கதையின் முந்தைய பாகங்கள்..
"ஜோதி" ஐந்தாம் பாகம் "ஜோதி" ஆறாம் பாகம்
"ஜோதி" ஏழாம் பாகம் "ஜோதி" எட்டாம் பாகம்
"ஜோதி" ஒன்பதாம் பாகம் "ஜோதி" பத்தாம் பாகம்
"ஜோதி" ஏழாம் பாகம் "ஜோதி" எட்டாம் பாகம்
"ஜோதி" ஒன்பதாம் பாகம் "ஜோதி" பத்தாம் பாகம்
“ஜோதி மகேஷ் கிட்ட சண்டை போடுகிட்டு ஷீலாவை பார்க்க போனா, ஆனா அவ மகேஷ் திட்டினதால ஊரை விட்டு போனது கேள்விப்பட்ட ஷீலா என்ன செய்யதுன்னு தெரியாம தற்கொலை செய்ய போனா. யதேட்சையா நான் பார்த்து தடுத்தேன். அவ மகேஷை அந்த நிமிசம் வெறுத்தா. வாழப் பிடிக்கலன்னு சொன்னா. நான் கொஞ்ச நாள் அவரை விட்டு பிரிஞ்சி இருக்கலாமேன்னு சொன்னேன். அவங்க அப்பாவும் இப்ப உயிரோட இல்ல. எங்க போறதுன்னு அவளுக்கு புரியலை. சொந்தக்காரங்க வீடுன்னா மகேஷ் தேடி வந்துருவாரே. நான் திருச்சியில எனக்கு தெரிஞ்ச விடுதியில ஜோதியை தங்க வச்சேன்” “நான் முரளிகிட்ட இந்த விசயத்தை சொன்னப்ப அவன் வேற மாதிரி யோசிச்சான். இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காவது ஜோதி மனசு மாறிட்டா மகேஷும் ஜோதியும் சேர்ந்துடுவாங்க. அதனால ஜோதியை கடத்தி அடைச்சு வைக்கனும்னு நினைச்சான். எனக்கு அதில விருப்பம் இல்ல. ஆனா அவன் கணேஷ் நிலைமையையும் ஃபிரண்ட்ஷிப்பையும் காரணம் காமிச்சு என்னை அமைதியாக்கிட்டான்.” “அவனே விடுதிக்கு போய் ஷீலா அழைச்சிட்டு வரச்சொன்னதா பொய் சொல்லி எப்படியோ ஜோதியை கடத்திட்டான். அவன் ஊர்ல அவனுக்கு செல்வாக்கு ஜாஸ்தி. ஜோதியை அங்க தந்திரமா கடத்தி வச்சிருந்தான். ஆனா ஒரு தப்பிக்கிற முயற்சியில அடிப்பட்டு ஜோதிக்கு நினைவு போயிருச்சு. முரளி அவன் ஹாஸ்பிடல்லேயே சேர்த்து பார்த்துகிட்டான். அவளை எங்கேயும் போக விடலை. அவளை யாரும் பார்க்கவும் வரலை. இதனால அவ அங்க இருக்கிறது யாருக்குமே தெரியலை. மகேஷ் நாளாக நாளாக ரொம்ப வேதனைப்பட ஆரம்பிச்சார். என்னைக்காவது அவரா தற்கொலை பண்ணி சாவார்னு முரளி காத்திருந்தான். ஆனா அப்பதான் நீ அவளை பார்த்து என்னென்னமோ ஆச்சு........” “எல்லாம் சரி அருண் நீ சொன்ன கணேஷ்-ஆகாஷ் விசயத்துக்கும் ஜோதி-மகேஷ்க்கும் என்ன சம்பந்தம்?” “மாலாவோட அண்ணன் வேற யாருமில்ல மகேஷ்தான்.” ”அன்னைக்கு மாலாவோட அண்ணன் திட்டி அவமானப்படுத்தினது தாங்க முடியாம ஆகாஷ் தற்கொலை பண்ணிகிட்டான். அதை கண்ணால கணேஷ் பார்த்தும் அவனால தடுக்க முடியலை. அந்த சம்பவம் அவன் மனநிலையை பாதிச்சிடுச்சு. இது முரளியை ரொம்ப கோவப்படுத்தியது. மாலாவோட அண்ணனை கொலையே பண்ணிடலாம்னு நினைச்சான் நான் தடுத்தேன். மாலாவோ கல்யாணம் பண்ணிகிட்டு நிம்மதியா இருக்கா. மகேஷ் அவர் ஊரை விட்டு கல்யாணம் பண்ணிகிட்டு எந்த ஊருக்கு போனாருன்னே தெரியலை. நான் இங்க குடிவந்தப்பதான் ஜோதி-மகேஷை பார்த்தேன்.” அப்போதுதான் நினைவுக்கு வந்தது. ”அருண் முரளிதான் டாக்டர்னா. அவர் இப்பதானே ஜோதி-மகேஷை தேடி வந்து போனாரு” “என்னடா சொல்றே, முரளி வந்தானா??” “ஆமாண்டா ஏன் பதட்டப்படறே?” “அய்யோ...ஜோதி இங்க வந்ததால என்ன பண்ணுறதுன்னே தெரியாம மறுபடியும் மகேஷை கொலையே பண்ணிடலாம்னு சொல்லிகிட்டு இருந்தான். நான் தடுத்து வச்சேன். அவன் இங்க வந்தானா அப்போ...” |
அந்த மதிய நேரத்தில் அதிக கூட்டமில்லை கோயிலில். ”என்னங்க ஜெகன் நம்ம கூடத்தானே இருப்பான். எங்கேயும் போகமாட்டான் இல்ல?” “இல்ல ஜோதி, ஜெகன் நம்ம கூடத்தான் இருப்பான்” “ஆனா நீ இருக்க மாட்டே...!” “யார் சார் நீங்க ” “ஆகாஷ் ஞாபகமிருக்கா?..........” என ஆரம்பித்து முரளி எல்லாவற்றையும் சொல்லி முடித்தான். “நான் அப்படியெல்லாம் நடக்கும்னு நினைக்கலை. ஆனா நீங்க அதுக்காக...” “இதுக்குமேல உன்னை விடப் போறதில்லை” கத்தி போன்ற ஒரு ஆயுத்ததுடன் மகேஷை நோக்கி பாய்ந்த முரளியை பின்னாலிருந்து யாரோ பிடித்து இழுத்தார்கள். ”வெங்கடேஷ் நீங்களா?” “யார் சார் இவன்” முரளி கோபமாக வெங்கடேஷை உதறித் தள்ள வெங்கடேஷ் ஜோதிமேல் விழுந்தார். ஜோதி தடுமாறி கோவில் சுவற்றில் முட்டிக் கொண்டு மயங்கினாள். முரளி மீண்டும் வேகமாக பாய்ந்தான். நடந்த சண்டையை பார்த்துக் கொண்டிருந்த ஜெகன் பலமாக அழ ஆரம்பித்தான். அவனை தூக்க குறுகே வந்த வெங்கடேஷை முரளியின் கத்தி பதம் பார்த்தது. அப்போதுதான் நானும் அருணும் அங்கே போய்ச் சேர்ந்தோம். அருண் எப்படியோ முரளியை தடுத்தான். நான் ஜோதியையும் வெங்கடேஷ்-ஜெகனையும் கவனித்தேன். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த மகேஷ் தழுதழுத்த குரலோடு பேசினார். “சாரி முரளி. நான் அன்னைக்கு இருந்த மனநிலைமையில் ஒரு மனிதன் தற்கொலை செஞ்சிக்கிற அளவுக்கு பேசியிருக்கக் கூடாது. அந்த குற்ற உணர்ச்சி என் வாழ்நாள் முழுதும் இருக்க போகுது. அப்படி பார்த்து கல்யாணம் செஞ்சு வச்ச என் தங்கையும் இப்ப நிம்மதியா வாழலை. நீங்க செஞ்ச எதுவும் எனக்கு பெரிசா படலை. ஏன்னா என்னால இனி நடந்ததை மாற்ற முடியாது. இதுக்கு மேலயும் உங்களுக்கு என் மேல கோபம்னா என்னை கொன்னுடுங்க.” |
ஆபிசில் விழா நன்றாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பாஸ் தீனதயாள் ஒரு புதிய ஃபாக்டரியை திறந்து வைப்பதுடன் தன் மாப்பிள்ளை கார்த்திக்கை ஜேஎம்டியாக அறிவிக்கும் ஃபங்ஷன் அது.
வாழ்க்கை ஒரு சுவாரசியமான நாவல் போன்றது. எப்போது எந்த திருப்பங்கள் வருமென்றே தெரியாது. ஜோதி அந்த சம்பவத்தில் அடிப்பட்டு மீண்டும் நினைவு வந்ததும், அங்கே ஜெகனை பார்க்க அவர்களை பின் தொடர்ந்த வெங்கடேஷ் அவர்களை காப்பாற்றியதும், பின் மனம் மாறி இனி ஜெகன் அவர்களிடமே வளரட்டும், ஆனால் என்றாவது ஆசைப்பட்டு ஒரு வெளியாளாக வந்து பார்க்க அனுமதி கேட்டதும் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
முரளி மனம் மாறவில்லை. ஆனால் அவர் இப்போது சாந்தமாகிவிட்டார். அதற்கு கணேஷ் தேறி வருவது கூட காரணமாக இருக்கலாம். அருண் ஜோதியிடம் மன்னிப்பு கேட்ட பின்பும் மனம் கேளாமல் அங்கிருந்து வீட்டை காலி செய்து கொண்டு வேறு பகுதிக்கு சென்று விட்டான். காலம் போடும் கணக்கு என்றைக்கும் புரிவதில்லை. ஆனால் எல்லாவற்றிலும் அன்பு அடிப்படையாக இருந்ததை உணர்ந்தேன்.
தூரத்தில் ஸ்வப்னாவும் கோகுலும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். காலம் நினைத்தால் அவர்கள் கூட இணையலாம்....
ஃபோன் ஒலித்தது.
“ஜெயந்த் அம்மா பேசறேண்டா”
“சொல்லும்மா”
“நாங்க உனக்கு பொண்ணு பார்த்திருக்கோம்டா...
"என்னம்மா சொல்றீங்க...
"ஆமா அடுத்த வாரம் புறப்பட்டு வா. நீயும் பார்த்திடலாம். பொண்ணு நமக்கு சொந்தம்தான் பேரு ஜெயஸ்ரீ.”
"என்னம்மா சொல்றீங்க...
"ஆமா அடுத்த வாரம் புறப்பட்டு வா. நீயும் பார்த்திடலாம். பொண்ணு நமக்கு சொந்தம்தான் பேரு ஜெயஸ்ரீ.”
(முற்றும்)
"ஜோதி" கதையை பொறுமையாக படித்து தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக கூறிய அனைவருக்கும், மேலும் என்னை ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்கள் மற்றும் சில நேரத்தில் சேற்றில் மாட்டிக்கொண்ட குதிரையை போல கதை தத்தளித்த பொது எனக்கு உதவி செய்து பல ஆலோசனைகள் தந்த அன்பு நண்பர் எஸ்.கே அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. |
112 comments:
நண்பா கதை நன்றாக முடிந்தது. நானும் தங்களுக்கு உதவினேன் என்பதே எனக்கு மிக்க மகிழ்ச்சி! இனியும் மென்மேலும் பல சிறப்பான படைப்புகளை உருவாக்கி சிறப்படைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே..
அருமை தொடருங்கள்........
//அருமை தொடருங்கள்........//
ஜெயஸ்ரீ பேரை பார்த்ததாலதானே சொல்றீங்க?
(முற்றும்)//////
தங்கள் படைப்புகளில் நான் மிகவும் ரசித்தது!
//வைகை said...
(முற்றும்)//////
தங்கள் படைப்புகளில் நான் மிகவும் ரசித்தது!//
அப்ப ஆரம்பத்திலிருந்து முற்றும் வரை பயணம் செஞ்சிருக்கீங்க! வாழ்த்துக்கள்!
பார்த்தேன்.... ரசித்தேன்.... தொடருங்கள்....!
online..
அண்ணன் வந்திட்டேன்...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அருமை தொடருங்கள்........
//
அதுக்கு கணக்கா தானே முடிச்சிருக்கோம்...
கண்டிப்பா தொடருவோமில்ல..
//////எஸ்.கே said...
//அருமை தொடருங்கள்........//
ஜெயஸ்ரீ பேரை பார்த்ததாலதானே சொல்றீங்க?/////
என்னது ஜெயஸ்ரீயா எங்கே, சொல்லவே இல்ல?
எஸ்.கே said...
//அருமை தொடருங்கள்........//
ஜெயஸ்ரீ பேரை பார்த்ததாலதானே சொல்றீங்க?
//
ஆமா நண்பா அப்படி தான் இருக்கும்... எவ்வளவு எதிர்பாக்குறாங்க பாருங்க..
ஆமா அடுத்த வாரம் புறப்பட்டு வா. நீயும் பார்த்திடலாம். பொண்ணு நமக்கு சொந்தம்தான் பேரு ஜெயஸ்ரீ.”///
திரும்பவும் மொதல்ல இருந்தாஆஆஆஆ?!!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////எஸ்.கே said...
//அருமை தொடருங்கள்........//
ஜெயஸ்ரீ பேரை பார்த்ததாலதானே சொல்றீங்க?/////
என்னது ஜெயஸ்ரீயா எங்கே, சொல்லவே இல்ல?
//
அதுக்கு கொஞ்சமாச்சும் படிக்கணும்.... போங்க முதல்ல இந்த பதிவையாவது படிச்சிட்டு வாங்க...
வைகை said...
(முற்றும்)//////
தங்கள் படைப்புகளில் நான் மிகவும் ரசித்தது!
//
தெரியும் பங்காளி.. உங்களுக்கு இது மட்டும் தான் பிடிக்குமுன்னு...
ஜோதி" முதல் பாகம் ஜோதி" இரண்டாம் பாகம்
"ஜோதி" மூன்றாம் பாகம் ஜோதி" நான்காம் பாகம்
"ஜோதி" ஐந்தாம் பாகம் "ஜோதி" ஆறாம் பாகம்
"ஜோதி" ஏழாம் பாகம் "ஜோதி" எட்டாம் பாகம்
"ஜோதி" ஒன்பதாம் பாகம் "ஜோதி" பத்தாம் பாகம்
"ஜோதி" பதினொன்றாம் பாகம் "ஜோதி" பனிரெண்டாம் பாகம் /////
வெறும் பாகமா இருக்கு? படத்தையே காணும்?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பார்த்தேன்.... ரசித்தேன்.... தொடருங்கள்....!
//
எத பார்த்தீங்க, எத படிச்சீங்க, ஒழுங்கு மரியாதையா சொல்லுங்க..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////எஸ்.கே said...
//அருமை தொடருங்கள்........//
ஜெயஸ்ரீ பேரை பார்த்ததாலதானே சொல்றீங்க?/////
என்னது ஜெயஸ்ரீயா எங்கே, சொல்லவே இல்ல?////
அப்ப டெரர் சொல்லலியா?
வைகை said...
ஆமா அடுத்த வாரம் புறப்பட்டு வா. நீயும் பார்த்திடலாம். பொண்ணு நமக்கு சொந்தம்தான் பேரு ஜெயஸ்ரீ.”///
திரும்பவும் மொதல்ல இருந்தாஆஆஆஆ?!!
//
தப்பிக்க முடியாதுடியே... நீங்க அழுது புரண்டாலும் ஒண்ணும் பண்ண முடியாது..
//////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அருமை தொடருங்கள்........
//
அதுக்கு கணக்கா தானே முடிச்சிருக்கோம்...
கண்டிப்பா தொடருவோமில்ல../////
என்னது தொடருவியா... ஒரு பேச்சுக்க்கு வேற என்ன கமெண்ட்டு போடுறதுன்னே தெரியாம போட்டா.... தொடருவாராம்ல...? வேற ஒண்ணுமில்ல, இது எதோ மோகினியோட சேட்டைதான்.....!
இதுக்கு ஒரு நல்ல பரிகாரம் இருக்கு எங்கிட்ட,
பச்ச மொளகாய நீளவாக்குல வெட்டி, இஞ்சிச்சாத்துல ஊற வெச்சி, பின்னாடி வெச்சுக்கிட்டு மல்லாக்கப் படுத்து டெர்ரர் நேத்து எழுதுன பதிவ நெனச்சு மனச ஒருமுகப்படுத்துனா சரியாயிடும், நாளைக்கு ரெண்டு வேள, ஒரு மண்டலத்துக்கு இப்பிடி செய்யோனும்......
அருமை பாஸ்! அப்புறம் ஜெயஸ்ரீ?
வைகை said...
ஜோதி" முதல் பாகம் ஜோதி" இரண்டாம் பாகம்
"ஜோதி" மூன்றாம் பாகம் ஜோதி" நான்காம் பாகம்
"ஜோதி" ஐந்தாம் பாகம் "ஜோதி" ஆறாம் பாகம்
"ஜோதி" ஏழாம் பாகம் "ஜோதி" எட்டாம் பாகம்
"ஜோதி" ஒன்பதாம் பாகம் "ஜோதி" பத்தாம் பாகம்
"ஜோதி" பதினொன்றாம் பாகம் "ஜோதி" பனிரெண்டாம் பாகம் /////
வெறும் பாகமா இருக்கு? படத்தையே காணும்?
//
அடப்பாவிகளா இதென்ன ஜுவாலாஜி கிளாசா, வெட்டி வச்சு பாகம் குறிக்கிறதுக்கு...
எஸ்.கே said...
//வைகை said...
(முற்றும்)//////
தங்கள் படைப்புகளில் நான் மிகவும் ரசித்தது!//
அப்ப ஆரம்பத்திலிருந்து முற்றும் வரை பயணம் செஞ்சிருக்கீங்க! வாழ்த்துக்கள்!/////
ஆமா எஸ்.கே!
தம்பி ஜெயந்த்..டீ இன்னும் வரல...
//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////எஸ்.கே said...
//அருமை தொடருங்கள்........//
ஜெயஸ்ரீ பேரை பார்த்ததாலதானே சொல்றீங்க?/////
என்னது ஜெயஸ்ரீயா எங்கே, சொல்லவே இல்ல?////
அப்ப டெரர் சொல்லலியா?/////
அவருக்கு நேத்து தண்ணி கொஞ்சம் அதிகமாயி, தன்னோடு ப்ளாக்குன்னு தெரியாம வாந்தி எடுத்து வெச்சிட்டாரு.... இன்னும் தெளியல போல, வந்தாத்தான் தெரியும்...!
வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////எஸ்.கே said...
//அருமை தொடருங்கள்........//
ஜெயஸ்ரீ பேரை பார்த்ததாலதானே சொல்றீங்க?/////
என்னது ஜெயஸ்ரீயா எங்கே, சொல்லவே இல்ல?////
அப்ப டெரர் சொல்லலியா?
//
எலேய் ஒரு பெயர கூட விட்டு வைக்க மாட்டீங்களா... ஆமா டேரருக்கும் ஜெயஸ்ரீ க்கும் என்ன சம்மந்தம்...
வெறும்பய said...
வைகை said...
வெறும் பாகமா இருக்கு? படத்தையே காணும்?
//
அடப்பாவிகளா இதென்ன ஜுவாலாஜி கிளாசா, வெட்டி வச்சு பாகம் குறிக்கிறதுக்கு...////
வெட்டுனா நல்லாவா இருக்கும்.....வெட்டாம..ஹி ஹி
/////வெறும்பய said...
online..
அண்ணன் வந்திட்டேன்...////
யாருக்கு அண்ணன்....? ஜெயஸ்ரீக்கா...?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்ப டெரர் சொல்லலியா?/////
அவருக்கு நேத்து தண்ணி கொஞ்சம் அதிகமாயி, தன்னோடு ப்ளாக்குன்னு தெரியாம வாந்தி எடுத்து வெச்சிட்டாரு.... இன்னும் தெளியல போல, வந்தாத்தான் தெரியும்...!//
ஆமாமா....நானும் பார்த்தேன்......எம்புச்சம்பலம் பயத்த நல்லா புயிஞ்சு.....மூக்குல ரெண்டு சொட்டு விடவும்...சரியாயிரும்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அருமை தொடருங்கள்........
//
அதுக்கு கணக்கா தானே முடிச்சிருக்கோம்...
கண்டிப்பா தொடருவோமில்ல../////
என்னது தொடருவியா... ஒரு பேச்சுக்க்கு வேற என்ன கமெண்ட்டு போடுறதுன்னே தெரியாம போட்டா.... தொடருவாராம்ல...? வேற ஒண்ணுமில்ல, இது எதோ மோகினியோட சேட்டைதான்.....!
இதுக்கு ஒரு நல்ல பரிகாரம் இருக்கு எங்கிட்ட,
பச்ச மொளகாய நீளவாக்குல வெட்டி, இஞ்சிச்சாத்துல ஊற வெச்சி, பின்னாடி வெச்சுக்கிட்டு மல்லாக்கப் படுத்து டெர்ரர் நேத்து எழுதுன பதிவ நெனச்சு மனச ஒருமுகப்படுத்துனா சரியாயிடும், நாளைக்கு ரெண்டு வேள, ஒரு மண்டலத்துக்கு இப்பிடி செய்யோனும்......
//
இன்னொரு வாட்டி டெரர் எழுதின படிக்கிற மாதிரி ஒரு சந்தர்ப்பம் வந்தா அந்த செகண்ட் நான் தற்கொலை பண்ணிப்பேன்.. நேத்தைக்கு ஒரு தடவை படிச்சதுக்கே நிக்காம போய்கிட்டிருக்கு.. யார் அவனையெல்லாம் பதிவெழுத சொல்றது... இப்ப பாருங்க அந்த பதிவ படிச்சதிலிருந்து ரேமஷை காணமாம்.. ஆளு எங்கே போனாருன்னே யாருக்கும் தெரியல...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெறும்பய said...
online..
அண்ணன் வந்திட்டேன்...////
யாருக்கு அண்ணன்....? ஜெயஸ்ரீக்கா...?//
என்ன இப்படி சொல்லிட்டீங்க? பொண்ணு பார்க்க போறார். நண்பர்கள் துணை சென்று உதவ வேண்டாமா?
ஜீ... said...
அருமை பாஸ்! அப்புறம் ஜெயஸ்ரீ?
//
நன்றி பாஸ்.. கூடிய விரைவில், எதிர்பாருங்கள்..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெறும்பய said...
online..
அண்ணன் வந்திட்டேன்...////
யாருக்கு அண்ணன்....? ஜெயஸ்ரீக்கா...?///
ஜெயந்த் மச்சான் சவுக்கியமா?
அருமை தொடருங்கள்........
தொடரட்டும் உங்கள் ஆபத்தான பணி
வைகை said...
எஸ்.கே said...
//வைகை said...
(முற்றும்)//////
தங்கள் படைப்புகளில் நான் மிகவும் ரசித்தது!//
அப்ப ஆரம்பத்திலிருந்து முற்றும் வரை பயணம் செஞ்சிருக்கீங்க! வாழ்த்துக்கள்!/////
ஆமா எஸ்.கே!
தம்பி ஜெயந்த்..டீ இன்னும் வரல...
//
ஒரு தடவை கதையை புல்லா படிச்சிட்டு தெளிவா வாங்க டீ என்ன பார்லி தண்ணியே வாங்கலாம்..
வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இன்னொரு வாட்டி டெரர் எழுதின படிக்கிற மாதிரி ஒரு சந்தர்ப்பம் வந்தா அந்த செகண்ட் நான் தற்கொலை பண்ணிப்பேன்.. நேத்தைக்கு ஒரு தடவை படிச்சதுக்கே நிக்காம போய்கிட்டிருக்கு.. யார் அவனையெல்லாம் பதிவெழுத சொல்றது... இப்ப பாருங்க அந்த பதிவ படிச்சதிலிருந்து ரேமஷை காணமாம்.. ஆளு எங்கே போனாருன்னே யாருக்கும் தெரியல...///
நல்லா தேடுங்கையா.....கலா அக்காவ பாத்திகளா? அவங்களையும் காணுமா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////எஸ்.கே said...
//அருமை தொடருங்கள்........//
ஜெயஸ்ரீ பேரை பார்த்ததாலதானே சொல்றீங்க?/////
என்னது ஜெயஸ்ரீயா எங்கே, சொல்லவே இல்ல?////
அப்ப டெரர் சொல்லலியா?/////
அவருக்கு நேத்து தண்ணி கொஞ்சம் அதிகமாயி, தன்னோடு ப்ளாக்குன்னு தெரியாம வாந்தி எடுத்து வெச்சிட்டாரு.... இன்னும் தெளியல போல, வந்தாத்தான் தெரியும்...!
//
அதெல்லாம் தெளிஞ்சிச்சாம்.. இப்போ அதை வாஷ் பண்ணிட்டிருக்காராம்..
வைகை said...
வெறும்பய said...
வைகை said...
வெறும் பாகமா இருக்கு? படத்தையே காணும்?
//
அடப்பாவிகளா இதென்ன ஜுவாலாஜி கிளாசா, வெட்டி வச்சு பாகம் குறிக்கிறதுக்கு...////
வெட்டுனா நல்லாவா இருக்கும்.....வெட்டாம..ஹி ஹி
//
ச்சீ.... கெட்ட பசங்க
//////வைகை said...
வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இன்னொரு வாட்டி டெரர் எழுதின படிக்கிற மாதிரி ஒரு சந்தர்ப்பம் வந்தா அந்த செகண்ட் நான் தற்கொலை பண்ணிப்பேன்.. நேத்தைக்கு ஒரு தடவை படிச்சதுக்கே நிக்காம போய்கிட்டிருக்கு.. யார் அவனையெல்லாம் பதிவெழுத சொல்றது... இப்ப பாருங்க அந்த பதிவ படிச்சதிலிருந்து ரேமஷை காணமாம்.. ஆளு எங்கே போனாருன்னே யாருக்கும் தெரியல...///
நல்லா தேடுங்கையா.....கலா அக்காவ பாத்திகளா? அவங்களையும் காணுமா?/////
கலாக்காவுலாம் இப்போ கெடையாதாம், நேத்து ஃபேஸ்புக்ல ஒரு ப்ரொஃபைல் பாத்துட்டு பொலம்பிக்கிட்டு இருந்தாப்ல தொழிலுக்கு நல்லா இருக்குமேன்னு, அதான் எனக்கும் டவுட்டு.....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெறும்பய said...
online..
அண்ணன் வந்திட்டேன்...////
யாருக்கு அண்ணன்....? ஜெயஸ்ரீக்கா...?
//
ஸ்ஸ்சப்பா முடியல...
எஸ்.கே said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////வெறும்பய said...
online..
அண்ணன் வந்திட்டேன்...////
யாருக்கு அண்ணன்....? ஜெயஸ்ரீக்கா...?//
என்ன இப்படி சொல்லிட்டீங்க? பொண்ணு பார்க்க போறார். நண்பர்கள் துணை சென்று உதவ வேண்டாமா?
//
நல்லா சொல்லுங்க நண்பா.. ஜெயஸ்ரீ அவங்களுக்கு சகோதரின்னு...
மாணவன் said...
அருமை தொடருங்கள்........
//
நீ இன்னைக்காவது போய் கதைய படிச்சிட்டு வாடா செல்லம்./.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
தொடரட்டும் உங்கள் ஆபத்தான பணி
//
எழுதும் பொது உங்களுக்கு ஆபத்து.. எழுதி முடிஞ்சா எனக்கில்ல ஆபத்து..
வைகை said...
வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இன்னொரு வாட்டி டெரர் எழுதின படிக்கிற மாதிரி ஒரு சந்தர்ப்பம் வந்தா அந்த செகண்ட் நான் தற்கொலை பண்ணிப்பேன்.. நேத்தைக்கு ஒரு தடவை படிச்சதுக்கே நிக்காம போய்கிட்டிருக்கு.. யார் அவனையெல்லாம் பதிவெழுத சொல்றது... இப்ப பாருங்க அந்த பதிவ படிச்சதிலிருந்து ரேமஷை காணமாம்.. ஆளு எங்கே போனாருன்னே யாருக்கும் தெரியல...///
நல்லா தேடுங்கையா.....கலா அக்காவ பாத்திகளா? அவங்களையும் காணுமா?
//
இன்னாது.. கலாக்காவையும் காணமா.. அப்போ நமிதா கதி..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வைகை said...
வெறும்பய said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இன்னொரு வாட்டி டெரர் எழுதின படிக்கிற மாதிரி ஒரு சந்தர்ப்பம் வந்தா அந்த செகண்ட் நான் தற்கொலை பண்ணிப்பேன்.. நேத்தைக்கு ஒரு தடவை படிச்சதுக்கே நிக்காம போய்கிட்டிருக்கு.. யார் அவனையெல்லாம் பதிவெழுத சொல்றது... இப்ப பாருங்க அந்த பதிவ படிச்சதிலிருந்து ரேமஷை காணமாம்.. ஆளு எங்கே போனாருன்னே யாருக்கும் தெரியல...///
நல்லா தேடுங்கையா.....கலா அக்காவ பாத்திகளா? அவங்களையும் காணுமா?/////
கலாக்காவுலாம் இப்போ கெடையாதாம், நேத்து ஃபேஸ்புக்ல ஒரு ப்ரொஃபைல் பாத்துட்டு பொலம்பிக்கிட்டு இருந்தாப்ல தொழிலுக்கு நல்லா இருக்குமேன்னு, அதான் எனக்கும் டவுட்டு.....
//
எது போன வாரம் உங்க கிட்டேருந்து ஒண்ணு தப்பிச்சு போச்சே அதுவா...
///////வெறும்பய said...
மாணவன் said...
அருமை தொடருங்கள்........
//
நீ இன்னைக்காவது போய் கதைய படிச்சிட்டு வாடா செல்லம்./.......
ஏன்யா சின்னப்பையனை மெரட்டுறீங்க....? சிரிப்பு போலீஸ் மட்டும் வரட்டும்.....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////வெறும்பய said...
மாணவன் said...
அருமை தொடருங்கள்........
//
நீ இன்னைக்காவது போய் கதைய படிச்சிட்டு வாடா செல்லம்./.......
ஏன்யா சின்னப்பையனை மெரட்டுறீங்க....? சிரிப்பு போலீஸ் மட்டும் வரட்டும்...
//
இன்னுமா நம்புறீங்க.. வருவாரா... எனக்கென்னமோ சந்தேகம் தான்..
வைகை said...
(முற்றும்)//////
தங்கள் படைப்புகளில் நான் மிகவும் ரசித்தது! //
me too
அப்பாடி உன்னோட அடுத்த பதிவை தைரியமா படிக்கலாம்
50
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அப்பாடி உன்னோட அடுத்த பதிவை தைரியமா படிக்கலாம்//////
என்னமோ இதுவரை படிச்சுக் கிழிச்ச மாதிரி..... ?
நல்ல தொடர் கதை தந்ததற்கு , பாராட்டுக்கள்!
விரைவில் வேறு கதை, எதிர்பார்க்கிறோம்.
S K சாருக்கும் நன்றி.
ஒரு வழியா ஜோதியை முடிச்சுட்டீங்க போல.. ஹா ஹ ஹா
சிறப்பாக கதை எழுதியதற்கு ...வாழ்த்துக்கள் மீண்டும் ஏதாவது தொடர் எழுதுங்கள்...
உங்க மேலே பயங்கர கோவத்தில் இருக்கேன் கடைசி பதிவிலாவது இந்த ஜோதியின் போட்டோவை போடுவீர்கள் என்று பார்த்தால் கடைசி வரை போடவே இல்லை.
பாஸ்! நேரம் போச்சுது! இப்ப ஓட்டு பின்னாடி கமெண்டு ஓகே
good one .......nallaa irunthathu
ஜோதி கதை அவ்ளோதானா மாம்ஸ்?? இவ்ளோ நாளா படிச்சிட்டு இப்போ திடீர்னு இப்படி முடிஞ்சு போச்சே :( பரவாயில்ல அதான் ஜெய ஸ்ரீ வந்துட்டாங்கல்ல :))
ஜோதி போயி ஜெயஸ்ரீ வந்தாச்சு டும் டும் டும்.....
ம்ஹும் நம்ம பாடு கஷ்டந்தேன்.....
அடடா முடிஞ்சிருச்சா....
சிறப்பாக எழுதியதற்கு வாழ்த்துக்கள்.
முடிச்சாச்சா..
அப்புறம்.. தீபா..(தீபம்)
எப்ப பாஸ்..
முழுதும் வாசித்தேன் அருமையிலும் அருமை யாதவன்
வாழ்த்துகள் ஜெயந்த்.. வித்தியாசமான முயற்சி.
ஜோதி நல்லா இண்ட்ரெஸ்ட்டிங்கா இருந்தது ஜெயந்த்.. எல்லா பாகங்களும் விறுவிறுப்பா போச்சு.. ஒரு வழியா சுபம் போட்டாச்சு..அடுத்து ஜெயஸ்ரீக்காக வெயிட்டிங்.. (கேரக்ட்டர்ஸ கம்மி பண்ணுங்கப்பா.. நியாபகம் வைக்க முடியல..)
//அப்புறம்.. தீபா..(தீபம்)
எப்ப பாஸ்..//
இது என்ன புதுக்கதை.. ஜோதியோட twin sisterஆ இவங்க??
presenttttuuuuu
sorry machchi ippothaan 3-4 naalaa konjooondu konjamea konjam busy; koovichchukkaatheengoo;
he he he he he he he
நண்பர் ஜெயந்திற்க்கு ஜோதி பற்றிய என் கருத்துகள். எதாவது தவறாய் இருந்தால் மன்னித்துவிடுங்கள்...
//பிறை நிலவுக்கு திருஷ்டிப்பொட்டு போல// இதுவரையிலும் படித்திராத புதிய வர்ணனை
பாவையொருத்தி படுத்துறங்குவது போன்ற வளைவு நெளிவுகளுடன் மேற்கு தொடர்ச்சி மலை// வர்ணனை ரசனை
இதுவே பாவையொருத்தி வானம் பார்த்து படுத்திருப்பது போன்ற வளைவு நெளிவுகளுடன் என்று வந்திருந்தால் கச்சிதம்...
//பச்சை பட்டுகளை பரவலாய் போர்த்தியது போன்ற வயல் வெளிகள், // சூப்பர்ப்...
//ஒற்றை ஆலமரம், அதனடியில் நிழல் காயும் ஓட்டு வீடு.// இதுவும் புதிய வர்ணனை படிக்கிறப்போ இதுமாதிரி அட போட வைக்கிற வார்த்தை சேர்ப்புகள் கதைக்கு மிக அவசியம்.
//ஒரு தெளிவான குளத்தங்கரையில் உட்க்கார்ந்து ஒரு சின்ன கல்லை தண்ணியில போட்டா அழகான வட்டங்களா சலனங்கள் விரியும் இல்லையா, அது மாதிரி தான் நீ பண்ற ஒவ்வொரு விசயமும் என் மனசுல சலனத்த உண்டாக்கும், அந்த சலனம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அந்த சலனங்கள் கரையை தொடத் தொட மறைஞ்சிடும்.. ஆனாலும் கொஞ்ச நேரம் உயிர் வாழும் அந்த சந்தோசம் போதும் ஜெயந்த் எனக்கு.//
சரியான இடத்தில் சரியாக பொருந்துகிற உவமானம்..
//பேசாத மவுனத்திலும் பேசிய மொழிகள் எத்தனை!// ரசிக்க முடிகிறது
//“அப்புறம்...... அவர் மனைவி பேர் ஜோதி..... நம்ம கூட காலேஜ்ல படிச்சாலே அவதான்.......”//
மூன்றாம் பாகத்தின் இறுதியில் ட்விஸ்ட் வைத்த இடம் பொருந்திப்போகிறது
நாலாவது பாகம் கொஞ்சம் கவனம் சிதறினாலும் கதையை புரிந்து கொள்ள முடியாதபடி ஏகப்பட்ட முடிச்சுகளுடன் சுவாரஸ்யமாக பயணிக்கிறது..
பாகம் மூன்றில் வரும் ஒலி நாடக்கள் முடிச்சிற்க்கும் பாகம் 5ல் விடை இது கொஞ்சம் புதிய முயற்சி வரவேற்க்க கூடிய ஒன்று அதாவது ஆரம்பத்தில் கதைக்கு சம்பந்தமில்லாத போன்று தோன்றினாலும் அது என்னவா இருக்கும் என்ற ஆவலில் அடுத்தடுத்து தொடர் விறு விறுப்பாக செல்ல போன் மாதிரி இந்த யுத்தி பயன்படுத்தியிருக்கீங்க ஸ்பெசல் பாராட்டுகள்...
இதைத்தொடர்ந்து வரும் ஒட்டுக்கேட்டல் பிட்டும் எதிர்பார்ப்பை எகிற வைத்தது நல்ல யோசனை
//“ம்ஹும். நான் சென்னையிலிருந்து திருச்சி வர காரணமே அவதானே!”//
ஐந்தாவது பாகமும் ட்விஸ்ட்டோட அதே விறுவிறுப்பு குறையாமல் எடுத்து சென்றிருப்பது சுவாரஸ்யம்...
தொடரின் ஆறாவது பாகத்தில் நிறைய முடிச்சுக்கள் புதிதாக எல்லாமே சுவாரஸ்யம்.எதுவுமே மிகையாக தோன்றவில்லை. ஆனால் என் மனதில் இருந்தது என்னவென்றால் நான் அப்படின்னு முடியுற டைரியே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்துது . நல்லா எழுதியிருக்கீங்க ஜெ. சூப்பர்ப்...
அந்த ஆகாஷ் ராக்ஸ் படம் கூட ட்விஸ்ட் :))) இங்கேயும் ஸ்வப்னாவை வைத்து சின்ன ட்விஸ்ட்டோட முடிச்சுருக்கீங்க விறு விறுப்பு...கொஞ்சம் கூட குறையாமல்
ஏழாவது பாகத்தில் ஒட்டுக்கேட்டல் ஒன்றின் முடிச்சு அவிழ்ந்தது.. ஆனாலும் மேலும் மேலும் சில முடிச்சுகள் போட்டு ஒரு படம்+பிளாஷ்பேக் முடிச்சுகளும் போட்டு எடுத்து சென்றிருக்கிறீர்கள் அதே விறு விறுப்பு சிறிதும் குறையாமல்.
எட்டாவது பாகத்தில் ஒட்டுக்கேட்டல் 2ன் முடிச்சவிழ்கிறது.. கொஞ்சம் வேகம் கூடிய விறு விறுப்பு ..
ஒன்பதாவது பாகத்தில்
கிளைமாக்ஸ் கிளைக்கதையும் விறு விறுப்பை கூட்டுகிறது. மெயின்ஸ்டோரியில் வரும் செய்திதுண்டு ட்விஸ்ட் என்னவோ நடந்திருக்கிறது என்ன என்பதற்க்கன விடையாக..பலே பலே..
பத்தாவது பாகத்தில் சேர்க்கப்பட்ட டயலாக்குகளை யூகிக்க முடிவது உங்களுக்கு மைனஸ் பாயிண்ட் ...
பதினொன்றும் பனிரெண்டும் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்
சின்ன சின்ன பிழைகள் அங்காங்கே...
//பெயருக்கேற்றார்ப்போலஎப்போதும் புன்னைகைகளை //
//எப்போதும் போல புன்னகையை புன்னகையை சிதறவிடாமல் //
//எடுத்தோம் கவுத்தொமுன்னு முடிவெடுக்க // கவுத்தோம்
//ஓட்டமும் நடையுமாய் என்னையிளுத்து //
// வீடு ஒன்னு இருக்கிறதா//
//ஆனா ஆசையை செஞ்சுகிட்ட கல்யாணம்//
//லேபரா வேலை செஞ்கிட்டு//
// நீ என் வீட்டு வராதேன்னு//
//அவளுக்கும் அவ வீட்டுக்காருக்கும் //
//இன்னை வரதா சொன்னேன்ல// மூன்றாவது பாகத்திற்க்கு அப்பறம் எழுத்துபிழையே இல்லாமல் இருந்தது ஆறாவது பாகத்தில் தொடர்கிறது... வொய்?
//அவன் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் வீட்டை கண்டுபுடிச்சிட்டேன். அங்க பார்த்தா அவன் வீட்டு பூட்டியிருக்கு.// :(
மைனஸ்கள்
//உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஜெயந்த், உன்னோட பேச்சு, எல்லாத்தையும் சமாளிக்கிற சாமர்த்தியம், உன்னோட தைரியம், கேலி கிண்டல்,கலாட்டாக்கள், ஏதாவது சின்ன விசயங்களுக்காக கூட என்னை விட்டு கொடுத்து பேசாத குணம், எப்பவாவது என் முகம் வாடிப் போயிருந்தா நீ சொல்ற ஆறுதல்கள், என்னோட விசயங்களில் நீ எடுத்துக்கிற உரிமை இப்படி சொல்லிகிட்டே போகலாம் உன்னை எனக்கு பிடிக்கிறதுக்கான காரணங்கள். இந்த அன்பு நட்பா இல்ல காதலான்னு கேட்டா எனக்கு சொல்ல தெரியல.//
//ஜெயந்த் உனக்கும் எனக்கும் நிறைய கடமைகள் இருக்கு, உன்னை பெற்றவங்களும், என்னை பெற்றவங்களும் எவ்வளவு எதிர்பார்ப்போடு நம்மை படிக்க அனுப்பியிருப்பாங்க.? எத்தனை கனவுக் கோட்டை கட்டி வச்சிருப்பாங்க? முதல்ல அவங்க எதிர்பார்ப்புகளை பூர்த்தி செஞ்சு ஒரு நல்ல நிலைக்கு வருவோம்.
இப்போ நமக்கு 21 வயசாகியும் அப்பா அம்மா கைய புடிச்சுகிட்டு தான் நடக்குறோம், இந்த பருவத்தில உனக்கும் சரி எனக்கும் சரி பெற்றவங்களோட துணை வேணும் ஜெயந்த். முதல்ல நல்லா படிச்சு, அதுக்கேற்ற மாதிரி ஒரு நல்ல வேலைய தேடி அம்மா அப்பாவை நம்ம கையை புடிச்சு நடக்க வைப்போம், நாம் அவங்களுக்கு துணையா இருப்போம்.//
இந்த இடங்களில் நம் தமிழ்சினிமாவில் கதாநாயகி பேசுவது போன்று இருக்கிறது.
இதற்க்கு பிறகு வரும் எந்த இடத்திலும் வர்ணனைகள் உவமானங்கள் எதுவும் தேடி தேடி கிடைக்கவில்லை.
ஷீலா,வெங்கடேஷ்,ஜெகன்,கேரக்டர்கள் கதையை விறுவிறுப்பாக எடுத்த செல்வதற்க்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பது கதையின் முடிவில் தெரிகிறது.
ஜோதிக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்ற விஷயம் முதலிலேயே தெரிந்துவிடுகிறது.இல்லையென்றால் கதைநாயகன் ஜெயந்த் ஜோதியோட சேர்ந்துடுவானா இல்லையா என்ற படபடப்பையும் ஏற்படுத்தியிருக்கலாம்.
வேறு எதுவும் மைனஸ்களாக தெரியவில்லை
முடிவாய் தொடரைப்பற்றி...
ஆர்ப்பட்டமில்லாம அழகான காதலோட ஆரம்பிச்ச கதை அதோடு பயணித்த ஊடுகதைகளின் முடிவும் முன்பே யூகிக்க முடியாமல் கடைசி பாகத்தில் அத்தனை முடிச்சுகளையும் சடசடவென்று அவிழ்க்கும் வரை சுவாரஸ்யமாக எழுதியிருப்பதற்க்கு பாராட்டுகள்,ஜெயந்த்.
இடை இடையே பயணிக்கும் கிளைக்கதைகளையும் தொடரின் கதையும் வைத்து பார்க்கும்பொழுது இது ஒரு நான்லீனியர் ஸ்டோரி என்று தெரிந்து கொண்டேன். முழுக்கதையையும் முதலிலே எழுதிவிட்டு தொடர் ஆரம்பித்தீற்களா? அப்படியெனில் பலத்த கைத்தட்டல்கள்.
மொத்தத்தில் ஒரு விறு விறுப்பான ஸ்டோரி படித்த திருப்தி. தொடர் எழுதுறது சாதாரண விஷயமில்லை ஜெ உங்களால எழுத முடிந்திருக்கிறது அதுவும் 12 பாகங்கள் விறு விறுப்பு குறையாமல் எழுதுவது கஷ்டமான காரியம். சின்ன சின்ன புதிய யுக்திகளும் தொடர் விறு விறுப்பா செல்வதற்க்கு பயன்பட்டிருக்கு அதுக்கு ஸ்பெசல் பாராட்டுக்கள்.படிச்சு முடிச்சதும் எனக்கும் ஒரு தொடர் எழுதணும்ன்ற ஆவலை ஏற்படுத்தியிருக்கு.
அடுத்த தொடரில் பிழைகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் , கதைகளை பேச்சுத்தமிழில் எழுதுவதை குறைத்துக்கொள்ளுங்கள். அடுத்த தொடருக்கு இப்பொழுதே என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நல்லாருப்போம் நல்லாருப்போம்...
வலையுலகில் புதிய யுக்திகளை பயன்படுத்தி வலைத்தமிழை இன்னும் ஒரு படி மேலெடுத்துச்செல்வோம்...
நன்றி ...
அதுக்குள்ள முடிஞ்சுடுச்சா?..
ஊகூம்... இன்னும் 10 வருஷம் இழுத்திருக்கலாம்..ஹி..ஹி
என்ன முடிச்சிட்டீங்க????
மெகா தொடர் மாதிரி இன்னும் இழுத்திருக்கலாமே..
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வைகை said...
(முற்றும்)//////
தங்கள் படைப்புகளில் நான் மிகவும் ரசித்தது! //
me too
//
சந்தோசம் தானே.. ஓகே ஓகே நடத்துங்க..
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அப்பாடி உன்னோட அடுத்த பதிவை தைரியமா படிக்கலாம்
//
நீங்க படிக்கிற மாதிரி எழுத முயற்சி பண்றேன்..
Chitra said...
நல்ல தொடர் கதை தந்ததற்கு , பாராட்டுக்கள்!
விரைவில் வேறு கதை, எதிர்பார்க்கிறோம்.
S K சாருக்கும் நன்றி.
//
பொறுமையாக அனைத்து படித்தமைக்கு மிக்க நன்றி அக்கா..
சி.பி.செந்தில்குமார் said...
ஒரு வழியா ஜோதியை முடிச்சுட்டீங்க போல.. ஹா ஹ ஹா
//
ஆமா .. கதை முடிஞ்சு போச்சு..
சௌந்தர் said...
சிறப்பாக கதை எழுதியதற்கு ...வாழ்த்துக்கள் மீண்டும் ஏதாவது தொடர் எழுதுங்கள்...
//
மிக்க நன்றி நண்பா..
சசிகுமார் said...
உங்க மேலே பயங்கர கோவத்தில் இருக்கேன் கடைசி பதிவிலாவது இந்த ஜோதியின் போட்டோவை போடுவீர்கள் என்று பார்த்தால் கடைசி வரை போடவே இல்லை.
//
ஹா ஹா கோவிச்சுக்காதீங்க நண்பா.. ஜோதி போட்டோ வெளியிட்டா அவ புருஷன் கோவிச்சுக்க மாட்டாரா.. அதனால் அதான்..
மாத்தி யோசி said...
பாஸ்! நேரம் போச்சுது! இப்ப ஓட்டு பின்னாடி கமெண்டு ஓகே
.//
Thanks for commung
மங்குனி அமைச்சர் said...
good one .......nallaa irunthathu
//
அமைச்சரே நீங்க கதைய படிச்சீங்கன்னு நம்புறேன்...
karthikkumar said...
ஜோதி கதை அவ்ளோதானா மாம்ஸ்?? இவ்ளோ நாளா படிச்சிட்டு இப்போ திடீர்னு இப்படி முடிஞ்சு போச்சே :( பரவாயில்ல அதான் ஜெய ஸ்ரீ வந்துட்டாங்கல்ல :))
//
அடப்பாவி போன பதிவு வரைக்கும் எப்போ முடியுமுன்னு கேட்டுகிட்டு இப்ப வந்து இப்படி சொல்றியே... பரவாயில்ல அடுத்த ஆள் வந்தாச்சில்ல..
MANO நாஞ்சில் மனோ said...
ஜோதி போயி ஜெயஸ்ரீ வந்தாச்சு டும் டும் டும்.....
ம்ஹும் நம்ம பாடு கஷ்டந்தேன்.....
//
ஒண்ணும் பண்ண முடியாதுன்னே..
Arun Prasath said...
அடடா முடிஞ்சிருச்சா....
//
ஆச்சு.. ஆச்சு.. பயபுள்ள எப்படி சந்தோசப்படுது பாருங்க..
சே.குமார் said...
சிறப்பாக எழுதியதற்கு வாழ்த்துக்கள்.
//
மிக்க நன்றி
# கவிதை வீதி # சௌந்தர் said...
முடிச்சாச்சா..
அப்புறம்.. தீபா..(தீபம்)
எப்ப பாஸ்..
//
ஆகா புதுசு புதுசா கிளப்புறாங்களே...
யாதவன் said...
முழுதும் வாசித்தேன் அருமையிலும் அருமை யாதவன்
//
நன்றி நண்பரே..
சுசி said...
வாழ்த்துகள் ஜெயந்த்.. வித்தியாசமான முயற்சி.
//
மிக்க நன்றி சகோதரி...
அனு said...
ஜோதி நல்லா இண்ட்ரெஸ்ட்டிங்கா இருந்தது ஜெயந்த்.. எல்லா பாகங்களும் விறுவிறுப்பா போச்சு.. ஒரு வழியா சுபம் போட்டாச்சு..அடுத்து ஜெயஸ்ரீக்காக வெயிட்டிங்.. (கேரக்ட்டர்ஸ கம்மி பண்ணுங்கப்பா.. நியாபகம் வைக்க முடியல..)
//
பொறுமையாக படித்தமைக்கு மிக்க நன்றி அனு, இம்முறை செய்த தவறுகள் அடுத்த தடவை வராதபடி பார்க்கிறேன்...
நன்றி
vinu said...
sorry machchi ippothaan 3-4 naalaa konjooondu konjamea konjam busy; koovichchukkaatheengoo;
he he he he he he he
//
ஒண்ணும் பிரச்சனையில்ல மாமு...
அன்பின் வசந்த்
முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்,
நீங்கள் கூறிய விமர்சனமே கூறுகிறது தாங்கள் இக்கதையை எவ்வளவு ரசித்து படித்திருப்பீர்கள் என்று. நிறைகளை மட்டுமே கூறி வாழ்த்திவிட்டு செல்வதை விட குறைகளையும் நமக்கு கூறும் பொது அடுத்த படைப்புகளில் இது போன்ற தவறுகள் செய்யாமல் கவனமாக இருக்க முடியும். அதை தான் நீங்கள் கூறியிருக்கிறீர்கள் நண்பரே..
மிக்க நன்றி..
பட்டாபட்டி.... said...
அதுக்குள்ள முடிஞ்சுடுச்சா?..
ஊகூம்... இன்னும் 10 வருஷம் இழுத்திருக்கலாம்..ஹி..ஹி
//
இதில உள்குத்து எதுவும் இல்லையே ..
இந்திரா said...
என்ன முடிச்சிட்டீங்க????
மெகா தொடர் மாதிரி இன்னும் இழுத்திருக்கலாமே..
//
ஆகா அக்கா நீங்களுமா.. ஓகே ஓகே ..
வருகைக்கு மிக்க நன்றி சகோதரி..
வந்திட்டேன் ..
// காலம் போடும் கணக்கு என்றைக்கும் புரிவதில்லை. ஆனால் எல்லாவற்றிலும் அன்பு அடிப்படையாக இருந்ததை உணர்ந்தேன்.
//
அப்படிங்களா அண்ணா ? அது என்ன கணக்குப் போடும் ?
//நண்பா கதை நன்றாக முடிந்தது. நானும் தங்களுக்கு உதவினேன் என்பதே எனக்கு மிக்க மகிழ்ச்சி! இனியும் மென்மேலும் பல சிறப்பான படைப்புகளை உருவாக்கி சிறப்படைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
//
மிக்க மகிழ்ச்சி ..
//என்னது ஜெயஸ்ரீயா எங்கே, சொல்லவே இல்ல?//
ஹி ஹி ,, போங்க அண்ணா
///இன்னொரு வாட்டி டெரர் எழுதின படிக்கிற மாதிரி ஒரு சந்தர்ப்பம் வந்தா அந்த செகண்ட் நான் தற்கொலை பண்ணிப்பேன்.. நேத்தைக்கு ஒரு தடவை படிச்சதுக்கே நிக்காம போய்கிட்டிருக்கு.. யார் அவனையெல்லாம் பதிவெழுத சொல்றது... இப்ப பாருங்க அந்த பதிவ படிச்சதிலிருந்து ரேமஷை காணமாம்.. ஆளு எங்கே போனாருன்னே யாருக்கும் தெரியல...
///
உங்களை யாரு எழுத சொல்லுரான்களோ அவுங்கதான் .. ஹி ஹி
// சசிகுமார் said...
உங்க மேலே பயங்கர கோவத்தில் இருக்கேன் கடைசி பதிவிலாவது இந்த ஜோதியின் போட்டோவை போடுவீர்கள் என்று பார்த்தால் கடைசி வரை போடவே இல்லை.
/
ஹி ஹி .. ஹய்யோ ஹய்யோ .. இது உண்மை கதைன்னு நினைச்சிட்டீங்களா ?
// சௌந்தர் said...
சிறப்பாக கதை எழுதியதற்கு ...வாழ்த்துக்கள் மீண்டும் ஏதாவது தொடர் எழுதுங்கள்...
//
ஹி ஹி ஹி .. உனக்கு மனசாட்சி இருக்கா மச்சி ?
100
வென்றேன் வடையை!!!
ஜோதி முடிஞ்சி ஜெயஸ்ரீ start ஆகுதா ok ok sir
முதல் தடவையா இங்க வரேன். நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேங்க. உங்க வாழ்த்தையும் கருத்தையும் வரவேற்கிறேன் நண்பா.
எதிர்பார்ப்புடன் ஆவலாய்.... இந்த மழலை.
அடுத்த தொடருக்கு வாழ்த்துக்கள்...
ஸ் அப்பாடா ஒருவழியா முடிச்சுட்டீங்களா?
அடுத்த தொடருக்கு வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்..!
நலமா :) கதைய படிச்சிட்டு வரேன்..
அருமையாக நகர்த்தி முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்களும் நன்றிகளும்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..
இன்னைக்கு தான் படிக்காம விட்ட போஸ்ட் எல்லாம் சேத்து படிச்சேன்... ஜோதிய ஜோதி மயமா முடிச்சுட்டீங்க... சூப்பர்... எக்கசக்கமான characters வெச்சு ஒரு கதைய கையாள்றது எவ்ளோ கஷ்டம்னு அனுபவிச்சுருக்கேன்... நல்லா எழுதி இருக்கீங்க... நல்ல முடிவும் கூட... வாழ்த்துக்கள்...
ஓ...பொண்ணு பேரு "ஜெயஸ்ரீ" யா...நல்ல பெயர் பொருத்தம்... கல்யாணம் எப்போ? அதையும் சொல்லிடுங்க...:))
உங்கள் கதை அருமையாகவும் , விறுவிறுப்பாகவும் இருந்தது . வாழ்த்துக்கள்
உங்கள் கதை அருமை!
Post a Comment