கதையின் முந்தைய பாகங்கள்..
ஜோதி வந்து ஒரு வாரம் ஆச்சு.இப்ப பரவாயில்லை அவளுக்கு மகேஷை நல்லா அடையாளம் தெரிஞ்சிடுச்சு. ஜெகனோட ரொம்ப அச்சாட் ஆயிட்டாள். மகேஷை அடையாளம் தெரிஞ்சிகிட்டாளான்னு குழப்பமா இருக்கலாம் உங்களுக்குக்கு...
ஜோதியை நான் ஆஸ்பிட்டல்ல பார்த்து ரொம்ப அதிர்ச்சியானேன். அவளுக்கு என்னை அடையாளமே தெரியலை. அங்கிருந்த சீஃப் டாக்டர்கிட்ட விசாரிச்சப்ப “நான் ஜோதியை 6 மாசம் முன்னாடி ஒருநாள் ரோட்டில் அடிபட்டு கிடக்கிறதை பார்த்து இங்க கொண்டு வந்தேன். 2 மாசம் கழிச்சு நினைவு திரும்பினாலும் அவளுக்கு அடிப்பட்டதில பழசெல்லாம் மறந்துருச்சு. அவங்க பேரை தவிர எதுவும் ஞாபகம் இல்ல. செலக்டிவ் அம்னீஷியா. ஆனா நினைவு எப்ப வேணும்னாலும் திரும்பலாம். விளம்பரம் கொடுத்தோம். இவங்களை தேடி யாரும் வரலை. இன்னும் ட்ரீட்மெண்ட் முடியலை அதான் இங்க வச்சிருக்கோம்” அப்படின்னார். அப்புறம் மகேஷை வர வச்சேன். மகேசை அவளுக்கு ஏதோ நெருங்கின உறவு மாதிரி இருக்கறதா சொன்னாள். நாங்க அவளை சென்னைக்கு கூட்டிட்டு வந்துட்டோம்.
அப்புறம் எனக்கு தோணுச்சு ஜோதி ஜெகன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கா. அப்ப அவன் கூட பழக விட்டா நினைவு திரும்பலாம். நான் சொன்ன யோசனையை மகேஷ் ஏத்துகிட்டார். இந்த ஒரு வாரத்தில் நல்ல இம்ப்ரூவ்மெண்ட். அவ மகேஷை கணவனா ஏத்துகிற நிலைக்கு வந்துட்டா. ஜெகனை தன் குழந்தையாவே நினைச்சு பழக ஆரம்பிச்சிட்டா. ஜெகனும் தன் அம்மாவை கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டு வரான்.
என்ன கொடுமைன்னா என்னை பார்த்தா எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு இப்பத்தான் சொல்றா...ம்ஹூம்.
-----------------------------------------------
-----------------------------------------------
அந்த மரத்தடியில் ஸ்வப்னா என் முன் நின்றிருந்தாள்.
இந்த ஒரு வாரத்தில் இவளை சமாளிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. விட்டா எம்டிக்கிட்ட மாட்டியே விட்ருவா போல. நேத்து அப்படித்தான் அவ வீட்ல அன்பில்லாத அப்பாவுக்கு-னு லட்டர் எழுதி வச்சுட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்துட்டா. அவளை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. நானே ஏற்கனவே பல குழப்பத்தில இருந்தேன். எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. இவகிட்ட பேசி காதல் இல்லைன்னு புரிய வைக்கனும்னு வரச் சொன்னேன்.
“ஸ்வப்னா. நீ என் மேல வச்ச அன்புக்கு ரொம்ப நன்றி. எனக்கு உன்னை பிடிக்கும். உன்னோட இன்னசென்ஸ், குழந்தைத்தனம் எல்லாம் புடிக்கும். ஆனா....உன்னை நான் லவ் பண்ணலை. அப்படி ஒரு எண்ணமே எனக்கு வரலை. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ... உன் மனசுக்கு புடிச்ச மாதிரி கணவன் கிடைப்பான். ஆனா அது நா இல்ல...உன் அப்பா உன்மேல ரொம்ப பாசம் வச்சிருக்கார். நான் அவர் கூட பழகினது கொஞ்ச நேரம்தான் ஆனா அவர் தன்னைப் பத்தி பேசுனது விட உன்னை பத்திதான் அதிகமா பேசுவார்.”
“ஜெயந்த் உங்களுக்கு தெரியாது எங்கப்பா சின்ன வயசில இருந்தே என்னை சரியா கவனிக்க மாட்டார். அவர் அன்பில்லாதவர். அது எனக்கு புடிக்காது. அப்படியே படிப்படியா வளர்ந்து எனக்கு அவர் மேல கோவம்தான் வருது. அவர் பண்ணுறது எதுவுமே எனக்கு புடிக்காது. இப்ப கூட எனக்கு மாப்பிள்ளை பார்த்துருக்கார். அதான் நேத்து கூட நான் உங்க வீட்டுக்கு வந்துட்டேன்”
“தட்ஸ் இட்.. உனக்கு என்னை புடிக்கும்கிறதை விட உங்கப்பா விட்டு விலகி வாழணும்னு நினைக்கிற. இல்ல ஸ்வப்னா. உங்கப்பா உன் கூட இல்லங்கிறதுதானே உன் குறை. ஆனா அவர் யாருக்காக அப்படி உழைக்கிறார், உனக்காகதானே. தனக்குன்னு எந்த சுகங்களும் தேடிக்காம உனக்காகவே வாழறவரையா அன்பில்லாதவர்னு சொல்றே. தப்பு ரொம்ப தப்பு. உன் அப்பா கூட பேசு மனசு விட்டு பேசு. அவர் அன்பு உனக்கு புரியும். உனக்கும் அவர் மேல அன்பு வரும்.”
“ஸ்வப்னா நான் உனக்கு ஒரு நல்ல நண்பனா என்னைக்கும் இருப்பேன். ஆனா காதலனாவோ கணவனோ என்னால முடியாது சாரி...”
ஸ்வப்னா அமைதியாக இருந்தாள். பின் ஏதோ முடிவோடு கிளம்பினாள்.
“தேங்க்ஸ் ஜெயந்த். எனக்கு எங்கப்பா மேல ரொம்ப அன்பு அதிகம் அதனாலதானே அவர் கூட இல்லங்கிறதுக்கு கோபப்படுறேன். அது எனக்கு இப்ப புரியுது. ரொம்ப நன்றி............ நீங்க என்னை காதலிக்கலன்னு சொன்னது எனக்கு வருத்தம்தான் ஆனாலும் ஒரு நல்ல தோழியா என்னை ஏத்துகிட்டீங்களே அது போதும்...”
-----------------------------------------------
-----------------------------------------------
எப்படியோ இந்த ஸ்வப்னா பிரச்சினை ஒரு வழியா முடிஞ்சது. ஜோதி கிடைக்காதது வருத்தம்தான், இருந்தாலும் இப்ப அவ கணவன் கூட சேர்ந்துட்டா அது எனக்கு போதும். இந்த கார்த்திக் - அபிநயா விசயம் இருக்கு... நாளைக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. எல்லாம் நல்லபடியா நடக்கணும். கோகுல் அப்பப்ப என்னை சந்தேகமா பார்க்கிற மாதிரியே இருக்கு ஏதாவது கண்டுபுடிச்சிட்டானா?
யோசனையுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது ஃபோன் ஒலித்தது.
“ஹலோ”
“ஜெயந்த் நான் அம்மா பேசறண்டா”
“சொல்லும்மா எப்படியிருக்க”
“எல்லோரும் நல்லா இருக்கோம்டா. நீதான் எங்க ஆசையை நிறைவேத்த மாட்ற. எப்பத்தான் உனக்கு கல்யாணம் ஆகப்போகுதோ.”
நான் யோசித்தேன். சிறிது மவுனத்திற்கு ”சரிம்மா.. உன் இஷ்டம்போல பொண்ணு பாரு. எனக்கு சம்மதம்”
“அப்படியாடா. டேய்..ரொம்ப சந்தோசம்டா. ரொம்ப சந்தோசம்...வச்சிருடறண்டா” அம்மா சந்தோசத்துடன் ஃபோனை வைத்தாள்.
நான் சிரித்துக் கொண்டே வீட்டுக்குள் சென்றேன். குளித்து விட்டு வெளியே வந்தபோது மாடியில் ஏதோ சத்தம் கேட்டது. மேலே ஏறிச் சென்ற போது....
ஜெகன் ஜோதியிடம் ஒண்டியிருக்க ஜோதி அவனை அணைத்தடி படி இருந்தாள். மகேஷ் அருகில் நின்றிருந்தார். அவர்களுக்கு அருகில் “என் குழந்தை எனக்கு வேணுங்க” என ஒருவர் சற்று கோபத்தோடு கூறிக் கொண்டிருந்தார். நான் அருகில் சென்று கேட்டேன்.
”மகேஷ் இது...யாரு”
அவர் தயக்கத்துடன் சொன்னார், “ஜெயந்த்... இவர்... வெங்கடேஷ். ஷீலாவோட கணவர்”
தொடரும்...