கதையின் முந்தைய பாகங்கள்..
"நான் அவளை ஏமாத்திட்டேன்..அவ என்னால எவ்வளவோ கஷ்டப்பட்டுருக்கா. அவ சாகறப் போறப்ப கூட அவ கூட என்னால இருக்க முடியலையே....” கண்கலங்கினார் வெங்கடேஷ்.
அவரும் ஷீலாவோட காதல் வீட்டுக்கு தெரிஞ்சதும் வீட்டை விட்டுப் போய் கல்யாணம் பண்ணிகிட்டாங்க. ஆனா அவங்க வாழ்க்கை வறுமையிலதான் இருந்துருக்கு. வெங்கடேஷ் தன் ஃபிரண்ட் சொன்ன திருடுற ஐடியாவுக்கு ஒத்துக்கிட்டு அது ஷீலாவோட கைது வரைக்கும் போயிருக்கு. ஷீலாவை கைது பண்ண உடனே வெங்கடேஷ் போலீஸ்ல சரண்டாகிட்டார். ஆனா ஷீலா வெங்கடேஷ் மேல கோபம் வெறுப்பு எல்லாம் அதிகமாகி அதுக்கப்புறம் ஒருதடவை கூட ஜெயில்ல பார்க்கலையாம். சாகறதுக்கு ஒரு வாரம் முன்னாடி தான் சாகப்போறதையும் குழந்தை நல்ல இடத்தில் இருப்பதாகவும் அதை என்னைக்கும் தேட வேண்டாம்னு எழுதியிருக்கா. வெங்கடேஷ் அப்ப ரீலீஸ் ஆகப்போறது கூட அவளுக்கு தெரியலை. அவர் எப்படியோ ஆஸ்பத்திரி அங்க இங்கன்னு விசாரிச்சு இங்க வந்துட்டார்.
“எல்லாத்தையும் இழந்துட்டு தனியாள இருக்கிற நான் என் குழந்தை என் கூட இருக்கணும் நினைக்கறதுல என்ன தப்பு சார்?”
அவர் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் ஜோதியின் நிலையை கூறி கொஞ்ச நாட்களுக்கு ஜெகன் அவளிடம் இருக்க எப்படியோ நானும் மகேஷும் அனுமதி வாங்கினோம். அவர் பிரிய மனமில்லாமல் அங்கிருந்து சென்றார்.
| ரிஜிஸ்டர் ஆபிஸில் நடந்தது 1/2 | ||||
|---|---|---|---|---|
கார்த்திக்-அபிநயா இருவரும் ரிஜிஸ்டரில் கையெழுத்திட்டர்கள். சாட்சிக்காக, அபிநயா சார்பாக அவள் தோழி கவிதாவும், அருணும் கையெழுத்திட்டனர். கார்த்திக் சார்பாக நானும் அவன் நண்பன் ஒருவரும் கையெழுத்திட்டோம். மாலையும் கழுத்துமாக சந்தோசத்துடன் வெளியே வந்தபோது, ஒரு கார் வந்து நின்றது அதிலிருந்து இறங்கினார்கள். என் பாஸ் தீனதயாளும், கோகுலும். கார்த்திக்-அபிநயாவை கோபத்துடன் பார்த்து விட்டு வேகமாக என்னிடம் வந்து என்னை அறைந்தார். ”என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நீ யாருடா” “இல்ல, சார் அவங்க உயிருக்குயிரா...” அவர் கண்டபடி பேசி திட்ட ஆரம்பித்தார். |
ஜோதியை இங்குள்ள மருத்துவர்களிடம் காண்பித்தபோது ஏதோ தலையில் அடிப்பட்டு நினைவு மறந்து போயுள்ளதாகவும். அது விரைவில் குணமாகிவிடும் என்றனர். எனக்கு கல்லூரி காலங்கள் நினைவுக்கு வந்தது. அவளுடன் பழகிய கல்லூரி நண்பர்களை பார்த்தால் நினைவுக்கு வருமா? என் யோசனையை மகேஷிடம் கூறிய போது....
“உங்களையே அவளுக்கு ஞாபகம் இல்ல. மற்றவங்களை நினைவுக்கு வருமா என்ன?”
“என்ன சொல்றீங்க?”
அவர் மவுனமாக உள்ளே சென்று ஒரு டைரியை எடுத்து வந்து என்னிடம் தந்தார்.
அது ஜோதியின் டைரி. அவர் பார்க்கச் சொன்ன பக்கத்தில் நான் அவளிடம் காதலைச் சொன்னதை எழுதியிருந்தாள் அடுத்தப் பக்கத்தில்....
”ஜோதி காணாம போனப்ப ஏதாவது விவரம் கிடைக்குமான்னு தேடுனப்ப கிடைச்ச டைரி இது. வேற வழியில்லாம படிச்சப்ப உங்க மேல இருந்த ஈர்ப்பு தெரிஞ்சது. ஆனா அதை அவளே நிராகரிச்சதானல எனக்கு அந்த விசயம் பெரிசா படலை. உங்களையே அவளுக்கு நினைவில் இல்லை. மே பி அதுக்கு பல வருடங்கள் சந்திக்காதது கூட காரணமா இருக்கலாம். ஆனா ஈர்ப்பு இருந்த உங்களையே அவளுக்கு நினைவில்லையே மற்றவங்களை எப்படி? ”
ஜோதிக்கு என்னைப் போல் முழுமையான காதல் இருந்திருக்கவில்லை என்பதே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் காத்திருந்த காதல் பொய்த்துப் போனதை விட இது மிகவும் வேதனையாகவே இருந்தது. கலங்கிய கண்களை மகேஷுக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டு பேசினேன்.
”எனக்கும் கூட அது ஈர்ப்புதான் போல சார்... எனக்கும் சில வருடங்களில் எல்லாம் மறந்து விட்டது. இங்கே யதேட்சையாய் கேள்விப்பட்டுதான் எல்லாம் விசாரித்தேன். சரி விடுங்க. அதான் டாக்டர் மீண்டும் ஏதாவது அதிர்ச்சி ஏற்பட்டால் உடனே சரியாகிடும். இல்லன்னாலும் படிப்படியா சரியாயிடும் சொன்னார்ல பார்ப்போம்.”
கனத்த மனதுடன் அங்கிருந்து கிளம்பினேன்.
| ரிஜிஸ்டர் ஆபிஸில் நடந்தது 1/2 | ||||
|---|---|---|---|---|
”சார். ஒரு நிமிஷம். உங்க பொண்ணு விருப்பப்பட்டாங்க கல்யாணம் பண்ணிகிட்டாங்க. நான் ஜஸ்ட் ஹெல்ப் பண்ணேன். அவ்வளவுதான். இவங்க உங்களை மீறி கல்யாணம் பண்ணிகிட்டாங்க. அது உங்களுக்கு புடிக்காததுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனா எல்லாத்தும் அடிப்படையானது அன்பு.... உங்களுக்கு அவங்கமேல இருக்கிற அன்பு அதுதானே சார்? அந்த அன்பு உங்க பொண்ணுக்கு இருக்குல்ல. இப்ப கல்யாணம் பண்ணிகிட்டதால இரண்டு அன்பும் போயிடுமா சார்?. அந்த அன்புக்கு முன்னாடி நீங்க சொல்ற காரணங்கள் ரொம்ப பெரிசா என்ன?” “இவங்க செஞ்ச காதலும் ஒரு வித அன்பு தானே. அது தப்பில்லையே. நான் இவங்களுக்கு செஞ்ச ஹெல்ப்புக்காக உங்களுக்கு என் மேல கோபம் வரலாம். அதுக்காக நீங்க என்னை என்ன வேணும்னாலும் பண்ணுங்க. ஆனா இவங்க இப்ப உங்க சொந்தங்கள் சார். இவங்க மேல அன்பு காமிங்க. இவங்களை வெறுத்துடாதீங்க” அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. கார்த்திக்- அபிநயா இருவரையும் பார்த்து “காரில் ஏறுங்க” என்றார். |
நீண்ட நாட்களுக்கு பிறகு மனசு லேசாக இருந்தது. ஸ்வப்னா இப்போ அவங்க அப்பா கூட ரொம்ப அன்பாயிட்டா. கார்த்திக்-அபிநயாவை எங்க பாஸ் ஏத்துகிட்டு இரண்டு வீட்லயும் பேசி க்ராண்டா ரிஷப்சனும் செஞ்சிட்டாரு. குறிப்பா என்னை வேலையை விட்டு தூக்கலை! ஜோதிக்கும் கொஞ்சம் கொஞ்சம் நினைவு வந்துருக்கு. மகேஷ் கூட நல்லா சகஜமாயிட்டா. ஜெகனும் ஜோதியை அம்மா மாதிரி நினைக்க ஆரம்பிச்சிட்டான். என்னிடம் கூட ஜோதி நல்லா ஃப்ரெண்ட்லியா பழகுறா.
அன்று ஞாயிற்றுக்கிழமை. லேட்டாக எழுந்திருக்கும் எனக்கு அன்று கொஞ்சம் சீக்கிரம் விழிச்சிட்டேன். வெளியே வந்தப்ப, ஜோதி, மகேஷ், ஜெகன் மூவரும் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தனர். ஏதோ திருவெற்றியூர் கோயிலுக்கு செல்வதாக சொன்னார்கள். நான் என் வேலைகளையெல்லாம் பார்த்துட்டு குளிச்சிட்டு வந்தபோது, யாரோ கதவை தட்டினார்கள். திறந்த போது ஒருவர் நின்று கொண்டிருந்தார். அட, இவர் ஜோதியை கண்டுபிடித்த ஆஸ்பிட்டலின் சீஃப் டாக்டர் அல்லவா? இங்கே எங்கே?
“டாக்டர் நீங்க எங்க இங்க?”
“நீங்க இங்கதான் இருக்கீங்களா? இல்ல ஜோதியையும், அவங்க ஹஸ்பண்டையும் பார்க்க வந்தேன். மேலே இல்லை. அதான் விசாரிக்கலாம்னு. அவங்க எங்கே?”
“அவங்க கோயிலுக்கு போயிருக்காங்க. திருவெற்றியூர் அம்மன் கோயில்.”
“அப்படியா சரி நான் அவங்களை அப்புறம் வந்து பார்க்கிறேன். வந்தா சொல்லிடுங்க”
“சரிங்க.”
அவர் கிளம்பிய போது நினைவுக்கு வந்தது. இவர் பெயர் கூட இதுவரை கேட்கவில்லை.
“நான் ஆஸ்பிட்டல்ல கூட கவனிக்கலை. டாக்டர் உங்க பேர் என்னன்னு தெரிஞ்சிக்கலாமா? ”
“என் பேர் முரளி”
அடுத்த பாகத்தில் முடியும்...


