பாபு.. said...
தமிழ் உதயம் said...
வைகை said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
vinu said...
சிவகுமாரன் said...
வினோ said...
ம.தி.சுதா said...
விக்கி உலகம் said...
தினேஷ்குமார் said...
சே.குமார் said...
நாகராஜசோழன் MA said...
!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
கல்பனா said...
பதிவுலகில் பாபு said...
சசிகுமார் said...
இரவு வானம் said...
Venkat S said...
ஜெ.ஜெ said...
கோமாளி செல்வா said...
//
அனைவரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள் பல;...
ம்ம்...இப்போ அனைத்து பாகங்களும் படிச்சு முடிச்சேன் ...உண்மைகதைனு தெரிஞ்ச பிறகு ஜோதியின் பிரிவு கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது...அப்புறம் அந்த ஒலிநாடா..ஒட்டு கேட்டல்...எல்லாம் பட்டுகோட்டை பிரபாகர் க்ரைம் நாவல் படிச்ச மாதிரி இருந்தது...நல்ல த்ரில் சேர்த்து..சுவாரஷ்யமா இருக்கு...அடுத்த பாகத்தை ஆவலாய் எதிர்பார்க்கிறேன்...
கதை விறுவிறுப்பா போறதப் பார்த்தா சீரியலா எடுத்தா நல்லாத் துட்டுப் பார்க்கலாம்ணு தோணுது.
ஜெயந்தோட கால்ஷீட் கெடைக்குமா?
ஹீரோயினா யாரப் போடலாம்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க ஹீரோ சார்.
சந்தர்ப்பம் கிடைக்கும் போது கப்புன்னு புடிச்சுக்கணும்.இல்லைன்னா அடுத்த ஆள் புகுந்திருவான். ஜாக்கிரதை!
ஆனந்தி.. said...

பொறுமையாக படித்து தங்கள் கருத்துக்களை கூறியதற்கு மிக்க நன்றி சகோதரி...
கதை விறுவிறுப்பா போறதப் பார்த்தா சீரியலா எடுத்தா நல்லாத் துட்டுப் பார்க்கலாம்ணு தோணுது.
ஜெயந்தோட கால்ஷீட் கெடைக்குமா?
ஹீரோயினா யாரப் போடலாம்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க ஹீரோ சார்.
சந்தர்ப்பம் கிடைக்கும் போது கப்புன்னு புடிச்சுக்கணும்.இல்லைன்னா அடுத்த ஆள் புகுந்திருவான். ஜாக்கிரதை!
//
ஆமா அமா.. யார் யாரோ நடிக்கும் பொது நான் நடிக்கக்கூடாதா... ஆனா கதாநாயகிக்கு தான் எங்கே போறதுன்னு தெரியல... ஆனாலும் பரவாயில்ல யாரவது வெளிநாட்டுகாரிய நடிக்க வைக்கலாம்...
Nice flow in writing... kadhai vegam edukkuthu ... neraya characters entry... good
Post a Comment